4 months baby

என்னுடைய குழந்தைக்கு 4 மாதம் முடிந்துள்ளது..அவள் பிறந்த 3 மாதம் வரைக்கும் தாய்ப்பால் மட்டும் தான் குடுத்தேன்...அவள் பிறந்த எடையில் இருந்து இது வரைக்கும் 1 கிலோ மட்டுமே கூடி இருக்கிறாள்...3 மாததிற்கு பிறகு எடை கூட டாக்டர் formula milk கேட்டு வாங்கினேன்..ஆனால் அவள் அதை குடிக்கவே மாட்டேங்கிறாள்...அழுதுட்டே குடிக்கிறாள்...திரும்ப உடனே வாந்தி எடுக்கிறாள்...அவளுக்கு formula milk பிடிக்கவே இல்ல...அவளுடைய எடை அதிகரிக்க வழி கூறுங்கள்...formula start பண்ணி 1 மாதம் ஆக போகுது இன்னும் பழக மாட்டேங்கிறாள்..ரொம்ப ஒல்லியா இருக்கா...கேட்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல...

//ரொம்ப ஒல்லியா இருக்கா.// குழந்தை ஆரோக்கியமாக, துருதுருப்பாக இருந்தால் ஒல்லியாக இருப்பதைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை.

4 மாதம் - இனி மெதுவே திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். முட்டை சேர்த்து மில்க் புட்டிங் போல செய்து கொடுக்கலாம். சாதம் அல்லது கிழங்கு பிசைந்து கொஞ்சமாக ஊட்டலாம். ட்ரை பண்ணிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

இதுவரை ஒரு கிலோ மட்டுமே கூடியிருக்காங்க என்றால் நீங்க ஹெல்த்தியா சாப்பிடுங்க...
பார்முலா மில்க் கொடுத்தால் எடை கூடும்னு யார் சொன்னது? டாக்டர் சொன்னாங்களா?? எனக்கு தெரிந்து தாய்ப்பாலை விட ஹெல்த்தி வேற எதுவும் இல்லை.. 3 மாதம் வரை தாய்ப்பால் கொடுத்திட்டு திடீர் னு பார்முலா மில்க் கொடுக்கவும் குழந்தைக்கு பிடிக்கலை/ஒத்துக் கொள்ளவில்லை.. நீங்க ஹெல்த்தியா சாப்பிட்டு குழந்தையை கவனிங்க..
4 மாதம் முடியும் வரை குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எதுவும் தேவையில்லை.. கொடுக்கவும் கூடாது.. 5 மாதம் ஆரம்பிக்கவும் பிஸ்கட்ஸ் கொடுக்கலாம்.. முதலில் அரை மில்க் பிஸ்கட் கொடுத்து ஆரம்பக்கணும்.. 5 மாதம் வரை குழந்தைக்கு எடை கூட நாமளாக எதுவும் செய்ய முடியாது..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

// கொடுக்கவும் கூடாது.// :-) கொடுக்கக் கூடாது என்று இல்லை. நாம் கொடுப்பதில்லை. (குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் கொடுக்கக் கூடாது தான்.) எம்மவர் கூடாது என்றே ஆக்கி விட்டோமே தவிர, ஆகாது என்பது இல்லை.

என் குறைமாதக் குழந்தைக்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் 3ம் மாதம் திட உணவு கொடுத்தேன். (இப்போது அல்ல, 27 வருடங்கள் முன்பாகவே.) ஆலோசனை கொடுத்த மருத்துவர் - போதனாவைத்தியசாலை ஒன்றில் குழந்தைகள் சிறப்புப் பிரிவில் ப்ரொஃபெசராக இருந்தார். உணவு மட்டுமல்லாமல் தடுப்பு ஊசிகளும் ஒரு மாதம் முன்பாகவே கொடுக்க வைத்தார்.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா,அபி ரொம்ப நன்றி.... நல்ல active a இருக்கா...டாக்டரும் எடை இன்னும் அதிகரிக்கனும் சொல்லுராங்க.. என் குழந்தைக்கு எடை அதிகரிக்க நான் என்ன மாதிரியான உணவு எடுத்துக்கனும்...பிறந்த போது நல்ல எடை இருந்தாள்... நான் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்கனும்னு இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து என்னை ரொம்ப குழப்புராங்க...

எல்லாம் நன்மைக்கே

En kulanthaiku ipoluthu 10maatham agirathu, 6maatham varai thaaipaal thavira yethum kuduka villai. Neengal sathu maavu il cool mathiri sirithu salt serthu kindi ooti paarungal... Parupu vegavaitha thaneer kodungal, yethu koduthalum thaai paalai kulanthai alugum pothu mattum kodukamal adikadi kodungal.

//6 மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்கனும்// நீங்க தாய்ப்பால் அதை விட அதிகமான காலம் கொடுக்கலாம். ஆனால் தனியே தாய்ப்பால் மட்டும் கொடுப்பது குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாமலிருக்கும்.

//என் குழந்தைக்கு எடை அதிகரிக்க நான் என்ன மாதிரியான உணவு எடுத்துக்கனும்.// நீங்கள் சாப்பிடும் மருந்துகள் & உங்கள் ஹோர்மோன்கள் சில, பால் மூலம் குழந்தைக்குக் கடத்தப்படுவது உண்டு தான். ஆனால், நீங்கள் சாப்பிடும் உணவு, பாலின் சத்துக்கள அதிகரிக்க வைப்பது இல்லை. நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் எடையைக் கூட்டலாம். சில உணவுகள் பால் சுரப்பை அதிகரிக்கும். அவற்றை வேண்டுமானால் முயற்சி செய்து பார்க்கலாம். இங்கு அது பற்றிய இழைகள் இருக்கின்றன. தேடிப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்