எறும்புகள்

சீனி டப்பாவில் எறும்புகள் வந்து தொல்லை கொடுத்தால் சீனி டப்பாவை சுற்றி மஞ்சள் பொடியை தூவிவைத்தால் எறும்புகள் வராது

ரொம்ப டயர்டா இருக்கீங்களா? ரெஸ்ட் எடுங்க. நீங்க ஒன்னும் கவலை படாதீங்க மர்ழி உங்களுக்கு நான் பட்டம் தரேன் சரியா? யாரங்கே கொண்டு வாருங்கள் அந்த ஓலை சுவடியை இதிலிருந்து சகலமானவங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இன்றிலிருந்து மர்ழியா அவர்கள் MRS. MOUNTROAD ஆவார் ஆவார் ஆவார்.
(சாரதா ஷ் ஷ் ஷ் ஷ் கை குடுங்க சூப்பர் பட்டம் கொடுத்து இருக்கீங்க இது ரகசியம் மர்ழிக்கு தெரிய வேண்டாம்.)

நான் உங்களிடம் இப்ப தான் பேசறேன். நல்லாவே கதைகிறிங்க. சூப்பர். ஆமாம் நல்ல பாட்டு கூட பாடுறிங்க. குட். சோ நிங்களும் பூச்சிகளும் ரொம்ப தோஸ்த் ம்...ம்....ம்..ஹா...

ஆமாம் விஜி,
பூச்சிக்களும் நானும் இப்படி அப்படி தோஸ்த் இல்லை,சூப்பர் தோஸ்த்.என்னவோ இந்த ரூபி தான் இதுக்கெல்லாம் பயப்படமட்டாங்களாம்.கொஞ்ஜம் அவங்கக்கிட்டே டிரைனிங் எடுக்கலாமுனு நினைக்கிரேன்.இங்கே பட்டர்ஃபிலை மற்றும் இன்சக்ட் பார்க் இருக்கு,ஆனால் அந்த பக்கம் தலை வச்சி கூட படுத்தது இல்லை.

ஹா ஹா கே.ஆர் நிஜமாவே நீ தைரிய சாலிதான் ஒத்துகிட்டோம் நாங்க கத்தி குரல் வழத்தை கெடுத்துகாதே (நக்கல் டோய்)

உனக்கு நாளை ஒரு மெயில் போடறேன்...பாரு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமாம் ஹிபா உண்மையில் எனக்கு புழு பூச்சியெல்லாம் பயமில்லை..ஆனால் பறக்கும் கரப்பானுக்கு கொஞ்சம் பயப்படுவேன்..பயம் என்று சொல்வதா அறுவறுப்பு என்பதா என்று தெரியவில்லை..
6 வயதில் நாங்கள் வசித்த வீட்டை சுற்றி sugarcane தோட்டம்.அருகில் ஒரு வீடு தவிற 20 நிமிடம் நடந்தால் தான் அடுத்த வீடு பார்க்க முடியும்.அன்று கைய்யில் ஒரு பெரிய குச்சியைக் கொண்டு போய் காலை 7 மணிக்கு நான் தான் பால் வாங்கிட்டு வருவேன்.வழியில் கூட்டமாக நாய்கள் நின்று பார்க்கும்..அப்ப அம்மா சொன்னது போல் அதன் முகத்தை நின்று முறைத்தால் திரும்பி ஓடி விடும்..மீறி அருகில் வந்தால் கீழே குனிந்து கல் எடுப்பது போல் பாவனை செய்தால் ஓடி விடும்..அப்படியும் rabid dogs வந்தால் கைய்யில் உள்ள கம்பால் அதன் தலையில் அடிக்க வேண்டுமாம்.
ஆனால் அன்று தொடை நடுங்கும் பிறகு அது பழகவே தைரியம் வந்து விட்டது...குச்சியில்லாமல் பலமுறை நாய் துரத்தி ஓடியதுண்டு...இதில் நான் பூச்சிக்கெல்லாம் பயந்தா எப்படி.ஹஹஹா
முக்கியமான விஷயம் பால் 3/4 லிட்டெர் வாங்குவேன் அன்று அதில் 1/4 லிட்டெர் வரும்வழியில் குடித்து விட்டே வருவேன்:-D
ஹ்ம்ம் அது ஒரு பசுமையான காலம்.

துணி காய வைக்கும் கொடியில் எறும்பு உள்ளது. என்ன செய்யலாம்.

மேலும் சில பதிவுகள்