பீஃப் சுக்கா

தேதி: February 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

அறுசுவையில் நூற்றுக்கும் அதிகமான குறிப்புகளை வழங்கியுள்ள <a href="experts/1377" target="_blank"> திருமதி. செய்யது கதீஜா </a> அவர்களின் தயாரிப்பு இது. பீஃப் கொண்டு செய்யப்படும் இந்த சுக்காவினை சப்பாத்தி, பரோட்டா, சாதம் என அனைத்து வகை உணவுகளுக்கும் பக்க உணவாக சாப்பிடலாம். தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும். பீஃப் (மாட்டிறைச்சி) விரும்பாதவர்கள், இதே முறையில் ஆட்டிறைச்சி கொண்டும் இந்த சுக்காவினை தயாரிக்கலாம். மாட்டிறைச்சியைவிட ஆட்டிறைச்சி மிருதுவானது என்பதால், அதிக நேரம் வேக வைக்கத் தேவையில்லை.

 

பீஃப் - 300 கிராம்
வெங்காயம் - பாதி
தக்காளி விழுது - 5 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி
தயிர் - 1 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 4 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5 (காம்பை எடுத்துவைக்கவும்)
கருவா (பட்டை) - ஒரு துண்டு
ஏலம் - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
வத்தல் தூள் - 2 தேக்கரண்டி
தனியாதூள் - 2 தேக்கரண்டி
மசாலாதூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


 

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் லேசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் விழுதில் மிளகாய் வற்றல்தூள், தனியாதூள், சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி விழுது போட்டு நன்கு கலந்துவைக்கவும்.
முதலில் கறியை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் மசாலாத்தூள், உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி விழுது, ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது, சிறிது மஞ்சள்தூள் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து எடுக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றிய பின் எடுத்து தனியே வைக்கவும்.
பின் அடுப்பில் ஒரு தவாவை வைத்து, எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, கருவா, ஏலம் போட்டு பொரியவிடவும்.
அதன் பின்பு மிளகாய் வற்றலைப் போட்டு வதக்கவும்.
இப்போது மீதி உள்ள இஞ்சி, பூண்டு விழுதுகளை சேர்த்து வதக்கவும். தயிரை ஊற்றி பிரட்டவும்.
அதில் நறுக்கின வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒன்றிரண்டாய் அரைத்து வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்கு கரையும் வரை வதக்கவும்.
பிறகு கலந்து வைத்துள்ள தேங்காய் மசாலா விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அதன் பின்னர், வேகவைத்து எடுத்துள்ள இறைச்சியை போட்டு நன்கு கிளறவும்.
மசாலா அனைத்தும் கறியில் சேர்ந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். இதற்கு தண்ணீர் சிறிது கூட சேர்க்கக்கூடாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பீஃப் சுக்கா செய்து பார்த்தேன். மிக மிக நன்றாக இருந்தது. படத்துடன் செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி.

god is my sheperd

Madam எல்லாம் சூப்பர் ஆனா இந்த வத்தல் தூள் மேட்டர் தான் என்னனு தெரியல ... கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்

இந்த முறையில் ஆட்டிறைச்சியில் சுக்கா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.குறிப்பிற்கு நன்றி.

Dear katheeja
what's masala powder?Is it garam masala. if so could u give me the correct ratio for garam masala.Thanks