mostion problem

Hi tholikal vanakkam enakku 8matham aaga poogurathu ...enakku 2,3daygu oruga thaan toilet varugurathu athuvum irukama honsam than pooguthu... Enakku intha problathaal mooshu viduvathu kastama irukku. Pasi illa ,thookgam illa,enna panrathu....poongoothai amma unga pathilai rompa ethir paarguran.

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வரும்.. ஆனால் அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு போகாதீங்க.. காய்ந்த திராட்சை தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்ததும் சாப்பிட்டு குடிங்க.. நல்லா மோஷன் போகும்.. கர்ப்பிணிகள் கீரை தவறாமல் தினமும் சாப்பிட வேண்டும்.. பழங்கள் ஜூஸாக குடிப்பதை விட அப்படியே சாப்பிடுவது நல்லது.. மலச்சிக்கல் உண்டு பண்ணாது.. இன்னொரு விஷயம் தண்ணீர் நல்லா நிறைய குடிங்க.. வாக்கிங் நல்லா போங்க..

இதெல்லாம் இங்க உள்ள டாக்டர்ஸ் சொல்றது.. அங்க என்ன சொல்லுவாங்கனு தெரியலை.. எனக்கு தெரிந்ததை டாக்டர் சொன்னதை சொல்லியிருக்கேன்.. பூங்கோதை அம்மா பார்த்தால் வேறு வழிமுறைகள் / மருந்துகள் சொல்வாங்க.. வெயிட் பண்ணுங்கள்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Rompa nanri tholi ....nan water kudikguen dates uoora waithu sapiduran keerai, palam saapiduran honsam nadanthu pooi varugiren.naaligil irunthu munthiri vattal uoora waithu saapiduran.. Rompa nanri tholi

தினமும் காலையிலே வெறும் வயிற்றில் 1/2 ஸ்பூன் தேன் குடிங்க பா. இரவு படுக்கும் போது ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க பா. இது ரெண்டும் உங்களுக்கு மோசன் பராப்ளத்தை சரி பண்ணும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ரொம்ப நல்லது.

தோழி தேன் குடித்தால் டாய்லெட் இறுக்கும் என்று கேள்வி பட்டேன் ....அப்படி இல்லயா ானா தோழி ...நான் ரொம்ப கஷ்டம் படுரnn.

Pz ...பதில் சொல்லுங்கள் .

சகோதரிகள் சொன்னதை விடப் புதிதாக‌ எதுவும் சொல்வதற்கு இல்லை சகோதரி.

பூங்கோதையைக் கூப்பிடும் முன்... தமிழில் தட்ட‌ முயற்சி செய்யுங்கள். இதே போன்ற‌ கேள்விக்கு அவர் பல‌ இடங்களில் பதில் சொல்லியிருக்கிறார். அவற்றைத் தேடிப் படியுங்கள்.

லிங்க் தேடிக் கொடுக்க‌ இயலாத‌ நிலையில் இருக்கிறேன். மன்னிக்க‌ வேண்டும் சர்மி.

‍- இமா க்றிஸ்

நான் தேன் குடித்திருக்கேன் பா எனக்கு அந்த மாதிரி இருந்தது இல்லை. எனக்கு குழந்தை வெயிட் போடுறதுக்கு ஒரு ஹெல்த் டிரிங் பவுடர் டாக்டர் கொடுத்தார் அதுனாலே எனக்கு மோசன் ப்ராப்ளம் இருந்துச்சு தேன் குடித்தபின் சரியானது. உங்களுக்கு பயம் இருந்தால் குடிக்காதீங்கபா. பூங்கோதை அம்மா பார்த்தால் கண்டிப்பாக பதில் சொல்வாங்க.

அன்புள்ள‌ சர்மிக்கு,
நலம் பெற வாழ்த்துக்கள். மிளகு, சீரகம், அரிசி திப்பிலி,கண்டதிப்பிலி
இவற்றை லேசாக‌ வறுத்து பொடித்து சேர்த்து ரசம் வைத்து தக்காளி
சேர்த்து சூப் போல‌ வைத்து சோற்றில் ஊற்றி உண்ணலாம். காரம் அதிகம்
வேண்டாம். இதே பொடியை காரக்குழம்பு வைக்கும் போது அதில் சேர்க்கலாம், காரக்குழம்பு அல்லது புளிக்குழம்பில் ஒரு தேக்கரண்டி அளவு
விளக்கெண்ணெய்+நல்லெண்ணெய் சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிடவும்
தாளிக்கும் போது சேர்க்கவும். பருப்பு வேகவைக்கும் போது நாங்கள் தினமும் சேர்ப்போம். துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு எதுவானாலும்
அதோடு கால்தேக்கரண்டி விளக்கெண்ணெய்+மஞ்சள் தூள்,பூண்டுப்பல்10+
இரண்டு மிளகு அளவு பெருங்காயம்+ 20 எண்ணம் வெந்தயம், 3 சிட்டிகை
சீரகம்+ கறிவேப்பிலை ஒரு கொத்து+ மல்லித்தழை+தேவையானால் ஒரு பச்சைமிளகாய் வாசமாகவும் ருசியாகவும் இருக்கும்+ சின்னவெங்காயம் 10
இவற்றைச் சேர்த்து பருப்பு வேகவைத்தால் அதன் ருசியே தனிதான்.
இந்த‌ மாதிரி பருப்பை வேகவைத்து சோற்றில் ஊற்றி நெய்யும் உப்பும்
சேர்த்து இதனோடு சுண்டைகாய் வற்றல், மோர் மிளகாய் வற்றல், உருளை, சேனைக்கிழங்கு, பிடிகருணைகிழங்கு புளி சேர்த்துச் செய்த‌
தொக்கு, நாரத்தங்காய் ஊறுகாய், வெந்தய‌ மாங்காய் சேர்த்துச் சாப்பிட‌ கர்ப்பிணிகளுக்கு வாய்க்கும் உடம்பிற்கும் மிகவும் நல்லது. சோறும் நிறைய‌ சாப்பிட‌ முடியும். இந்த‌ மாதிரி வேகவைத்த‌ பருப்பில் கீரைகள், வாழைப்பூ கூட்டு போலவும் சாம்பாராகவும் (மற்ற‌ காய்களும் சேர்க்கலாம்) செய்து சாப்பிட‌ இதில் சேரும் கால் தேக்கரண்டி விளக்கெண்ணெய் மலம் இறுகாமல் இருக்க‌ உதவும், கீரைகளைக் கூடுமானவரை அதிகமாக‌ நாரை எடுக்கக் கூடாது, முடக்கற்றான் கீரையை வாரம் இருமுறை உண்ண‌ உடல் நரம்புகளுக்கு இளக்கம் தரும்.
மகப்பேறும் சுகப் பிரசவமாக‌ அமையும், தினமும் வாழைப்பழம், சாத்துகுடி , ஆரஞ்சு போன்ற‌ பழங்களை அப்படியே சாப்பிடவும், ஜூஸ்
வேண்டாம். மாவு பிரட் வகைகள் குறைக்கவும். இரவு நேரத்தில் கீரை
கூடாது. தேன் மலத்தை இறுக்கும். தேன் நெல்லி நல்லது. முடிந்தால்
கடுக்காய் லேகியம் சிறந்த சித்தா தயாரிப்புகள். அல்லது பிரசவ‌
லேகியம் இவற்றைப் பயன் படுத்தலாம். தினமும் ஒரு சுண்டைகாய் அளவு
போதுமானது. தொல்லையின்றி மலசலம் கழியும்.
பல‌ தொல்லையினால் கணிணி பக்கம் வரமுடியவில்லை, தாமதத்திற்கு மன்னிக்கவும். தற்போது சொன்ன‌ முறைகளை முயன்று
பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ரொம்ப நன்றி அம்மா ....நீங்க சொன்ன முறைகள் பண்ணி பார்கிரேன்.எனக்காக சிரமம் பார்காமல்ல் பதில் தந்து உதவிமைகு நன்றி னா

மேலும் சில பதிவுகள்