அரிசி கச்சாயம்

தேதி: February 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 1/2 கிலோ,
வெல்லம் - 3/4 கிலோ,
குண்டு உளுந்து - 1 கைப்பிடி,
ஏலக்காய் - 5,
எள்ளு - 1 ஸ்பூன்,
பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்,
தேங்காய் - 1/2 மூடி,
எண்ணெய் - சுடுவதற்கு.


 

அரிசி, உளுந்தை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின், கிரைண்டரில் போட்டு, நைசாக அரைக்கவும்.
பொட்டுக்கடலையை ஒன்று இரண்டாக பொடிக்கவும்.
எள்ளை கழுவி தோலை தேய்த்து எடுக்கவும்.
ஏலக்காயை பொடி செய்யவும்.
தேங்காயை துருவி வாசம் வரும் வரை வறுக்கவும்.
வெல்லத்தை தட்டி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடி கட்டவும்.
அரைத்த மாவுடன் ஏலக்காய், எள்ளு, பொட்டுக்கடலை, தேங்காய், வெல்ல கரைசல் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சின்ன கரண்டியில் மொண்டு ஊற்றி, மேலெழும்பி வந்தவுடன், திருப்பி வேக விட்டு எடுக்கவும்.


ஒவ்வொன்றாகத்தான் ஊற்ற வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்