சீர் குருமா

தேதி: February 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 1 1/2 லிட்டர்
சேமியா - 200 கிராம்
சீனி - 150 கிராம்
முந்திரி - 100 கிராம்
பாதம் - 100 கிராம்
பிஸ்தா - 100 கிராம்
நெய் - 100 கிராம்


 

முதலில் பாதம்,பிஸ்தாவை தேல் நீக்கி இத்துடன் முந்திரியையும் சேர்த்து சிறிது நெய் ஊற்றி வறுத்துக்கொள்ளவும்.

சிறிது நெய் ஊற்றி தனியாக சேமியாவை வறுத்து தனியாக வைக்கவும்.

பின் பாலை நன்கு காய்ச்சி சீனியை போட்டு கிளறிக்கொள்ளவும்.

பின் வறுத்த பருப்புகளை போட்டு நன்கு கிளறவும்.

பின் சேமியாவை சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் வேகவிடவும்.

நன்கு வெந்து கெட்டியானதும் இறக்கி சூடாகவே அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

குருமா என்றால் குழம்பு வகை தானே. தாங்கள் கொடுத்துள்ள குறிப்பு பாயசம் வகையை சார்ந்துள்ளதுப் போல் தெரிகிறதே. தயவு செய்து விளக்கவும்.

அன்புடன்,
செல்வி.

சகோதரி அவர்களுக்கு குருமா என்றால் அதன் பெயர் சீர் குருமா இது பாயசம் போல் தான் ஆனால் நீங்கள் நினக்கும் குழம்பு குருமா கிடையாது நன்றி

கஜிதா,
எனக்கு சீர் குருமா என்றால் மிகவும் பிடிக்கும். எங்களுடைய நெறுங்கிய நண்பர் வீட்டில் 4 வருடம் முன்பு ராம்ஜான் அன்று சாப்பிட்டது.
மிகவும் ருசியாக இருந்தது. திரும்பவும் சாப்பிட ஆசையாக இருக்கின்றது. இதனை இந்த வாரத்தில் செய்து விட்டுவிட வேண்டும்.
எனக்கு ஒரு சந்தோசம். இதனை செய்வதற்கு என்று ஒரு தனி சேமியா கிடைக்கின்றது அல்லவா(ஏன் என்றால் அந்த ஆண்டி எங்களுக்கு அந்த சேமியாவை காண்பித்தார்கள்) அல்லது எந்த சேமியாவிலும் செய்யாலாமா? ருசி அதே மாதிரி இருக்குமா?
சீக்கிரம் சொல்லுங்கள்..சீர் குருமா செய்ய தயார் ஆகிவிட்டேன்

சாரிப்பா இப்பதான் இதை பார்த்தேன் அதான் பதில் கொடுக்க தாமதம். சாதா சேமியாவில் செய்வதா இருந்தால் வறுத்து செய்யனும்.இதுக்கு என்று உள்ள சேமியாவில் செய்தால் அது ஒரு தனி ருசி. கடைசியில் மில்க்மெய்ட் ஊற்றி இறக்கினால் இன்னும் சுவை கூடும். திக்காகவும் இருக்கும். மில்க்மெய்ட் ஊற்றுவதாக இருந்தால் சீனி குறைத்து போடனும்.குங்குமப்பூ இருந்தாலும் சேர்க்கலாம் வாசனையாக இருக்கும். அப்புறம் என் பெயர் கதீஜா கஜீதா இல்லைமா.

அன்புடன் கதீஜா.

கதீஜா இன்று சீர் குருமா செய்தேன் நன்றாக இருக்கிறது,நம் வீடுகளில் செய்யும் பாயாசம் தான், பெயர் எங்கள் ஊர் பக்கம் வழக்கத்தில் இல்லாதது!என்னிடம் பிஸ்தாஸ் கைவசம் இல்லை,பாதாம் முந்திரி வைத்து செய்தேன் நல்லா இருக்கு!நன்றிகள் பல!

உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லனும். முடியாவிட்டாலும் குறிப்பை செய்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள் பல.

அன்புடன் கதீஜா

ஹாய் தோழிஸ் எல்லோரும் எப்படி இருக்றீர்கள்?

நான் கடையில் விற்கும் போத்தல் குருமா பேஸ்ற் வாங்கி வைத்திருக்றேன்.இதை எதற்க்கு பாவிப்பது என்று தெரியவில்லை

நான் நோர்மலகா சமைக்கும் குழம்புக்கு இதை பாவிகலாமா
வேரு எதற்க்கு எல்லாம் பாவிக்கலாம்
தயவு செய்து பதில் தாருஙள்

அன்புடன்
துஷி

Sorry pa..இப்ப தான் பார்த்தேன். உங்கள் பெயரினை தப்பாக எழுதியிருக்கேன்.
ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. பின்பு தான் தவறு தெரிந்த்து. சரி கதீஜா.

என்னப்பா இதுக்கு போய் சாரிலாம்.நீங்க மாற்றி எழுதி இருப்பீங்கன்னு தான் சொன்னேன் தவறாக நினைக்க வேண்டாம் சரியா.

அன்புடன் கதீஜா.