abortion

yesterday 2 month but scan la 2 month valarchi ellayam so abortion ayidumnu Dr sollidanka.brown colour paddu now blood paduthu. 3 years kalithu uruvanathu athuvum poyidu. Allah ku en kulanthai mela pasam kooda athan 2 thadavaium aduthiddan.

அமைதியா இருங்க. எல்லாம் நல்லதுக்குத் தான். இதையே நினைச்சுட்டு இருக்காதீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கிற போது... ப்ரே பண்ணுங்க. மீதி நேரம் ஏதாவது வேலை பாருங்க. வேலைகள் இல்லாத போது மனம் இதையே நினைத்து வருந்தும். டாக்டர் சொல்றபடி கேளுங்க. நிச்சயம் அடுத்த தடவை எல்லாம் சரியாக இருக்கும். நம்பிக்கையோடு இருங்க. நல்லா சாப்பிடுங்க.

‍- இமா க்றிஸ்

அந்த‌ காலத்தில் இருந்தவர்கள் யாருக்கும் இது போல‌ குழந்தை இதய‌ துடிப்பு நின்றது இல்லை,மூளைவளர்சி குறை இல்லை, குழந்தை பேரு கிடைக்காதவர்கள் இல்லை(இருந்தனர் ஏதேனும் ஒருவர் மட்டும்),முத்துபிள்ளை கர்பம் இல்லை.நீர்கட்டி இல்லை, தைராய்டு இல்லை,கருகுழாய் அடைப்பு இல்லை,ஆனா இப்போ இருக்கிற எங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை நோய்கள் வருது. நம் உணவுகளில் கலப்படம் என்றால் அதுதானே கடையில் விற்கிறாங்க‌ அப்போ என்ன செய்வது, நாமே தோட்டம் போடலாம்னா இது எல்லார்கும் சாத்தியமான விசயம் இல்லையே,அதை பராமறிக்க‌ நேரமும் இல்லை,எங்களுக்கே இந்த நிலமை இனி வரும் காலங்கள்,வரும் தலைமுறையினர்கள் என்ன‌ செய்வது, உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவி என்ற நிலை வரபோகிறதோ என‌ பயமாக‌ இருக்கு

எல்லாம் நன்மைக்கே

கவலை படாதீங்க‌ தோழி, எனக்கும் உங்களை போல்தான் குழந்தை வளர்சி இல்லைனு 3மாதத்தில் அபாஷன் செய்துட்டாங்க‌,அப்போ நானும் என் கணவரும் உங்களை போல்தான் அழுதோம்,என்னை விட‌ என் கணவர் மிகவும் வருத்தபட்டார்,(திருமணம் முடிந்து 4வருசத்திற்கு பின்னால் உருவானது) அதற்கு என் மருத்துவர் என் கணவரை அழைத்து ஏன் இப்படி அழறீங்க‌ உங்களுக்காவது 3மாதம், இன்னொரு பெண் 7மாத குழந்தைக்கு இதயதுடிப்பு இல்லாம‌ அபாஷன் பன்ன‌ வந்து இருக்காங்க‌, அவங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும், அதற்கு இது பறவாஇல்லை, 7 மாதம் 9 மாதம் வரும் பொழுது குழந்தை அசைவை உணரமுடியும், அப்படி இருக்கும் பொழுது நாம‌ அதுகூட‌ வாழவே ஆரம்பித்துடுவோம், அப்போ அதற்கு எதாவது ஆனாலோ,குழந்தை பிறக்கும் போது வளர்சி குறை பிறந்தாலோ, நமக்கு இன்னும் வருத்தமா இருக்கும், அந்த‌ வருத்தம் வேண்டாம்னுதான் கடவுள் இதை செய்து இருக்கார் நினைங்கனு சொன்னாங்க‌,அதுவும் இல்லாமல் உன் மனைவிக்கு ஒன்னும் 60வயது ஆகலை அவ‌ இன்னும் உனக்கு 10குழந்தை கூட‌ பெற்றுதருவாள்,அவளுக்கு ஒருமுறை கர்பம் நின்றால் அடுத்து கண்டிப்பா நிற்கும் சொன்னாங்க என் மருத்துவர் பேசியபின் இருவரும் ரிலாக்ஸ் ஆனோம்,

நீங்களும் வருத்த‌ படாதீங்க‌ எல்லாமே நல்லதுக்கு நினைத்துகோங்க‌,மருத்துவர் சொன்னமாதிரி, பிறந்தற்கு பின் வளர்சி குறைவா இருந்தா நம்மோடு சேர்து நம் குழந்தையும் வருத்தபடும்,அதானால மனச‌ வருத்தபடாம‌ போய் மருத்துவர் சொன்னதை செய்ங்க‌, அடுத்து சீக்கரமா உங்களுக்கும்,எனக்கும் ஆரோக்கியமான‌ குழந்தை பிறகும் தோழி, எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்களும் நம்பிக்கையோட‌ இருங்க‌ சகோதரி

எல்லாம் நன்மைக்கே

thank you. unkada varthaikal aruthala erukku. thanks
d&c seiyanuma? Dr sonnar period mathiri varumnu tablet athuvum tharalla 1 week kalithu tvscan parkalamnu sonnanka.unkada advice athirparkiran.

//அந்த‌ காலத்தில் இருந்தவர்கள் யாருக்கும் இது போல‌ குழந்தை இதய‌ துடிப்பு நின்றது இல்லை,// உங்களுக்கு எப்படித் தெரியும்? 'யாருக்கும்' என்றால் 100% என்று அர்த்தம். இருந்திருக்கிறது. உங்களுக்குத் தெரியவரவில்லை. இன்ன காரணம் என்று தெரிய வந்திராது. ஒட்டுமொத்தமாக எல்லா இழப்புகளுக்கும், 'குழந்தை கலைந்து போயிற்று,' என்னும் ஒரு பெயர் தான் இருந்திருக்கும்.

//மூளைவளர்ச்சி குறை இல்லை,// இல்லையே! மனதிற்குள் எண்ணிப் பார்க்கிறேன். நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன். நான் குழந்தையாக இருந்த பொழுது, என் வயதொத்த பையன் எங்கள் அயல் வீட்டில் இருந்தார். பாடசாலையில் கூடப் பார்த்திருப்போம். இரண்டு மூன்று வருடம் வயது அதிகமான குழந்தைகள் ஃபெய்லாகி ஃபெய்லாகி பொருத்தமில்லாமல் ஒரு வகுப்பில் இருப்பார்கள். வீட்டார் கைவிட்டு நிறையப் பேரைத் தெருவிலேயே பார்த்திருக்கிறோமே!

நிறையப் பேர் நினைவுக்கு வருகிறார்கள். தனி மனிதர்களாகச் சிலர் இருந்தார்கள் என் ஊரில். பேச வராது. எப்பொழுதும் சந்தோஷச் சிரிப்புச் சிரிப்புச் சிரித்தபடி, மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் மனிதர்கள் அவர்கள். வயிற்றை நிரப்பவென்று வீடு வீடாக மா இடித்து, விறகு வெட்டி... என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் கிடைத்தவற்றைக் கொண்டு வயிற்றை நிரப்பி... பெயர் கூட இருந்திராது. ;(

//வீட்டா குழந்தை பேரு கிடைக்காதவர்கள் இல்லை(இருந்தனர் ஏதேனும் ஒருவர் மட்டும்),// இல்லைங்க. எங்கள் ஊரில் பலர் இருந்தார்கள். என்னை வளர்த்த பெத்தாவுக்குக் குழந்தை இருக்கவில்லை. மீதி ஆட்களைப் பற்றிக் குறிப்பிட்டால்... படிக்கும் என் ஊரார் புரிந்துகொள்வார்கள். எனவே சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.

//முத்துபிள்ளை கர்பம் இல்லை.// நிச்சயம் இருந்திருக்கு. இது சமீபத்தில் உருவான வார்த்தையாகத் தெரியவில்லை. பழைய தமிழ் வார்த்தை. அரிதாகவேனும், முன்பே இந்தப் பிரச்சினை தமிழர் மத்தியில் இருந்துதான் இருக்கிறது.

//நீர்கட்டி இல்லை,// அந்தக் காலம் என்று எந்தக் காலத்தைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. 30 வருடங்களுக்கு முன் இது இருக்கலாம் என்று ஒரு தடவை எனக்குச் சொல்லப்பட்டது.

//தைராய்டு இல்லை,// ம்ஹ்ம்! நிறையவே இருந்திருக்கிறது. அப்போ பெயர் வேறு. கண்டமாலை, கழலை என்றெல்லாம் பெயர் சொல்வார்கள். கழுத்தில் வளர்ச்சி பெரிதாக ஆரம்பித்த பின் தெரியும். சர்ஜரிக்குப் போகச் சொல்வார்கள்; மீன் சாப்பிடச் சொல்வார்கள். சர்ஜரிக்குப் போகாமல் பயந்து அப்படியே பெருங்கழுத்தோடு சீவித்தவர்கள் இருக்கிறார்கள். இப்போ சர்ஜரி பயம் குறைந்துவிட்டது. மாத்திரைகள் பற்றிய பயம் குறைந்திருக்கிறது. என் உறவில் ஒருவர் அளவுக்கு மீறிய பருமன், முகம் & கை கால் வீக்கம் என்று சிரமப்பட்டார். பிரச்சினை இது தான் என்று அறிந்துகொள்ளப் பல காலம் ஆயிற்று.

//கருகுழாய் அடைப்பு இல்லை,// இருந்திருக்கலாம். தெரியவந்திராது.

//ஆனா இப்போ இருக்கிற எங்களுக்கு மட்டும்// இல்லை.. முன்பு இருந்தவர்களுக்கும் இருந்திருக்கிறது. இப்போ கொஞ்சம் அதிகமாகத் தெரிவதற்கு ஒரு காரணம்... மீடியா. முன்பு... பத்திரிகையில் வந்தால்தான் உண்டு. மற்றப்படி தெரிய வருவது இல்லை அல்லவா? இப்போ நெட் இருக்கிறது. அதிகமாகத் தெரிய இன்னொரு காரணம்... உலக சனத்தொகைப் பெருக்கம். அடுத்தது... இப்போ உள்ளவர்களுக்கு பரிசோதிக்கும் வாய்ப்பு, வசதி அதிகமாக இருக்கிறது. முன்பு அது குறைவு.

//ஏன் இத்தனை நோய்கள் வருது.// காரணங்கள் சில இருக்கின்றன தான். அதே சமயம்... முன்பை விட இப்போ உள்ளவர்கள் ஆயுள் அதிகரித்திருக்கிறது இல்லையா? முன்பு மனிதர் இறந்த போது முதுமை என்றோம்..... 50 வயதாக இருந்தாலூம் கூட. இன்று அதெல்லாம் ஒரு வயதே இல்லை என்று ஆகிவிட்டது.

என் அம்மா அவரது குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாம். முதல் குழந்தை நிறை மாதத்தில் இறந்து பிறந்ததாம்; இரண்டாவது பிறந்ததும் இறந்ததாம். காலைக் குழந்தை மேல் போட்டதால் இறந்ததாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். என் அம்மா பிறந்த சமயம் தாயின் கால்களைக் கட்டிப் போட்டிருந்தார்களாம். குழந்தையை வைக்கோலின் மேல் போட்டு வைத்திருந்தார்களாம். எனக்கு என் பாட்டியைத் தெரியாது. அவர் 40 வயதிற்கு மேல் இருக்கவில்லை. அப்போ அது வயதான வயது. இருக்கிற ஒரேயொரு புகைப்படத்திலும் வயதான தோற்றத்தில் தான் இருக்கிறார். :-) எல்லோரும் என்னை என் பாட்டி போலிருக்கிறேன் என்பார்கள். அவர் மிகவும் குள்ளமாக இருந்திருக்கிறார். :-) அவருக்குக் கிடைக்காத நல்ல மருத்துவப் பராமரிப்பு எனக்குக் கிடைத்தது. எனக்குப் பிரச்சினையான போதும் குழந்தைகளுக்குப் பிரச்சினை ஆன போதும் இறந்தது போக மீதி அனைவரையும் தப்ப வைத்துவிட்டார்கள். "முன்பெல்லாம் இப்படி இல்லை. இவருக்கு மட்டும் என்ன நூதனமான வருத்தம்?" என்று என் காதுபடப் பேசிக் கேட்டிருக்கிறேன். உண்மையான நிலை... முன்பென்றால் இவை போன்றவையெல்லாம் பிரசவத்தில் மரிக்கும் எண்ணிக்கைக்குள் அடங்கியிருக்கும்.

என் அத்தை ஒருவருக்கு ஐம்பதுகளின் நடுப்பகுதியில் சர்ஜரி ஒன்று நடந்தது. அதன் பின்விளைவு - குழந்தை கிடைக்கவில்லை. உறவில் இருவரைத் தத்தெடுத்து வளர்த்தார்.

அப்போதே மணமாகிப் பதினைந்து வருடம் கழித்துக் குழந்தை உண்டானவர்களும் இருந்துதான் இருக்கிறார்கள்.

முன்பை விட இப்போது பிரசவத்தின் போது மரணிக்கும் தாய்மார், குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.

‍- இமா க்றிஸ்

எனக்கு 46 வது நாள் மதியம் brown colour discharge இருந்தது.இரவு மருத்துவர் ஊசிபோட்டாங்க. ஓய்வுலயே இருக்க சென்னாங்க. 47 th day night bleeding இருந்தது.அடுத்து 48 வது நாள் இரவு ஸ்கேன் பார்த்துட்டு குழந்தை இதயதுடிப்பு நல்லா இருக்கு சொன்னாங்க. bleeding stop ஆக fer.....2000 nu oru injunction போட்டாங்க.Bleeding stop ஆகிடும்னுசொன்னாங்க. ஆனா 48நாள் இரவு லேசாகவும்,49வது நாள் இரவு அதிகமாகவும் இரத்தப்போக்கு இருந்தது.அடுத்த நாள் மருத்துவமனை போனேன்.மறுபடியும் scan எடுக்க சென்னாங்க. இதயதுடிப்பை identify பன்ன முடியலை ஆனா வளர்ச்சி இருக்குனு போட்டு இருந்தது. So scan la repeat scan after one week nu poto irunthathu. Bleeding stop ஆக மறுபடியும் fer....2000 injuction போட்டாங்க.என்னை bed la admit பன்னி ஓய்வுல இருக்க வைச்சாங்க.இரத்தப்போக்கு நின்னுடும் பயப்பட வேண்டா நாளைக்கு வீட்டுக்கு போய்டலாம்னு சொன்னாங்க. ஆனா அடுத்த நாள் 51வது நாள் காலை வரை இரத்தப்போக்கு இருந்தது. எனக்கு அபாசன் பன்னனும்னு சொல்லிட்டாங்க. என் குழந்தையை என்கிட்ட இருந்து எடுத்தூட்டாங்க.blood report ellamey k va than irunthathu. Scan mmm correct ah than irunthathu. பிறகு எனக்கு எதுக்கு இப்படி ஆனது என்னால என் மனவேதனையையும் கண்ணீரையும் கட்டுப்படுத்தவே முடியல. ஏன் இப்படி நடந்ததுனு யாராவது சொல்லுங்க. மனவேதனையுடன் சாரு.

Kavala padathenga pa...sila nerangalla epadi than pa agum...yellame correct ah erukum ana heart beet erukathu....yenakum epadithan pa erunthuchu yellame nalla erunrthuchu ungalukavathu bleeding achu yenaku athu kuda agal....DNC than pannga...kavalapadama erunga yellame sari aierum....

Kavala padama iruka than try pannaren nga but mudeyala... D & C panna next baby Ku evlow days approm try pannalam nga. Vtola irukura pereyavanga than romba manasa kayabadothu ranga athan romba kastama iruku.... Ungalukum d&c pannangala???? Next ethuvum treatment kodopangala enthamari treatment kodopanga. Konjam sollunga nku bayamavey iruku.....

First baby normalla consieve aningalapa....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Next papa Ku 3 to 6 months gap vidanum pa. IPO konjam rest la irunga pa. Enakum first baby d&c pannanga pa. 3 months la next try pannlam sonnanga. Vayiru full ah clean ah aacha nu oru scan panni confirm pannikonga pa

God is love

மேலும் சில பதிவுகள்