PRIYA PRABHU

NAAN THALAIKKU KULITHU 10VATHU NAL MUTHAL ONRU SERTHEN KADANTHA 5 NATKAL ONRU SERTHEM 2NATKAL ENVAYIRIL ETHO ORU MATTRAM PINAVATHU PONRU THONRUKIRATHU ATHU EN?
ENAKKU PAYAMAGA ULLATHU ENAKKU KARU THANGATHA SOLLUNGAL PLS

நான் நேற்று hospital blood test பன்னேன். Negativeநு வந்தது. அப்படி இருக்க வாய்ப்பு இருக்கா.ஏனென்றால் எனக்கு 51 நாட்கள் ஆகிவிட்டது. டாக்டர் period ஆக மாத்திரை குடுத்திருக்காங்க. எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு.

உங்களை தான் நினைத்து கொண்டிருந்தேன்.. ப்ளட் டெஸ்டில் நெகட்டிவ் வந்தால் என்னவென்று தெரியவில்லை ராஜி.. எதற்கும் நீங்கள் 60 நாட்கள் வரை காத்திருங்கள்.. சில‌ பேருக்கு கரு தெரிவதற்கு 60 நாட்களுக்கு மேல் ஆகும்.

என் தோழி ஒருவருக்கு 60 நாட்கள் வரை ப்ளட் டெஸ்ட் மற்றும் யூரின் டெஸ்ட் அனைத்திலும் நெகட்டிவ். அவருக்கு 65 நாட்களில் தான் கன்ஃபார்ம் ஆனது.. அதனால் மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள்.. நல்லதே நடக்கும்.

// டாக்டர் period ஆக மாத்திரை குடுத்திருக்காங்க. // இந்த‌ மாத்திரை போட்டால் கரு இல்லையென்றால் பீரியட் ஆகிவிடும்.. கரு இருந்தால் பீரியட் ஆகாது.. அதனால் நம்பிக்கையை இழக்காதீர்கள் தோழி.. உங்கள் கஷ்டம் புரிகிறது.. என் தோழி 60 நாட்கள் ஆகியும் எந்த‌ முடிவும் தெரியாமல் தவித்த‌ போது அவருடைய‌ மன‌ நிலைமை எப்படி இருந்திருக்கும் ?

பாசிட்டிவா நினைங்க‌!! ப்ளீஸ்

- பிரேமா

நீங்க பேசியது மிகவும் ஆறுதலாக உள்ளது. இப்போது ப்ரீயட் ஆனாலும் பரவாயில்லை.என் கஷ்டம் என்னவென்றால் என் கணவர் லீவ் வர 3 மாதம் ஆகும்.நான் அது வரை காத்துக் கொண்டு இருக்கணும்.ஏற்கனவே திருமணம் ஆகி 4 வருடம் ஆகி விட்டது. அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.

வருத்தப்படாதீங்க‌ ராஜி.. நல்லதே நடக்கும் பா.. சீக்கிரம் கன்ஃபார்ம் ஆகும்..

//திருமணம் ஆகி 4 வருடம் ஆகி விட்டது// ஒரு வேளை பீரியட்ஸ் வந்தால் என்ன‌ மூன்று மாதம் தானே காத்திருக்க‌ வேண்டும்.. அதற்குள் நீங்கள் உங்கள் உடம்பை நன்றாக‌ வைத்துக் கொள்ளுங்கள். ஃபோலிக் ஆசிட் மாத்திரை மிகவும் முக்கியம்..

நீங்கள் விரைவில் தாயாவீர்கள் தோழி.. டோன்ட் வொரி

- பிரேமா

கத்திருக்கிறேன் குழந்தைக்காக. அந்த கடவுள் என் மீது இரக்கம் காட்ட வேண்டும். கடவுளை நம்புவோம்.

நிச்சயம் கடவுள் உங்களுக்கு அந்த‌ வரத்தை தருவார் ..

உங்கள் வயது என்ன‌ இருக்கும் ?

- பிரேமா

என் வயது 26

கடந்த நான்கு வருடமாக கடவுளைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.ஆனால் கடவுள் இவ்வளவு சோதனைகளை எனக்கு கொடுக்கக்கூடாது.

26 ஆ ? அப்படியென்றால் உங்களுக்கு 22 வயதில் திருமணமா? மே பி உங்கள் உடம்பில் ஏற்பட்ட‌ ஹார்மோன் சேஞ்சஸினால் கூட‌ இப்படி இருக்கலாம் தோழி.

நீங்கள் வருத்தப்படும் அளவுக்கு உங்களுக்கு வயதாகவில்லை.. 26 வயதுக்கு மேல் தான் தாயாக‌ சரியான‌ வயது என்பது என் கருத்து..

வருத்தப்படாமல் நம்பிக்கையோடு இருங்கள். கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகம் படியுங்கள்

- பிரேமா

ராஜி, யாருக்கு தான் சோதனைகள் இல்லை ? அனைவரும் அதனோடு தான் போராடி வாழ்ந்து வருகிறோம்..

முருகனை வணங்குங்கள்.. நல்லது நடக்கும்..

என் பக்கத்துவீட்டு தோழி ஒருவருக்கு 10 வருடம் கூட‌ குழந்தை இல்லாமல் 11 வது வருடம் குழந்தை பிறந்திருக்கு. என் உறவினர் ஒருவருக்கு 7 வருடங்களாக‌ குழந்தை இல்லை.. சஷ்டி விரதம் இருந்த‌ அடுத்த‌ மாதம் குழந்தை தங்கிவிட்டது.

எல்லாம் சாத்தியமே!! நம்பிக்கையோடு காத்திருங்கள்

- பிரேமா

மேலும் சில பதிவுகள்