நட்சத்திர பலன்கள் உண்மையா

நட்சத்திர பலன்கள் உண்மையா என் முதல் குழந்தை சித்திரை மாதம் பிறந்தாள். என் 2 வது குழந்தை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தான். உறவினர்கள் சித்திரை நட்சத்திரமும், சித்திரை மாதமும் அப்பாவுக்கு ஆகாது ஆதலால் நீங்கள் மிகவும் கஷ்டப்பட போகிறீர்கள் என்று பயமுறுத்துகிறார்கள். எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையென்றாலும் பிரச்சினைகள் ஏதாவது வரும்போது சித்திரை தான் காரணமோ என மனசு பதைபதைக்கிறது. எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பார்கள் . வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் எங்களுக்கு நட்சத்திரங்கள் குறுக்கே வருமோ என பயமாக உள்ளது. என் குழப்பம் தீர உதவுங்கள்.

//நட்சத்திர பலன்கள் உண்மையா// இதற்குப் பதில் சொல்லப் போவதில்லை.

//உறவினர்கள் சித்திரை நட்சத்திரமும், சித்திரை மாதமும் அப்பாவுக்கு ஆகாது ஆதலால் நீங்கள் மிகவும் கஷ்டப்பட போகிறீர்கள் என்று பயமுறுத்துகிறார்கள்.// இல்லைங்க. பயமுறுத்தல. அவங்க தாங்கள் நினைக்கிறதை சும்மா சொல்றாங்க. பயப்படுறது நீங்க. யாராலும் யாரையும் பயமுறுத்த முடியாது.

//எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையென்றாலும் பிரச்சினைகள் ஏதாவது வரும்போது சித்திரை தான் காரணமோ என மனசு பதைபதைக்கிறது.// :-) அப்போ... நம்புறீங்களா? :-) //எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பார்கள்// இந்த விஷயத்தில் உண்மை.

//வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் எங்களுக்கு நட்சத்திரங்கள் குறுக்கே வருமோ என பயமாக உள்ளது.// இல்லைங்க. உங்கள் தன்னம்பிக்கைக் குறைவு குறுக்கே வரும்.

//என் குழப்பம் தீர உதவுங்கள்.// ரிவர்ஸ்ல போங்க. எங்கே இந்த எண்ணம் உங்கள் மனதில் விதைக்கப்பட்டதோ அதற்கு முன் காலத்துக்குப் போங்க. 'நம்பிக்கை இல்லை,' என்கிற நம்பிக்கையை இறுகப் பிடிச்சுக்கங்க. நட்சத்திரம் சரியா இருக்கிறவங்களெல்லாம் பஞ்சு மெத்தையும் ராஜ வாழ்க்கையும் வாழுறாங்களான்னு யோசிச்சுப் பாருங்க.

இந்த எண்ணத்தில இருந்து நீங்க வெளியே வந்தாகணும்.

குழந்தை வேணும் என்று ஆசைப்பட்டுப் பெற்ற குழந்தைகள்; உங்க மிகப் பெரிய செல்வம் இவங்க இல்லையா? உங்கள் குழந்தைகளை விடவா மீதி முன்னேற்றம் பெரிது? என்ன பண்ணப் போறீங்க? குழந்தைகளைத் திரும்ப வயிற்றினுள் அனுப்பி இன்னொரு மாசம் கழிச்சு வெளிய வர வைக்க முடியுமா?

//வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் எங்களுக்கு// இதற்கு மேல் நீங்க ஏன் முன்னேற நினைக்கிறீங்க? உங்க குழந்தைகள் நாளை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே?

இன்னும் கொஞ்ச காலம் போக... நீங்க கவனமில்லாம இருந்தா, இப்பிடி ஒரு எண்ணம் உங்க மனசுல இருக்கிறது குழந்தைகளுக்குத் தெரிய வரலாம். ;(( அது அவங்க வளர்ச்சியைப் பாதிக்கும். கூடவே உங்க நிம்மதியையும் பாதிக்கும். அப்படி ஆகாம பார்த்துக்கங்க. ஆனால்தான் சித்திரைக் கதை உண்மையாகும்.

அப்படி ஆகாமலிருப்பது உங்க கைல தான் இருக்கு. நீங்க உறுதியா இருந்தால் மற்றவங்க உங்க மனசைக் கலைக்க முடியாது. இனி இந்தப் பேச்சை யார் எடுத்தாலும் உறுதியா ஆனால் தன்மையா, உங்க பிரச்சினைகளுக்குப் பசங்களைக் காரணமாப் பேசுறது சரியில்லை; அது உங்களைத் துக்கப் படுத்துது என்கிறதைச் சொல்லீருங்க.

இந்தப் பேச்சை இதோட விட்டுட்டு, முன்னேற என்ன செய்ய நினைக்கிறீங்களோ அதைப் பாருங்க. 'என்ன பிரச்சினை வந்தாலும் சாமாளிப்பேன்,' என்கிற நம்பிக்கை இருக்கணும். பசங்களோட சந்தோஷமா வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. சில வருடங்கள் கழிச்சு இந்தப் பேச்சை நினைச்சுப் பார்த்தா உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அம்மா தங்களின் பதில் மனதிற்கு ஆறுதல் தருகிறது. என்ன வந்தாலும் என் தன்னம்பிக்கையை இழக்க மாட்டேன் .

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

மேலும் சில பதிவுகள்