சேலம் மட்டன் குழம்பு

தேதி: February 27, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

ஆட்டு இறைச்சி (மட்டன்) - 3/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ,
தேங்காய் - 1 மூடி,
இஞ்சி - 2 அங்குல துண்டு,
பூண்டு - 15 + 10 பல்,
காய்ந்த மிளகாய் - 10,
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பிரிஞ்சி இலை - சிறிது,
கறிவேப்பிலை - 20,
எண்ணெய் - 4 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


 

15 பல் பூண்டு, இஞ்சியை அரைத்து வைக்கவும்.
ஆட்டு இறைச்சியை கழுவி சிறிது உப்பு, மஞ்சள் தூள், பாதி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து, குக்கரில் 5 விசில் விட்டு வேக வைக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகாய், பாதி கறிவேப்பிலை, சீரகம், மிளகு வறுத்து எடுக்கவும்.
அதே எண்ணெயில் 8 வெங்காயத்தை மட்டும் தனியாக வைத்துக் கொண்டு, மீதி வெங்காயத்தை வதக்கவும்.
வெறும் வாணலியில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.
வறுத்தவைகளை தனிதனியாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு காய்ந்த்வுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
பொரிந்தவுடன் இரண்டாக வெட்டிய 8 வெங்காயம், பூண்டு, மீதி உள்ள இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி, மீதி கறிவேபிப்பிலை, ஆட்டு இறைச்சி சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின், முதலில் அரைத்த மிளகாய் மற்றும் சீரகம், மிளகு, தனியா தூள் சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு அரைத்த வெங்காய விழுதை, தண்ணீரில் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
10 நிமிடம் கொதித்த பின், அரைத்த தேங்காய், கசகசா விழுதை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.
5 நிமிடம் கொதித்த பின் இறக்கவும். கமகமக்கும் சேலம் மட்டன் குழம்பு தயார்.


1 தக்காளிக்கு மேல் போடக் கூடாது.
கொத்தமல்லி தழை சேர்க்கக் கூடாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி மேடம்,

உங்களது அனைத்து குறிப்புகளும் மிகவும் அருமை.

நாங்கள் சென்னையில் நண்பர்களாக வீடு எடுத்து தங்கியிருக்கிறோம்.நேரம் கிடைக்கும் போது ஹோட்டலில் சாப்பிடாமல் நாங்களே சமைக்கிறோம்.யாருக்கும் அனுபவமில்லை.

சேலம் மட்டன் குழம்பு செய்ய விரும்பினோம்.கிராம் அளவில் தந்தால் உபயோகமாக இருக்கும்.

தக்காளி, இஞ்சி, பூடு ( அரைப்பதற்கும்,வதக்குவதற்கும் தனித்தனியாக ) போன்றவை கிராம் அளவில் தந்தால் உபயோகமாக இருக்கும்.

தேங்காய் துருவல் எத்தனை டேபிள் ஸ்பூன் போடலாம்.

பிழை இல்லாமல் தமிழ் எழுத்துக்களை பார்த்து அடிப்பதற்குள் நேரமாகிவிட்டது.

உங்கள் பதில் வந்ததும் குழம்பு செய்துவிடுவோம்.உங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

அன்புடன்,
சந்தோஷ்

ஹெல்லொ செல்வி மேடம், இந்த குழம்பில் தாங்கள் கூறிப்பிட்டுள்ள அளவுகளை கொண்டு 3/4 கிலோ மட்டனுக்கு பதில்1/2கிலோ மட்டன் கொண்டு செய்தால் நன்றாக வருமா.

எப்படியிருக்கீங்க? நலமா? ஓ.. தாராளமாக செய்யலாம். நன்றாக வரும். ஆனால் குழம்பு நிறைய இருக்கும், மட்டன் குறைவாக தெரியும், சுவையொன்றும் வேறுபடாது. பரவாயில்லையா?
வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நன்றி செல்வி மேடம். 3/4 கிலோ கறி அளவுக்கு தாங்கள் கூறி உள்ளதால் என்னால் அதிக அளவோ அல்லது குறைந்த அளவோ சமைக்கும் போது மற்ற பொருட்களை அட்ஜஸ்ட் பண்ண வசதியாய் இருக்கும் என்பதால் கேட்டேன்.நன்றி.

செல்வி மேடம் அவர்களுக்கு,

உங்கள் குறிப்பான சேலம் மட்டன் குழம்பு செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது.சப்பாத்திக்கு சூப்பரோ சூப்பர்.நன்றி உங்களுக்கு

அன்புடன்
அபிராஜன்

டியர் அபி,
எப்படியிருக்கீங்க? உங்களோட பாராட்டுக்கு மிக்க நன்றி. சேலம் மட்டன் குழம்பு சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, புரோட்டா, இடியாப்பம் எல்லாத்துக்குமே நல்ல காம்பினேஷன். மல்டி பர்பஸ் குழம்பாக உபயோகிக்கலாம். நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ரொம்ப அருமையா வந்தது.. ஜலீலாக்காவின் பகாறா கானாவுடன்...
எங்க ஆளையே காணோம்.... வந்து ஒரு எட்டு எங்களுக்கெல்லாம் ஒரு ஹெல்லோ சொல்லலாமே!!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு இலா,
நலமா? பாராட்டுக்கு மிக்க நன்றி. எனக்கென்ன வரக்கூடாதுன்னு ஆசையாப்பா? இந்த நெட் கனெக்ஷன் பாடாப்படுத்திருச்சு. இனி நீங்க துரத்தும் வரை வருவேன். ஒரு ஹலோ இல்ல. ஓராயிரம் ஹலோ, போதுமா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா
சேலம் மட்டன் குழம்பு,வெச்சேன் சூப்பர். நம்ம ஊர் குழம்பாச்சே!!பிரியாணிக்கு வைச்சேன் நல்லா இருந்தது செல்விமா. அதையே தோசைக்கும் தொட்டுக்கிட்டோம் சூப்பரோ சூப்பர்.நன்றி செல்விமா.

ஹாய் கவி,
பாராட்டுக்கு நன்றி. நம்ம ஊர் குழம்புக்கு சொல்லணுமா? பிரியாணியை விட தோசைக்கு சூப்பரா இருக்கும். இங்கேயும் அதே தான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.