period after delivery

enaku delivery mudinchu 5 month aaguthu. but innum period varala . feeding pantren. vayiru romba thonguthu . in skirt,belt kattalama? marriage munbu 65 kg erunthen. conceive aanathum 78 kg . after delivery 73 kg . baby weight 3.2 kg . cessation than.vayiril kodu kodu eruku. ethai pokka valid sollunga.copper T use pannalama? ethai entha monthla vaikkalam.

//but innum period varala . feeding pantren.// வராமலிருந்தாலும் நீங்கள் கர்ப்பமாகலாம். கவனமாக இருங்க. //copper T use pannalama?// பண்ணலாம். //entha monthla vaikkalam.// நீங்கள் முன்பே ப்ளான் செய்திருந்தால் சீ செக்க்ஷன் செய்த சமயமே செய்திருக்கலாம். இப்போ 5 மாதம் என்றால், எப்போ வேண்டுமானாலும் வைக்கலாம். தாமதிக்காமல் உங்கள் மருத்துவரோடு பேசுங்கள். காப்பர் டீ வைக்கும் வரை மறக்காமல் வேறு ஏதாவது ஒரு கருத்தடை முறையைப் பின்பற்றுங்கள்.

//in skirt,belt kattalama?// பெல்ட் என்று எதை நினைத்து எழுதி இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. பெல்ட் அகலமாக இருக்க வேண்டும். Tummy tuck belt என்று கூகுள் இமேஜஸில் தேடிப் பாருங்கள், புரியும்.

ஸ்கர்ட் என்று என்ன விதமான ஸ்கர்ட்டைக் கேட்கிறீர்கள்? வேலைக்குப் போவதற்காகக் கேட்கிறீர்களா? சேலைக்கான அண்டர் ஸ்கர்ட்டின் உள்ளே கட்டுவது - அனேகம் பெல்ட் வெளியே தெரியும். மிடி ஸ்கர்ட் போல என்றால் அணியலாமே. ஏன் சுடிதார் அணியும் போது கூட பெல்ட் அணியலாம்.

//cessation than.vayiril kodu kodu eruku.// சீ செக்க்ஷன் இல்லாமல் பிரசவித்திருந்தாலும் கோடுகள் வந்திருக்கும். ஆலிவ் ஆயில் அல்லது Bio oil பூசி மசாஜ் பண்ணலாம். இப்போதே ஆரம்பியுங்கள். மாற்றம் தெரிய பொறுமையோடு சில மாதங்கள், ஏன் பல மாதங்கள் கூட காத்திருக்க வேண்டி வரலாம். முழுவதாக இல்லாமல் போக வைப்பது சிரமம். ஆனால் குறையும்.

தமிழில் தட்டுகிறீர்கள். கவனித்தேன். மிக்க நன்றி. விட்டுவிடாமல் தொடர வேண்டுகிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்