ஆலோசனை

ஹாய் தோழிகளே ,
நான் ஒரு ஹிந்து பொண்ணு காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன் ,என்னவர் என்னை இப்பொழுதும் அதிக பாசத்தோடு பார்த்து கொள்கிறார் ,நான் திருமணம் செய்தவர் கிறிஸ்டியன் ,எனக்கு என்னுடைய மதத்தின் மீது அதிக நம்பிக்கை ,என்னவர் மத நம்பிக்கையையும் மதிக்கிறேன் ,எனக்கு அம்மா இல்லை இறந்துவிட்டார் நான் கல்லூரி படிக்கும் காலத்தில்,எங்கள் திருமணத்தை இருவீட்டாரும் எதிர்த்தனர்.திருமணமாகி 5 வருடங்கள் ஆகிவிட்டது ,இப்பொழுது என்னுடைய மாமியார் வீட்டில் உள்ளவர்கள் எங்களை வீட்டிற்கு கூப்பிடுகிறார்கள் ஆனால் அவர்கள் மதப்படி ,என்னால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை,என்னவர் என்னை மதம் மாற சொல்ல வில்லை ஆனாலும் அவர் குடும்பத்துடன் சேர முடியாத வருத்தம் இருக்குமோ என்று நினைக்கிறன்.நான் சைவம் என்னவர் மீன் விரும்பி சாபிடுபவர் ,நான் அவருக்கு சமைத்து கொடுப்பேன் ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை .இதற்கும் என்னவர் வீட்டில் சாப்பிட்டு தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் .நான் என்ன செய்ய

//இப்பொழுது என்னுடைய மாமியார் வீட்டில் உள்ளவர்கள் எங்களை வீட்டிற்கு கூப்பிடுகிறார்கள்// நல்ல மாமியாராகத் தெரிகிறார். முன்பு எதிர்ப்புக் காட்டியதற்குக் அப்போதைய உங்களிருவர் வயதும் முக்கிய காரணம். இப்போ கூப்பிடுறாங்க. போகலாம். போய் அங்கு வசிக்க முடியாவிட்டாலும் கூட அடிக்கடி போய் வரலாம் இல்லையா?

//ஆனால் அவர்கள் மதப்படி ,என்னால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை,// இது.... தப்பான எண்ணம் சாரு. உங்கள் கணவரும் அதே மதம்தானே! அது சம்'மதம்' ஆனால் அவரைப் பெற்றவர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாத மதமா?

//என்னவர் என்னை மதம் மாற சொல்ல வில்லை.// அதற்காகவே நீங்கள் நினைப்பது எல்லாம் சரியென்று கொள்ள வேண்டாம். //அவர் குடும்பத்துடன் சேர முடியாத வருத்தம் இருக்குமோ// நிச்சயம் இருக்கும். 5 வருஷம் ஒன்றாக வாழ்ந்த உங்களுக்கு இதில் 'இருக்குமோ, இருக்காதோ' என்கிற சந்தேகம் வரக் கூடாது. நிச்சயமாகச் சொல்ல முடிய வேண்டும். அவங்க வீட்டாரை விட்டு உங்களுக்காக வந்தார். இப்போ அவங்க வீட்டார் இறங்கி வந்து கூப்பிடுறாங்க என்னும் போதும் சமாதானமாகாவிட்டால் வருத்தம் இருக்காதா? இன்னும் ஒரு சின்ன விடயம் - ஆனால் நீங்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம் இருக்கிறது. //அவர் குடும்பத்துடன் சேர முடியாத வருத்தம்// இருந்தால் பரவாயில்லை. சேர்வதற்கு நீங்கள் இடம் கொடுக்கவில்லையே என்னும் வருத்தம் வந்துவிடக் கூடாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். இப்போ கோட்டை விட்டுவிட்டுப் பிறகு சந்தர்ப்பத்தை, 'வா வா' என்றால் வராது. நீங்கள் இப்போ தவிர்ப்பது... ஒரு வகையில் உங்கள் கணவர் & அவர் குட்டும்பத்தாரை நோகடிக்கும் வேலை.

//நான் சைவம் என்னவர் மீன் விரும்பி சாபிடுபவர் ,நான் அவருக்கு சமைத்து கொடுப்பேன் ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை .இதற்கும் என்னவர் வீட்டில் சாப்பிட்டு தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் .நான் என்ன செய்ய ,நான் அனுசரித்து போகாத மருமகளா// ;))))) மன்னிக்க வேண்டும். 'ஆமாம்' என்று பதில் சொல்ல விரும்புகிறேன். :-)

//என்னவர் மத நம்பிக்கையையும் மதிக்கிறேன்// மீன் சாப்பிடுவது கிறிஸ்தவ மதநம்பிக்கை அல்ல. :-) தனிப்பட்ட ஒரு நபரின் உணவுப் பழக்கம் & விருப்பு வெறுப்பு தொடர்பான விடயம் மட்டுமே.

நானும் 'சைவம்' தான். ஆனால் வேதம் அதாவது - கிறிஸ்தவம். :-) என் 'சைவம்' மதம் சார்ந்த 'சைவம்' அல்ல. இங்கு ப்ரொஃபைலில் அட்மின் ஒரு பகுதி வைத்திருக்கிறார். உணவுப் பழக்கம் - சைவம் / அசைவம் என்று. அந்த 'சைவம்'. :-) இலங்கையில் எங்கள் ஊரில் உணவுப் பழக்கத்தைக் குறிப்பிடும் போது சைவம் / அசைவம் என்று குறிப்பிட்டுப் பேசுவதில்லை. மச்சம் / மரக்கறி என்போம். அங்கு மதம் உள்ளே இழுபடுவது இல்லை.

//நான் அவருக்கு சமைத்து கொடுப்பேன்// வேறு வழி இல்லாவிட்டால் நானும் சமைப்பது உண்டு. //ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை// அது கஷ்டம்தான். மறுக்கவில்லை.

//இதற்கும் என்னவர் வீட்டில் சாப்பிட்டு தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம்// இந்த வரி கொஞ்சம் தெளிவில்லாமலிருக்கிறது. நீங்கள் தான் போகவில்லையே!! பிறகு 'கட்டாயம்' என்பது எங்கிருந்து வந்தது? அவர் வீட்டிற்குப் போயிருக்கிறீர்களா? எப்படிக் கட்டாயப்படுத்துகிறார்கள்? நிச்சயம் வலோற்காரமாகப் பிடித்து ஊட்டிவிட மாட்டார்கள். "வேண்டாம், வேண்டாம்," என்று மறுத்தும் உங்கள் தட்டில் மீன் பரிமாறுகிறார்களா? அப்படி ஆனால் நிச்சயம் உங்கள் கணவர் உங்கள் ஆதரவுக்கு வருவார். இயலாத பட்சத்தில், அவர்கள் வீட்டுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார். (நீங்கள் உங்கள் கணவரைப் பற்றிச் சொன்னதை வைத்து இப்படி ஊகிக்கிறேன்.)

//நான் என்ன செய்ய// உங்கள் கணவரோடு மனம் விட்டுப் பேசுங்கள். மச்சம் சாப்பிட இயலவில்லை என்பதைச் சொல்லுங்கள். புரிந்துகொள்வார். அங்கு போய் மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டுத் தன்மையாக மச்சத்தை மறுப்பது... நினைத்தால் உங்களால் முடியும்.

உங்கள் மறுப்புக்கு வேறு காரணங்கள் இருந்தால் உணவை ஒரு சாக்காகக் காட்ட முயல வேண்டாம். உணவை மதத்தோடு தொடர்புபடுத்தாதீர்கள்.

//நான் அனுசரித்து போகாத மருமகளா// அதை விடுங்கள். அனுசரித்துப் போகும் மனைவியாக முதலில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

//எனக்கு அம்மா இல்லை இறந்துவிட்டார்// இவரும் உங்கள் தாய் போல் தானே? இன்னொரு தாய். உங்களுக்கு வேண்டுமானால் மாமியார் தேவையில்லாமலிருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு அவர் பாட்டி. நீங்கள் நினைக்கும் போது வெட்டி, விரும்பும் போது ஒட்ட உறவுகளால் முடியாது.

//என்னவர் என்னை இப்பொழுதும் அதிக பாசத்தோடு பார்த்து கொள்கிறார்// என்கிறீர்கள்.. அவருக்காக ஒரு சின்ன அட்ஜஸ்ட்மண்ட், உங்களால் சாதுரியமாகச் சமாளிக்க முடியாதா?

யோசித்து நடவுங்கள்.
~~~~
ஒரு சின்ன வேண்டுகோள். ப்ரூஃப் பார்க்காமல் போஸ்ட் செய்கிறேன்.. 'பதிலளி' தட்டாமல் விட்டால் நாளை வந்து எழுத்துப்பிழைகளைத் திரருத்திவிட வசதியாக இருக்கும்.

இமாவுக்கு நல்லிரவு. :-)

‍- இமா க்றிஸ்

நன்றி இமா,நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம்,என்னுடைய மாமியார் வீட்டில் வந்து போக சொல்லவில்லை நான் அங்கேயே இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் (கட்டாயம் தான்),ஒருவேளை எங்கள் திருமணம் பற்றி பேசும்பொழுது நகை சம்மந்தமாக என்னுடைய மாமியார் பேசிய வார்த்தைகளோ அல்லது என்னவர் வீட்டில் என்னை எற்றுகொள்ளாத கோவமோ நான் அங்கு போக யோசிக்கிறேன் ,நாங்கள் PG முடித்த பிறகே திருமணம் பற்றி வீட்டில் பேசினோம் ,என்னவர் குடும்ப (அத்தை ) உறுப்பினர் வீட்டிற்கு சென்று சாப்பிட்ட அனுபவத்தில் கட்டாயம் அசைவம் சாப்பிட வேண்டும் என்றேன். மதத்தை ஏற்றுகொள்ள முடிவில்லை என்று எழுதியதற்கு மன்னிக்கவும் பின்பற்ற முடியவில்லை முழுமனதுடன்(முயற்சி செய்யாமல் இல்லை )

அன்புள்ள‌ சாருவுக்கு, உணவுப் பழக்கத்தினை வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே சைவம் அசைவம் என்ற‌ சொல் பயன்படுத்தப் படுகிறது. உறவினர்களில் சொந்த‌ அத்தை வீடுகளில் மணம் பேசும் போதும்கூட‌ இது போன்ற‌ விவாதங்கள் ஏற்படும். அது மட்டுமல்ல‌ உரிமை
இருந்தும் கூட‌ மணவினை நின்று நிகழாமல் போனதும் உண்டு,
எனவே நம் வழிபாட்டுமுறையைச் சார்ந்த‌ இறைவனை முன் நிறுத்தி
உணவுப் பழக்கத்தினை சைவம் அசைவம் என்று பிரிக்கவில்லை.
கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிரும் கைகூப்பித் தொழும்
என்ற‌ வள்ளுவர் வாக்கினை அடியொற்றி எத்தனையோ இஸ்லாமியார்களும்
கிறிஸ்த்துவர்களும் புலால் உண்ணா சைவ‌ உணவுப் பழக்கம் உடையவர்கள்
என்பதை நாங்கள் அறிவோம். சமூகத்தில் மிக‌ மிக‌ உயர்ந்த‌ இந்துக்களில்
அருமையான அசைவ‌ உணவுப் பிரியர்கள் (அமாவாசை அன்றும் கூட‌
விலை குறைவு என்று வெளுத்துக் கட்டியவர்களையும்) கண்டுள்ளோம்.
சைவம் ‍_ சிவனை வணங்குபவர்கள்//வைணவம் __ திருமாலை வழிபடுவோர் இது தான் வேறுபாடு, சைவம்/அசைவம் உணவினால்
கடைப்பிடிக்கப் படும் வேறுபாடு.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றி தோழி

//நான் அங்கேயே இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் (கட்டாயம் தான்),// உங்கள் கணவர் என்ன சொல்கிறார்?

//ஒருவேளை எங்கள் திருமணம் பற்றி பேசும்பொழுது நகை சம்மந்தமாக என்னுடைய மாமியார் பேசிய வார்த்தைகளோ அல்லது என்னவர் வீட்டில் என்னை எற்றுகொள்ளாத கோவமோ நான் அங்கு போக யோசிக்கிறேன்// ;) அப்போ உங்களுக்குக் கோபம் இருக்கிறது! இருக்கட்டும். ஆனால் அவர்கள் செய்த எதுவும் மன்னிக்கக் கூடாத குற்றங்கள் அல்லவே! கோபம் சாதிப்பது நல்லதல்ல. மன்னிப்பது... நமக்குப் பல விதங்களில் நன்மை செய்யும்.

//என்னவர் குடும்ப (அத்தை ) உறுப்பினர் வீட்டிற்கு சென்று சாப்பிட்ட அனுபவத்தில் கட்டாயம் அசைவம் சாப்பிட வேண்டும் என்றேன்.// அதே அனுபவம் உங்கள் மாமி வீட்டிலும் கிடைக்கும் என்பதில்லை. மகனுக்காக அவர்கள் விட்டுக் கொடுக்கக் கூடும்.

//பின்பற்ற முடியவில்லை// அது வேண்டாம். இப்போதும் சொல்கிறேன். மீன் சாப்பிடுவது மதம் அல்ல, மனிதம். //முழுமனதுடன்(முயற்சி செய்யாமல் இல்லை)// சாப்பிட முயற்சி செய்யச் சொல்லவில்லை. மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்யச் சொல்கிறேன். நானும் மரக்கறி சாப்பிடும் ஆள்தான். எங்கு போனாலும் சங்கடம் ஏதோ ஒரு ரூபத்தில் தட்டில் இருக்கும். :-) அதை விட்டு மீதியைச் சாப்பிடுகிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை.

உங்கள் மனம் சம்'மதம்' சொல்லும் வரை... மதம் உங்களுக்கு ஒரு பிரச்சினையாக குறுக்கே நிற்கத்தான் போகிறது. ;(

‍- இமா க்றிஸ்

இந்த வார்த்தையை அகராதியிலிருந்து நீக்க வேண்டும். :-)

இரவு நினைத்துக் கொண்டே தூங்கினேன். சுத்தம் - அசுத்தம், சத்தியம் - அசத்தியம் போல எதிர்க்கருத்து எடுத்தால்... அசைவம் - வைஷ்ணவம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்று மற்ற அனைத்து மதங்களையும், மதநம்பிக்கைகள் அற்றோரையும் குறிக்கும் சொல் ஆக வேண்டுமே! :-)))

உண்மையில் தாவர பட்சணி அல்ல என்பதைக் குறிக்கத் தான் பயன்படுத்துகிறோம்.

அருமையான பதில் பூங்கோதை.

‍- இமா க்றிஸ்

Enakum en husband kum jadhagam pathanga enga Amma.2perkum poruthame ilanu
Sonangalam.ivangaluku baby kidaikuradhu kastamnu sonangalam.manase kastama
Iruku ma.enaku idhu vara enna nadandhurkunu ungaluku therium.already na
Pakathula iruken.IPO idhu Vera.jadhagathula solradhellam unmaiya.(note:marriage kaga
En mamanar en husband jadhagatha change panirkarunu husband solraru).en husband
Edhu unmaiyanadhunu keta seriousa answer panamatranga.

unga redu perukum sekeram mariage agum.kadavul yar yaruku yaluthi vacherukaru.so dont worry.

hai my name is gayathri. arusuvaiku epa tha join pana. yanaku inioda 1 month aduthu.yanaku epauvume period thali tha varum. so intha thadava karumuttai valara injuction potu iruka. ana period agumanu bayama iruku. vairu romba valikuthu.

@ ஜோதி

//Enakum en husband kum jadhagam pathanga enga Amma.// பொதுவா கலியாணத்துக்கு முன்னால பார்ப்பாங்கன்னு தெரியும். //2perkum poruthame ilanu
Sonangalam./// இப்பவா?

//ivangaluku baby kidaikuradhu kastamnu sonangalam.// ம். ஜாதகம் பொருந்தினவங்களுக்கும் இப்போ இந்தப் பிரச்சினை இருக்கிற மாதிரித் தான் தெரியுது.

//manase kastama Iruku ma.// புரியுது. //enaku idhu vara enna nadandhurkunu ungaluku therium.// தப்பா எடுக்காதீங்க. நினைவுக்கு வரல எனக்கு. அப்பப்ப கேள்வியப் படிச்சு பதில் சொல்றதோட மறந்துருவேன். ஒன்றிரண்டு நாளைக்கு நினைவு இருக்கும். சிலசமயம் கேள்வியைப் பொறுத்து விடயம் நினைவுக்கு வரும். இப்போ வரல. ;( தேடிப் பார்க்கிறேன்.

//already na Pakathula iruken.// எங்க? யாருக்குப் பக்கத்துல இருக்கீங்க? புரியலயே கண்ணா. ;( தமிழ்ல எழுத முடியாதா?

//jadhagathula solradhellam unmaiya.// ;-) இமாவைக் கேட்கிறீர்கள்; "இல்லை," என்பேன். எனக்கு நம்பிக்கையே கிடையாது. //(note:marriage kaga En mamanar en husband jadhagatha change panirkarunu husband solraru)// ம். அப்படியானால் இப்போ கணவர் பக்கமிருந்து உங்களுக்குத் தொந்தரவு எதுவும் இராது. //en husband Edhu unmaiyanadhunu keta seriousa answer panamatranga.// ம். இதில் இமா எப்படி உதவ இயலும் என்று புரியவில்லையே!

எனக்கு நம்பிக்கையில்லை, அதனால் ஜாதகம் உண்மையில்லை என்பேன். உங்களுக்கு நிறைய இருக்கிறது. அதனால்தான் இந்தக் கேள்வியே, இல்லையா? பிறகு நான் சொல்லவதை எப்படி நம்பப் போகிறீர்கள்!! :-)

ஒன்றில் நம்பாமலிருங்கள். அல்லது வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். வீணாக யோசித்துக் குழம்ப வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்