1 month baby crying before going urine,motion

Hello friends, I got a boy baby, 40 days aagudhu. Breastfeeding panren. Bt thaipaal pathala.formula milk tharen. Motion, urine poran,before urinating romba mukkuran, some time aluvuran.Sali problem iruku, so doctor advice not to bath often. If I use any oil, cold vandhudum. Vera any solutions. Please Sollunga.

Water kudukalama. How much can give, before going urine, romba mukkuran,5 mins after only going urine, romba aluvuran please help me.

அன்புள்ள‌ கீர்த்திக்கு, நீங்கள் எந்த‌ ஊரில் இருக்கிறீர்கள் என்று தெரியாமல் என்ன‌ மருந்து சொல்வது. இது குறித்து காரணத்தையும்
எழுதியுள்ளேன். சரி வசம்பு வாங்கி அதை நல்ல‌ விளக்கில் காட்டினால்
தீப்பற்றி எரியும். அதை நன்கு எரிய‌ விட்டு கரியாக்குங்கள். அது எரிந்து
கரியான‌ பின் தண்ணீர் ஊற்றாமல் அணைத்து வைத்துக் கொள்ளவும்.
கரிக்குச்சியாக‌ இருக்கும். அதை சந்தனக் கல் அல்லது மருந்து உரைக்கும்
கல் தற்போது கடைகளில் கிடைக்கிறது, துளித் துளியாக‌ வெந்நீர் விட்டு
உரைத்தால் நைசான‌ விழுதாகக் கிடைக்கும், அதை வழித்து குழந்தையின் தொப்புளைச் சுற்றியும் தொடர்ந்து அடிவயிற்று முழுவதும்
நன்றாகத் தடவி விடவும். இரண்டு மூன்று முறை தடவவும், பிறகு சரியாகும். வசம்பின் மறுபெயர்கள் பிள்ளைவளர்த்தி, பெயர் சொல்லாதது, மிக‌ உயர்ந்த‌ பிள்ளை வளர்க்கும் மருந்து. விள்க்கெண்ணெயை வெற்றிலையில் தடவி நல்ல‌ விளக்கில் சூடு காட்டி
நன்கு ஆறின‌ பின் குழந்தையின் அடி வயிற்றில் எண்ணெய் உள்ள‌
பக்கத்தினை வயிற்றில் மேல் ஒட்டி விடுங்கள், சூடே இருக்கக் கூடாது.
நன்கு ஆற‌ வேண்டும். ஒரு வேளை போதும். உங்கள் உணவையும்
கவனிக்கவும். உங்கள் உணவு முறைதான் தற்போது குழந்தையையும்
பாதிக்கும். இது குறித்த‌ பதிவுகளை குழந்தைகள் தலைப்பில் பார்.
ஃப்ரொபைலில் ஊர் குறித்த‌ விவரம் தராவிட்டால் என்னால் பதில் தர‌ முடியாது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நீங்க‌ சொல்கிற‌ மருத்துவ‌ குறிப்பு மிகவும் அனுபவம் வாய்ந்ததா இருக்கு இன்னும் நிறைய‌ குறிப்பு கொடுங்க‌ வாழ்த்துக்கள்

எல்லாம் நன்மைக்கே

I am in Chennai. Kandipa follow panren. Romba romba thanks madam.

Ennoda kulanthaiku 1.5 months aagudihu.. Chennai la irukom.before going urine, motion, gas romba mukkuran. Then only going urine, gas, motion. Mukkum podhu Vayiru uppi kallu mari aagudhu.thoongum podhu ipad vandha aluthukite Mulichukuran. .then not sleeping.Sali problem iruku. Neer kanai nu solranga neighbors.. Nenga sonna mari vasambu treatment paniten. Again ipad than panran. please Enaku help panunga amma

Ennoda kulanthaiku 1.5 months aagudihu.. Chennai la irukom.before going urine, motion, gas romba mukkuran. Then only going urine, gas, motion. Mukkum podhu Vayiru uppi kallu mari aagudhu.thoongum podhu ipad vandha aluthukite Mulichukuran. .then not sleeping.Sali problem iruku. Neer kanai nu solranga neighbors.. Nenga sonna mari vasambu treatment paniten. Again ipad than panran. please Enaku help panunga amma

அன்புள்ள‌ கீர்த்திக்கு, 45 நாள் குழந்தைக்கு பால் போதவில்லை என்பது?
பால் ஊறுவதற்கான‌ உணவு வகைகளை நிறைய‌ சாப்பிடவேண்டும்,
பூண்டு முக்கியம். அதற்கான‌ குறிப்புக்கள் அறுசுவையில் உள்ளன. உன்
உணவு முறையில் மாற்றம் வேண்டும். அதிக‌ வாய்வு உணவுகள் தவிர்.
குழந்தை பசித்து அழும் நேரம் அறிந்து சற்று முன்னதாகவே பாலைத் தயாராக‌ வைத்திருக்க‌ வேண்டும். அழவிட்டால் காற்று வயிற்றில் சேர்ந்து
விடும். பாலோடு சேர்த்து காற்றைக் குடித்தாலும் தொல்லைதான். வயிறு
ஊதும். மலத்தை வெளித்தள்ளும் செயலுக்கு வயிற்றில் சேரும் வாயுவும்
ஒரு வகையில் உதவுகிறது என்கிறார்கள் சித்தா ஆயுர்வேத‌ மருத்துவர்கள்
அது அளவுக்கு மீறினால் தான் தொல்லை. நாட்டு மருந்து கடைகளில்
பிரசவலேகியம் கிடைக்கும். (டாம்கால், டாபர் ப்ராண்டுகளும்). அதை
வாங்கி அதில் சொல்லி உள்ளபடி சாப்பிடவும், எல்லாப் பிரச்சனைகளும்
தீரும். வெற்றிலை போடுவது மிகவும் சிறந்த‌ பழக்கம். நாகரிகம் என்று
அந்தப் பழக்கத்தை அறவே விட்டது தான் இந்த‌ சிக்கல்களுக்குக் காரணம்
இந்தத் தொகுப்பிலேயே இது குறித்து நிறையப் பதிவுகள் உள்ளன‌.
அவற்றை நிதானமாகப் படித்துப் பார்க்கவும் குறிப்பு எடுத்துக் கொள்ளவும்
தமிழில் பதிவிட்டால் மிகவும் மகிழ்ச்சியாக‌ இருக்கும், சீக்கிரம் புரியும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Ungaludaya tips ku nandri amma. From yesterday evening loose motion aagudhu.. Waterya white ah thiri thiriya iruku. Paal kudithathum 5 mins la urine, motion poiduran.Romba mukki kasta pattu than poran.Vayiru uppisama iruku. Avanala thoongave mudiyala. Romba Kastama iruku. Daily poondu sapduren. Enna pananum. Please help me.

Please yaravathu reply panunga. En payyan romba kasta paduran.thoongave matengran. Please help me

அன்புள்ள‌ கீர்த்திக்கு உன் பதிவைப் பார்க்கத் தவறி விட்டேன். மன்னிக்க‌.
ஓமத்தைக் கருக‌ வறுத்துப் பொடித்து சிட்டிகை அளவு தேனில் குழைத்து
குழந்தையின் நாக்கில் தடவி விழுங்கவை. அல்லது ஓமப்பொடி+தேன்+கொஞ்சம் சுடுதண்ணீர் கலந்து பாலாடையில் ஊற்றி குழந்தைக்குப்
புகட்டி விடு(குடிக்கவை) அதிக‌ உஷ்ணமாக‌ இருக்கும், தண்ணீர், பால்
இவற்றில் வைரஸ் கிருமிகள் இருந்தாலும் இவ்வாறு ஆகும். ஒரு நாளைக்கு
மூன்று முறை தாராளமாகத் தரலாம்.
இதைத் தவிர‌ கொதிக்கும் நீரில் ஓமம் + சீரகம் இரண்டையும் போட்டு
நன்கு கொதிக்கவைத்து அந்தத் தண்ணீரையே நீ குடிப்பதற்கு வைத்துக் கொள். உன் பாலின் மூலமும் பாப்பாவுக்கு வயிறு சரியாக‌ வேண்டும்.
மனதில் வீணான‌ பயம் வேண்டாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்