பாசப் போராட்டம்

தீர்வு தாருங்கள்
எனக்கு 4 மாத குழந்தை உள்ளது. அம்மா வீட்டில் உள்ளேன். என் குழந்தை என்னை விட என் அம்மா மேல் தான் பாசமாயிருக்கு. நான் கூப்பிட்டாலும்,கிராஸ் பண்ணி போனாலும் திரும்பியே பார்க்க மாட்டேங்குறாள். ஆனா அம்மா போனால் மட்டும் தலையை திருப்பி பார்க்கிறா. பால் மட்டும் என்கிட்ட குடிக்குது. ஆனா மற்றபடி சிரிப்பது, உங்கு சொுல்வது,அழாமல் இருப்பது எல்லாம் அம்மாவிடம் தான் . இவ்வளவு கஷ்்டப்பட்டு ஆசையா பெத்த பிள்ளை இப்படி என்னை கண்டுக்காம இருப்பது எனக்கு கஷ்டமாயிருக்கு . இருக்கும் ஏற்றாற்போல் என் அம்மா வும் இது என் பிள்ளை , உன்னை விட எனக்கு தான் பாசம் அதிகம், பிறந்தவுடன் என்னை தான் முதலில் பார்த்தது,நான் வளர்க்கிறேன்டா இன்றைய என்றும் சொல்லி வேதனையை கொடுக்கிறாள் . இரவில் பால் கொடுத்து அப்போது தான் தூங்குவேன். அம்மா நல்லா தூங்கிட்டு உடனே என்னை எழுப்பி விட்டுடும். என் தூக்கம் போயிடும் . இப்போதான் குடுத்தேன் என்றாலும் விடாது. பிள்ளையை எழுப்பி குடுக்க சொல்லும். இதனால் என் நிம்மதியே போயிடுச்சு. எல்லாருக்கும் இது மாதிரி தானா இல்ல எனக்கு மட்டுமா இல்ல நான் தான் தப்பா புரிந்து கொள்றேனா ஒன்றும் புரியல தயவுசெய்து தீர்வு தாருங்கள் தோழிகளே

இது பாச போராட்டமோ மறியல் போராட்டமோ கிடையாது.பயம் வேண்டாம்.
குழந்தை பிறந்த பின் சிலருக்கு ஹார்மோன் இம்பலன்ஸ் ஆல் இனம் புரியாத மன அழுத்தம் வரும்.ஏதாவது சின்ன விஷயத்தை பற்றிக்கொண்டு மிகப்பெரிய ரேஞ் ல் சிந்திப்பார்கள்.அடுத்தவர்கள் மீது வெறுப்பு வரும்

தற்காலிகமானதுதான்.அதாவது பிரம்மை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.நீங்கள் ஒரு கன்சல்டிங் போனால் நல்லது. .கடவுள் பக்தி இருந்தால் தியானம் செய்யுங்கள்.

குழந்தைக்கு ஆடைகள் செய்யுங்கள்.குழந்தை யின் பஸ்ட் க்றிஸ்மஸ் பேத்டே க்கு என்ன செய்யலாம் எப்படி செலிபரேட் பண்ணலாம் என்று ஜோசியுங்கள்.நல்ல பொழுது போக்குகளில் மனதை திசை திருப்புங்கள்

நிஜமான‌ பாசம் என்பது கொடுத்து வாங்குவது அல்ல‌ , நிங்கள் பாசம் காட்டினாள் பதிளுக்கு குழத்தை பாசம் காட்ட‌ வேண்டும் என்பது . உங்கள் அன்பை குரைவு இல்லாமள் அல்லிக் கொடுங்கள்.ஒரு விடயம் சொல்ல‌ விரும்புகிறேன் சகோதரியாக‌ நினைத்து , உங்கள் அம்மாவிடம் தானே குழத்தை பாசமக‌ உள்ளது , அம்மாவிடம் குழத்தை சமத்தாக‌ இருத்தால் உங்களுக்கு வேலை இலகுவாக‌ இல்லையா?அதை சித்தித்து பாருங்கள்.உங்கள் அம்மாவிடமும், குழத்தை இடமும் உங்கள் அன்பை காட்டுங்கள்.
அவர்கள் இருவரும் அன்பாய் இருபதை ரசித்து பாருங்கள்.நிங்களும் அவர்களிடம் அன்பு செலுத்துங்கள்,நிங்கள் எதிர் பார்ததை விட‌ அதிகமான‌ அன்பு உங்களை தேடி வரும்.

madam

you have to act some funny moments in front of your child on daily basis
you feel difference.

rahul

ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொருவர் நோக்கு வேறு. அதனால் பதில் வேறாக இருக்கும்.

//அம்மா வீட்டில் உள்ளேன். என் குழந்தை என்னை விட என் அம்மா மேல் தான் பாசமாயிருக்கு.// :-) அப்போ குழந்தையை முழுசா அம்மா தான் பராமரிக்கிறாங்க என்று நினைக்கிறேன்.

///நான் கூப்பிட்டாலும்,கிராஸ் பண்ணி போனாலும் திரும்பியே பார்க்க மாட்டேங்குறாள். ஆனா அம்மா போனால் மட்டும் தலையை திருப்பி பார்க்கிறா.// நீங்கள் குழந்தையின் முழுப் பொறுப்பையும் எடுப்பீர்களானால், குழந்தையோடு பேசி விளையாடுவீர்களானால் எல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்.

//பால் மட்டும் என்கிட்ட குடிக்குது.// ம்... ஒரு சந்தேகம்... மீதி நேரம் நீங்கள் குழந்தையை மடியில் போட்டுப் பேசுவீர்களா? ஒரு நாளில் எவ்வளவு நேரம் செலவளிப்பீர்கள்?

//இவ்வளவு கஷ்்டப்பட்டு ஆசையா பெத்த பிள்ளை இப்படி என்னை கண்டுக்காம இருப்பது// இந்த ஸ்டேட்மண்டே தப்பு கண்ணா. அதுக்கு என்ன தெரியும்? தன்னோடு அதிகம் அருகில் இருப்பவர் & பேசிச் சிரிப்பவர்களைத் தான் தேடும்.

//ஏற்றாற்போல் என் அம்மா வும் இது என் பிள்ளை , உன்னை விட எனக்கு தான் பாசம் அதிகம், பிறந்தவுடன் என்னை தான் முதலில் பார்த்தது,நான் வளர்க்கிறேன்டா இன்றைய என்றும் சொல்லி வேதனையை கொடுக்கிறாள்// :-) வேதனையைக் கொடுக்கவில்லை. நீங்களாகச் சேர்த்து வைச்சிருக்கீங்க. அவங்க சொன்ன வார்த்தையில்.... //நான் வளர்க்கிறேன்டா// பொய் என்று சொல்ல முடியுமா உங்களால்? நீங்கள் தான் வளர்க்கிறீர்கள் என்று சொல்ல இயலுமா? அப்படியானால் எந்தப் பிரச்சினையும் வந்திராது.

//இரவில் பால் கொடுத்து அப்போது தான் தூங்குவேன். அம்மா நல்லா தூங்கிட்டு உடனே என்னை எழுப்பி விட்டுடும். என் தூக்கம் போயிடும் . இப்போதான் குடுத்தேன் என்றாலும் விடாது. பிள்ளையை எழுப்பி குடுக்க சொல்லும். இதனால் என் நிம்மதியே போயிடுச்சு.// இந்தப் பகுதிக்கு சுரேஜினியின் பதிலைப் பாருங்கள்.

அவர் உங்கள் அம்மாதானே? உங்கள் மனதில் படுவதை மனம் திறந்து அவரிடம் பேசுங்கள். நிச்சயம் உங்களைப் புரிந்துகொள்வார். பிறகு நோவது போல் பேச மாட்டார். நீங்களும் அவரை 'அது இது'' என்று பேசுவதை விட வேண்டும்.

//எல்லாருக்கும் இது மாதிரி தானா// இல்லை.
//இல்ல எனக்கு மட்டுமா// அப்படியும் இல்ல்லை. இது போல் பிரச்சினை உள்ளவர்கள் இருக்கிறார்கள். இது பொதுவான விடயம் தான். மருத்துவரைக் கன்சல்ட் பண்ணுங்க. சரியாகிருவீங்க.

யோசிக்க வேணாம். ஈஸியா எடுங்க. இனிமேல் நீங்கள் அதிக நேரம் குழந்தையோடு இருக்கப் பாருங்க. நாளை அம்மா வீட்டிலிருந்து கிளம்பும் சமயம் குழந்தை உங்களோடு தனியே இருக்கப் பழகி இருக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

அன்புள்ள கார்த்திகா இது உனது முதல் குழந்தை என்று நினக்கிறேன்.
உனது நிலை ஒரு அழகான‌ பேசும் சிரிக்கும் பொம்மைக்கு உரிமை
கொண்டாடும் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.
நீ கருவுற்ற‌ போது உன் தாயார் தன் மகள் தன்னைப் போல் ஒரு தாயாகி
பெண்ணாய்ப் பிறந்ததின் பயனை அடைய‌ வேண்டும் என்று எவ்வளவு
தவம் இருந்திருப்பார்கள், உன் குழந்தை நன்றாக‌ வளர‌ வேண்டும் என்று
உன் தாயார் பார்த்துப் பார்த்து தன் தூக்கம் துறந்து நேரம் காலம் பாராமல் எவ்வளவு செய்திருப்பார்கள். சற்று சிந்தித்துப் பார். உன் தாயாருக்கு
பேரக் குழந்தையின் மேல் இருந்த‌ அன்பும் அக்கறையும் எவ்வளவு என்று
உன்னால் வார்த்தையால் சொல்ல‌ முடியுமா? மனதால் மட்டுமே உணரக்
கூடியது அது, பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள‌ அந்த‌ அதீதமான‌ அன்பை
ரசிக்கக் கற்றுக் கொள். நீ ஒரு ஆசிரியை. உன் மாணவி தன் பெற்றோர்
சொல்லைக் கேளாமல் உன் சொல்லுக்கு மட்டுமே மதிப்புக் கொடுப்பவளாக இருந்தால் அதை நீ பெருமையாகக் கருதுவாயா இல்லையா? தன் வகுப்பு மாணவி தன்னிடம் ஆசையாக‌ இல்லாமல்
வேறு ஒரு ஆசிரியையிடம் அன்பாக‌ இருப்பது கண்டு பொறாமைப் படலாமா? (படுவதும் உண்டு( சிலர்) இல்லையென்று சொல்ல‌ முடியாது.)
பள்ளிக்கூட‌ நேரம் தவிர‌ எவ்வளவு நேரம் நீ உன் குழந்தையோடு
செலவிடுகின்றாய்? குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிப் பேசுகிறாயா? இன்றைக்கு உன் அம்மாவையே குழந்தை தேடுகிறது
என்கிறாயே நாளைக்கு நீ வேலைக்கு மீண்டும் போகும் போது உன் குழந்தையை யாரிடம் விட்டுச் செல்வாய்? உன் குழந்தையின் உணர்வையும் மனதையும் புரிந்து கொண்டு வளர்ப்பவர்கள் உன் தாயைத்
தவிர‌ வேறு யார் இருக்க‌ முடியும் சற்றே யோசித்துப் பார்.
உன் குழந்தைக்கு உன் அணைப்பு தேவை என்பதை உணர்த்தும் உன்
தாயின் செய்கை உனக்குத் தொல்லையாக தெரிகிறது (அதனால் தான்
உன் தாயார் உன்னை இரவில் எழுப்பி விடுகிறார்கள்.) நான் வளர்க்கிறேன் என்று தானே சொன்னார்கள்.தப்பில்லையே. உன் தாயின்
துணையின்றி உன்னால் உன் குழந்தையை வளர்க்க‌ முடியுமா?
முதலில் ஒழுங்காகத் தூக்கத் தெரியுமா? குளிப்பாட்டுவாயா? தன் மேல்
படும் கையின் சூடு கண்டே பிறந்த‌ குழந்தை தன்னைத் தொடுவது தன் தாயா அல்லது வேறு யாரோவா என்று உணர்ந்து அதற்குத் தகுந்தாற் போல் தன் உணர்வுகளை மாற்றிக் கொள்ளும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
முடிவாக‌ ஒன்று உன் தாயார் உன் மகளில் உன்னைத் தான் உன் குழந்தைப் பருவத்தைத் தான் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

தங்கள் பதிலுக்கு நன்றி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. முயற்சிக்கிறேன்.குளிப்பாட்டவும்,தூக்கவும் தெரியும். கொஞ்சி பேசுகிறேன் ஆனாலும் என்னை தேட மாட்டேங்கிறாள்.

very thanks neenga sonna mathiri first en amma than babyai kavanichanga. but eppo nan than ellam seikiren. naal fulla nan than konjuven. enimel babyai ethai vidavum nalla parthukuren.

இப்போ தானேபா 4மாசம் பாப்பாக்கு, 3ம் மாசம் தான் முகமே பார்க்கும்னு சொல்வாங்க. கவலபடாதீங்க, என்னைக்குமே அம்மா அம்மாதான்.

நீங்க சந்தோஷம்தான்படனும், நம்ம அம்மா நம்ம பாப்பாவ இவ்ளோ பார்த்துக்குற்ங்களேன்னு.

இப்போ தெரியாதுடா கஷ்டம், 5மாசத்துக்கு அப்புறம்... உங்க வீட்டுக்கோ மாமியார் வீட்டுக்கோ போவீங்கள்ல? அப்போ பாப்பாவும் பாக்கனும் வீட்டு வேலையும் இருக்கும். அப்போ நினைப்பீங்க அம்மா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு.

அப்பவும் நமக்காக feel, pray பண்றவ நம்ம அம்மாதான்.

இந்த நாட்கள ரெஸ்ட் எடுத்துக்கிட்டே என்ஜாய் பண்ணுங்கபா.வாழ்த்துக்கள்.

thank u poorani unga reply enaku reliefa eruku . ethu pola ungaluku nadanthathu unda?

இது போல நடந்தது இல்ல, ஆனா வேற தப்பு பண்ணி,பிறகு பாடம் படிச்சேன்.

பாப்பாவ நானே தூக்கிக்கனும்,பாத்துக்கனும்னு நெனச்சு... பிறகு கொஞ்சம் நாட்கள் யாரிடமும் போகாமல் அழ ஆரம்பித்தாள். என்னையே கூப்பிடுவா. வேலையும் இருக்கும், இவளும் தூக்க சொல்லுவா.... கஷ்டமா இருந்துச்சுபா.

பாப்பாவ வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் பழக விடனும், இல்லைனா help பண்ண ஆள் இருந்தாலும், உதவ முடியாம போயிரும்.இது நான் கத்துகிட்டது.

மேலும் சில பதிவுகள்