முருங்கைக்கீரையை சுத்தம் செய்வது எப்படி

ஹலோ தோழிகளே

முருங்கை கீரையை ஈசியாக‌ ஆய்வது எப்படி, போன‌ முறை மாலை ஆறு மனியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமையாக‌ சுத்தம் செய்ய‌ முடியவில்லை. அதனால் உதவுங்கள் தோழிகளே

ஹலோ சங்கீதா,

//முருங்கை கீரையை ஈசியாக‌ ஆய்வது எப்படி,// அதை நான் தலை கீழாக‌ ஆய்வேன் மிகவும் சுலபமாக‌ இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்

- பிரேமா

ஒரு கவரில் போட்டு பிரிட்ஜ் ல் அல்லது வெளியில் வைத்திருங்கள்..மறுநாள் எடுத்து ஒரு நியூஸ் பேப்பரை தரையில் விரித்து கீரையை கையில் வைத்து ஆட்டினால் உதிர்ந்துவிடும்..மீதம் உள்ளதை ஆய்ந்து கொள்ளலாம்..கவரிலும் பாதி கீரை உதிர்ந்து இருக்கும்..:-) நான் எப்போதும் இப்படிதான் செய்வேன்...

அவந்திகா

நல்ல‌ ஐடியா.. நானும் முயற்சி செய்கிறேன்..

நீங்களும் உங்கள் பையனும் எப்படி இருக்கிறீர்கள்?

- பிரேமா

இருவரும் நலம் பிரேமா..:-)

அவந்திகா

தோழிகளே

ஈரத்துணியில் கட்டி வைத்தால் உதிர்ந்து விடுமாம் நெட்‍‍ இல் படித்தேன் ஆனால் என்ன‌ துனி என்று தெரியவில்லை. இந்த‌ முறையை யாரவது செய்து இருக்கிறீர்களா

இப்படி உதிர வைப்பது... நான் செய்ய மாட்டேன். :-) பூச்சி ஏதவது இருந்தால் பிரிப்பது வேலை. முருங்கையில் மசுக்குட்டிப்புழு வருமே! தவிர.... கீரை மறுநாள் சமையலுக்குத் தானே வரும்! கீரையின் புதுமை குறைந்துவிடுமே! கொஞ்சமாவது அதன் சத்தும் குறைந்திருக்கும்.

எங்கள் பக்கம், 'கந்தப் பாக்குறது' என்போம். :-) 'கஞ்சல் பார்க்கிறது' மருவி இப்படி ஆகிவிட்டது. முதலில் பழுத்த இலை, தூசு எல்லாம் எடுத்து விட்டு பிரேமா சொன்னது போல ஒவ்வொரு கிளைப் பிரிவிலும் நுனியில் ஆரம்பித்து ரிவர்ஸில் உருவி எடுப்போம். கடைசியாக நுனியிலுள்ள ஒற்றை இலையைக் கிள்ளி எடுப்போம். எப்பொழுதும் மரத்திலிருந்து பிடுங்கி உடனே சமைத்துத்தான் பழக்கம். இளம் கீரையாகப் பிடுங்கினால் அதிகம் தூசு படிந்திராது. தண்டு இருந்தாலும் பிஞ்சுத் தண்டு - வெந்துவிடும்.
~~~~~
சங்கீதனா... //ஆனால் என்ன‌ துனி என்று தெரியவில்லை.// சுத்தமான டீ டவல், மஸ்லின் அல்லது இட்லி தட்டுக்குப் போடும் துணியை நனைத்து எடுங்கள்.

‍- இமா க்றிஸ்

முருங்கைக் கீரையை மரத்தில் இருந்து ஒடித்ததும் கீரைக் கொத்துக்களை பின் புறமாகத் திருப்பிப் பார்க்கவும். கீரையின் தண்டுகளில் முசுக்கொட்டைப் பூச்சியின் கம்பளிப்பூச்சி முட்டைகள் வெகு
அழகாய் முத்துக் கோர்த்தது போல் ஒட்டி இருக்கும் இருக்கலாம், கடுகு சைசில். அதை நீக்கவும். அடுத்து முக்கோண‌ வடிவத்தில் ஒரு ஜந்து முருங்கைக்காம்போடு ஒட்டிக் கொண்டிருக்கும் பச்சைநிறத்தில் குட்டி
வெட்டுக்கிளி வடிவத்தில், தொட்டாலே பச்சைப்பூச்சி நாற்றம் அடிக்கும்.
இதைப் போக்க‌ கீரையை கொத்தாகவே தரையில் நாலு தட்டு தட்டி கீரை
வீணாகாத‌ படி தட்டி நீக்கவும், பிறகு பழுத்த‌ இலைகளை நீக்கவும்.
கம்பளிப் பூச்சி இருந்தால் தயவு தாட்சண்யம் இன்றி நீக்கி விடவும்.
பிறகு கொத்தாகவே கீரையினை நன்கு நீரில் அலசிக் கழுவி விட்டு
உருவிப் பயன் படுத்தவும், பையிலோ பருத்தித் துணியிலோ சுற்றி மூடி
வைத்தால் கீரை உதிரும். ஆனால் சின்னக் குச்சிகளும் சேர்ந்து வரும்.
கீரையின் பசுமை வாசம் போய் வேறு வாசம் வரும்.சமைத்தால் ருசிக்காது ரசிக்காது. கொஞ்சம் வேலை தான்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//பையிலோ பருத்தித் துணியிலோ சுற்றி மூடி வைத்தால் கீரை உதிரும். ஆனால் சின்னக் குச்சிகளும் சேர்ந்து வரும். கீரையின் பசுமை வாசம் போய் வேறு வாசம் வரும். சமைத்தால் ருசிக்காது ரசிக்காது.// இதுதான் என் நினைப்பும். முருங்கைக் கீரைக்கே என்று ஒரு தனி வாசனை இருக்கிறது. மரத்தைத் தட்டினால் வீசும் அந்தக் குழை வாடை முருங்கைக்கீரையைச் சாப்பிட்ட பசுவின் பாலிலும் வரும். எனக்கு அது பிடிப்பதில்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்