ஸரிகமபதனிஸ‌ ////// 1 | அறுசுவை வலைப்பதிவு
blog image

ஸரிகமபதனிஸ‌ ////// 1

blog image

என் வாழ்க்கையில் என்னைக் கவர்ந்த‌, பாதித்த‌, சந்தோழப் பட‌ வைத்த‌, எனக்கும் ரோல் மாடலாக‌ இருந்த‌, இருக்கின்ற‌ சக‌ தோழிகள் எட்டு பெண்கள். அவர்களுக்கு நான் வைத்த‌ செல்லப் பெயர் //ஸ ரி க‌ ம‌ ப‌ த‌ நி ஸ‌ ///. அவர்களை அருசுவை தோழிகளுக்கு அறிமுகப் படுத்துகிறேன். என்னடா ரஜினி சங்கீதம் பாடுகிறாள் என்று பயந்து விட்டீர்களா? வேண்டாம் நமக்கு அந்த‌ சோதணை. என்னுடைய‌ முதல் தோழி ஸ . அவரை முதலில் அறிமுகப் படுத்திவிடுகிறேன்.

அவர் என்னில் மூத்தவர். ஒழுக்கமானவர். திறமைசாலி. பள்ளி ஆசிரியர். மிக‌ மிக‌ எளிமையானவர், ஏழ்மையானவர். ஆசை, கணவுகள் அதிகம், ஆனால் அதில் ஒன்று கூட‌ நிறைவேறாதது துரதஷ்டம். அதில் இருந்து மீள்வதற்கு பெரும்பாடு படுவார். அவரை பார்க்கும் போதே எனது மனம் மிகவும் கஷ்டப்படும்.
அவர்கள் ஒரே பெண். எனவே அவரது தாயாரும் அவருடனே வாழ‌ வேண்டிய‌ சூழ்னிலை. கணவரோ குடிக்காரன். எங்கே, எப்படி எந்த‌ சாலையில், வீதியில் வீழ்ந்துக் கிடப்பான் என்பதே தெரியாது. இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். மகன்களின் நிலமையும் தந்தையின் நிலமையே. யாரிடம் யார் நியாயம் கேட்ப்பது. மகள்களும் தங்கள் விருப்பபடியே வாழ‌ விரும்பினர். யாரும் யாருக்கும் அடங்க‌ மாட்டார்கள். அந்த‌ ஆசிரியர் பள்ளிக்கு வந்த‌ உடனே ஒரு டீ குடிப்பார். பள்ளியை விட்டு வீட்டுக்கு செல்லும் போதும் டீ குடித்தப் பிறகே செல்வார். ஏன் இப்படி டீ குடிக்கிறீர்கள்? என்பேன். அவர் சோகமாக‌ சிரித்துக் கொண்டே , ''ஆண்கள் என்றால் அவர்கள் சோகம், கவலை, துக்கம், துன்பம் மறக்க‌ சாராயம், விஸ்கி, பிராந்தி குடித்து மறக்கிறார்கள். நான் பேண்ணாய் இருப்பதால் டீ குடித்து என் மனதை அமைதிப்படுத்திக் கொள்கிறேன். என் அம்மாவிற்கு என் புருஷனைப் பார்த்தாலே , தன் மகளை சந்தோஷமாக‌ வாழவைக்க‌ வில்லையே பாவி என்று கோபம். என் புருஷனுக்கோ நான் என் மனைவியிடம் சண்டை போடும் போது இவள் குறுக்கே வருகிறாளே என்ற‌ கோபம். இவர்களிடையே நான் படும் பாடு அது பெரியக் கதை. அடுத்து மகன்களுக்கோ அவர்கள் கேட்க்கும் போதெல்லாம் பணம் கொடுக்க‌ வேண்டும் இல்லை என்றால் ரண‌ களரி. மகள்களோ குடித்து கும்மாளம் போடும் கணவரையும், பிள்ளைகளையும் வீட்டில் சேர்க்காதே சாப்பாடு போடாதே என்று என்னிடம் கோபம். இந்த‌ எல்லாக் கஷ்டத்தையும் மறக்கச் செய்வது அற்ப‌ சந்தோஷம் எனக்குத் தருவது இந்த‌ டீ மட்டுமே. பூஸ்ட், ஹார்லிக்ஸ் குடிக்கும் வசதி வாய்ப்பு இல்லை என்றாலும் டீ யாவது குடிக்க முடிகிறதே அது போதும் எனக்கு. டீ ஸ் மை சீக்ரட் எனர்ஜி''' என்று வெகுளியாக‌ சிரித்தார்.
அப்படிப்பட்ட‌ புருஷன் தேவையா என்பதைப் போல், நான் அவரைப் பார்த்தேன். என் மனதை படித்தவர், ''என்ன‌ செய்வது என்னிடம் பொன் நகையும் இல்லை, என் முகத்தில் புன்னகையும் இல்லை, இந்த‌ பூவும் பொட்டும் தான் நான் ஒரு பெண் என்பதை நினைவு படுத்துக்கிறது. அதற்காகவாது என் புருஷனை காப்பாற்றிக் கொள்ள‌ வேண்டிய‌ பரிதாப‌ நிலையில் நான் உள்ளேன்''' என்றார்.
சிறு, சிறு பிரச்சனைக்கு எல்லாம் கோபித்துக் கொண்டு தானும் சந்தோஷமாக‌ வாழமாட்டார்கள். பிறரையும் வாழவிட‌ மாட்டார்கள். அவர்களை நினைக்கும் போது '''டீ'''யிலேயே தன் துக்கம், மகிழ்ச்சி
இரண்டையும் கண்டு மனம் அமைதி காணும் என் தோழி ஒரு புரியாதப் புதிர்.
'''ஸ‌''''என் தோழியே உனக்கு எனது ராயல் சல்யூட்.

3.333335
Your rating: None (3 votes)

ரஜினி

நிறைய‌ எழுத்துப் பிழைகள் தெரிகிறதே! //சந்தோழப் _ அருசுவை _ சோதணை _ கணவுகள்// ! கீபோர்டில் ஏதாவது பிரச்சினையா? ஒரு தடவை லாப்டாப்பை முழுவதாக‌ ஷட்டௌன் செய்துவிட்டுத் திறந்து எடிட் செய்து பாருங்கள், சரிவரும்.

அப்பப்பா அந்த‌ தாய்க்கு

அப்பப்பா அந்த‌ தாய்க்கு எவ்வளவு பிரச்சினை! இதில் பெண்களுக்கு ஒரு படிப்பினை உள்ளது.(குழத்தையை சிறு வயதில் இருத்தே ஒவ்வொரு விடயத்தயும் சொல்லி கொடுத்து வளர்க்க‌ வேண்டும். இது நல்லது ,இது கூடாது, இப்படி செய்யக்கூடாது என‌ சிறு வயதிலே கவனம் செலுத்த‌ வேண்டும்)

இமா

ஹாய்,
''நிறைய‌ எழுத்துப் பிழைகள் தெரிகிறதே''' ஆமாம். பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி இமா. சரி செய்கிறேன்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

சம்ஹா

ஹாய்,
எனது பதிவுக்கு கருத்து கொடுத்தமைக்கு நன்றி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

உங்களை எப்படி அழைப்பது,

(உங்களை எப்படி அழைப்பது என‌ தெரியவில்லை சில‌ வேலை நீங்கள் வயதில் மூத்தவராக‌ இருத்தால் நான் பெயர் சொல்ல‌ கூடாது அல்லவா?)

பொருமையான‌ தாய், நல்ல‌ தொடர் அடுத்தது யார்? விரைவில் எழுதுங்கள்.

சம்ஹா

:‍) ரஜினியின் ப்ரொஃபைலைப் பாருங்க‌. ரிட்டயர்ட் ஹெட்மிஸ்ட்ரஸ் என்று போட்டிருப்பாங்க‌.

நன்றி இமா அம்மா,

நன்றி இமா அம்மா,

சம்ஹா

ஹாய்,
'''உங்களை எப்படி அழைப்பது என‌ தெரியவில்லை'''''நோ பிராப்லாம். பெயர் சொல்லியே அழைக்கலாம். நாம் சக‌ தோழிகள். நட்புக்கு மூத்தவர்/ இளையவர் என்ற‌ பாகுபாடு கிடையாது சம்ஹா. ஒ. கே.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ம்

ஓ கே ரஜினி....

ரஜினி அம்மா

வித்தியாசமான‌ பெண்மணி உங்கள் தோழி. ஓரு ஆசிரியருக்கு இப்படி பிள்ளைகளா? அதிர்ச்சியாக‌ உள்ளது. ஓரு சந்தேகம் ஸரிகமபதனிச‌ என்பது உங்கள் 8 தோழிகளின் பெயர்களின் முதல் எழுத்தா?

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!