கருஞ்சீரகம் என்றால் என்ன?

கருஞ்சீரகம் என்றால் என்ன?.கருஞ்சீரகம் எதற்க்கு எல்லாம் பயன்படுத்தலாம்.கருஞ்சீரகம் எவ்வாறு இருக்கும்?.நன்றி.

எனக்கு தெரிந்தவை:

கருஞ்சீரகம் என்பது Nigella sativa, இது கருப்பாக, கடுகை விட சிறிது பெரியதாக இருக்கும்.

இதற்கு நிறைய Medical and biological importance இருக்கு.

இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

கருஞ்சீரகம் என்பது shahi zeera.
இதனை ஹைதராபாத் பிரியாணி மற்றும் சில ஷாஹி தயாரிப்புகலில் உபயோகிக்கலாம்

Sanravi,Shanthi இருவர்க்கும் மிக்க நன்றி.

பாபு அண்ணா அவர்களுக்கு கருஞ்சீரகம் படம் கொடுக்க இயலூமா?.நன்றி.

உடனே கொடுக்க இயலாமைக்கு வருந்துகின்றேன். ஒரு சிறிய குழப்பம் இருந்தது. இப்போது சரியாயிற்று. திருமதி. சாந்தி அவர்கள் குறிப்பிட்டு உள்ளது தவறு என்று எண்ணுகின்றேன்.

caraway seed என்றால் தமிழில் என்ன பெயர் என்று சகோதரி ஜெயஸ்ரீ அவர்கள் முன்பு ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார். அப்போது கேக் விதை என்றுதான் சொல்லுவோம். தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தேன். சகோதரி சாந்தி அவர்கள் கருஞ்சீரகம் என்று பதில் அளித்தார். எனக்கு உறுதியாக தெரியாததால் இருக்கலாம் என்று நினைத்தேன்.

தற்போது சகோதரி அஸ்மா அவர்கள், கருஞ்சீரகம் வேறு, கேக் விதை வேறு என்று அவை இரண்டின் படங்களையும் அனுப்பியுள்ளார். அதோடு மட்டுமன்றி கருஞ்சீரகத்தின் சிறப்பையும், பயன்பாட்டையும் விளக்கியுள்ளார். அவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

திருமதி. அஸ்மா அவர்களின் விளக்கம்
<br />
கருஞ்சீரகம் என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒருவித விதை. வடிவம், அளவு எல்லாம் கிட்டத்திட்ட கறுப்பு எள் போன்று, ஆனால் பளபளப்பு இல்லாமல் இருக்கும். இதன் மருத்துவ குணங்களில் சிலவற்றை கூறுகின்றேன்.

20 கிராம் கருஞ்சீரகத்தை ஒரு மண் சட்டியில் போட்டு வறுத்து தூளாக்கி, 40 கிராம் பொடியாக்கிய பனை வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு, அதிலிருந்து 1ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால், மாதவிலக்கு கோளாறுகள் சீரடையும். (கருவுற்ற தாய்மார்கள் முதல் 4 மாதங்களுக்கு இதை சாப்பிடக்கூடாது)

முகப்பருவுக்கு, கருஞ்சீரகத்துடன் சீரகத்தையும் சம அளவு எடையில் எடுத்து பசும்பால் விட்டு அரைத்து தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

சளி, இருமலுக்கு கருஞ்சீரகத்தை பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகிவிடும். கருஞ்சீரக எண்ணெயாக கிடைத்தால் ஒரு வேளைக்கு 1 ஸ்பூன் வீதம் ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிடலாம்.

ஜலதோஷத்தினால் மூக்கில் நீர் வடிந்துக்கொண்டு தொல்லை கொடுத்தால், கருஞ்சீரகத்துடன் ஓமத்தை சேர்த்து பொடியாக்கி, அத்துடன் சிறிது கற்பூரம் சேர்த்து ஒரு துணியில் கட்டி, அடிக்கடி முகர்ந்துக்கொண்டிருந்தால் நீர்வடிதல் நிற்கும்.

சகோதரி சாந்தி அவர்கள் சொன்னதுபோல் இதை பிரியாணிக்கு பயன்படுத்துவதுபோல் எனக்கு தெரியவில்லை. அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டதுபோல் தெரிகிறது. ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்டுள்ள 'shahi zeera' என்பது சாஜிரா என்று தமிழில் சொல்லப்படுகிறது. அதைதான் பிரியாணிக்கு தாளிக்க பயன்படுத்துவோம். நல்ல வாசனை கொடுக்கும். 'சாஜிரா' மற்றும் 'கருஞ்சீரகம்' படம் இத்துடன் இணைத்துள்ளேன். பார்க்கவும். நன்றி!

கருஞ்சீரகம்
<img src="files/pictures/black_cumin.jpg" alt="Black cumin seed" />
<br /> <br />
கேக் விதை (சாஜிரா)
<img src="files/pictures/caraway.jpg" alt="caraway seed" />

பாபு அண்ணா படத்துடன் விளக்கம் கொடுத்தற்க்கு மிக்க நன்றி.

அஸ்மா மேடம் மிக்க நன்றி.

கருஞ்சீரகம் மாத விலக்கு பிரச்னைக்கு மருந்து என்று கூறியுள்ளீர்கள். என்ன மாதிரியான பிரச்னைக்கு என்று கூறினால் மிக நலமாக இருக்கும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

கருஞ்சீரகம் ஆங்கிலத்தில் Black cummin என்பர். Shahi Jeera என்பது சீரகத்தை விட சிறியதாக இருக்கும். Caraway seed என்பது தமிழில் ஓமம்.நான் அறிந்தது.

தாங்கள் குறிப்பிட்டு உள்ளது தவறு. carom seed (Ajwain) என்பதுதான் ஓமம். தோற்றத்திலும் வேறு மாதிரி இருக்கும். ஓமம், caraway seed இரண்டும் எனக்கு பரிச்சயமானவை. ஆனால், caraway seed ன் தமிழ் பெயர் எனக்குத் தெரியாமல் இருந்தது. அதேபோல் கருஞ்சீரகத்தையும் நான் பார்த்தது இல்லை. எனவேதான் சகோதரி அவர்கள் caraway seed க்கு தமிழ்ப்பெயர் கருஞ்சீரகம் என்று சொன்னப்போது அதனை ஏற்றுக்கொண்டேன்.

மேலும் சில பதிவுகள்