கருமுட்டை வலர‌

எனக்கு திருமணம் ஆகி 2.5 வருடங்கள் ஆகிறது. ஒரு முறை கூட எனக்கு periods தள்ளி போனதில்லை. இப்பொழுது டாக்டர் follicular study report எடுக்க சொன்னார்கள். 2 மாதங்கள் test ல் கருமுட்டை size 1.7 தான் வந்தது. அந்த size rupture ஆகிவிட்டது. டாக்டர் அதன் size 2.0 வந்தால் தான் நல்லது என்று கூறினார். அதற்கு 2 மாதங்கள் HMG 75 injuction போட்டார். அப்பொழுதும் size அதிகமாகவில்லை. இந்த முறை FSH 75 injuction 2 போட சொல்லி இருக்கிறார்கள். எனக்கு இயற்கையாக கருமுட்டை வளர என்ன வழி என்று கூறுங்கள்.

மேலே சர்ச் பாக்ஸ் தெரியும். அங்கே முக்கியமான சொல்லைப் போட்டுத் தேடினால் பொருத்தமான இழைகளைக் காட்டும். நீங்கள் பிழையான பகுதிக்குள் நுழைந்து கேள்வியை வைத்திருக்கிறீர்கள். :-) http://www.arusuvai.com/tamil/forum/297 இதை ப்ரவ்சரில் போடுங்க. பிறகு சரியான தலைப்பில் க்ளிக் பண்ணுங்க. உள்ளே நிச்சயம் உங்களுக்குப் பயன்படும் இழைகள் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

பயப்படாதீர்கள்.. கருமுட்டை நன்கு வளர‌ பாசிப்பயறு அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். 2 நாளைக்கு ஒரு தடவை வேகவைத்து சாப்பிடுங்கள்.. எனக்கு தெரிந்தது இவ்வளவு தான் தோழி.

இமா அம்மா சொன்ன‌ மாதிரி மேலே உள்ள‌ சர்ச் பாக்ஸில் உங்களுக்கு வேண்டிய‌ தகவலை டைப் செய்தால் அது நிறைய‌ தலைப்புகளை (இழைகளை) காட்டும்.. அதில் உங்களுக்கு பொருத்தமான‌ தலைப்புகளை தேர்ந்தெடுக்கலாம்..

விரைவில் நீங்கள் தாய்மையடைய‌ என் வாழ்த்துக்கள் தோழி !!

- பிரேமா

நான் கொடுத்த இழையின் கீழ் உள்ள தலைப்புகளைப் பாருங்கள். பெரும்பாலான சகோதரிகள் பாசிப்பயறு, மலைவேம்பு இரண்டைப் பற்றியும் தான் பேசியிருக்கிறார்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இமா அம்மா. நான் அறுசுவைக்கு புதுசு. அதுனால எனக்கு எதுல போடணும்னு தெரியல. இனிமே நீங்க சொன்ன box ல பாக்குறேன்.

ரொம்ப நன்றி பிரேமா அக்கா. நான் கண்டிப்பா பாசிப்பருப்பு சாப்பிடுறேன். 2 மாசமா இதுக்கு என்ன பண்றதுனு தெரியாம injuction ஆ போட்டுட்டு இருக்கேன். நேத்து டெஸ்ட் எடுத்ததுல கொஞ்சம் வளர்ச்சி அடஞ்சி இருக்குனு டாக்டர் சொன்னாங்க. கூடவே நீங்க சொன்ன மாதிரியும் செய்றேன். எனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க.

மேலும் சில பதிவுகள்