pls help me

Frds,enakku last month medical abortion pannanga
kuzhandai hrt. Beat stop agidichinu.next scan
Edutthu parthppa clear agidichinu sonnanga.
But 12daysla period vandhudichi.Dr kitta poittu vandhom
Tablet kodutthanga period regularaga.but veetla
Vendamnu sonnanga eana adhu karutthadai tablet
Udambu edhana aaga podhunu sollave naanum podala
But ippa enakku 17 days a bleeding agittu irukku.enna
Pandradhanu theriyala pls help me.

//Dr kitta poittu vandhom Tablet kodutthanga period regularaga.// நீங்க சொன்ன விபரம் தான் இது. //but veetla Vendamnu sonnanga eana adhu karutthadai tablet// :-) இல்லை. அது ஹோர்மோன் மாத்திரை. பொதுவாக எந்த ஒரு மாத்திரைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடு இருக்கும். அவை கருத்தடை மாத்திரைகளாகப் பயன்படுத்தக் கூடியவை தான். ஆனால் கருக்கலைப்பு மாத்திரைகள் அல்ல.

//Udambu edhana aaga podhunu// எதுவும் ஆகாது. எடுக்காவிட்டால்தான் ஆகச் சாத்தியம் இருக்கிறது.

//naanum podala// கர்ர்.. //17 days a bleeding agittu irukku.// மாத்திரையை எடுத்திருந்தா இப்படி ஆகி இராது. //enna Pandradhanu theriyala// வைச்சிட்டு இருந்தா வீக் ஆகிருவீங்க. தப்பு பண்ணாதீங்க. திரும்ப போய்க் காட்டுங்க. மறக்காம & மறைக்காம மாத்திரையை எடுக்கல என்கிறதை டாக்டர்ட்ட சொல்லணும். திட்டினா பரவாயில்லை. மறைக்கப் படாது. அப்போ தான் டாக்டர் சரியானபடி ட்ரீட்மண்ட் கொடுக்க முடியும்.

பொதுவா இப்படி D&C செய்தால் 6 மாதம் (சிலருக்கு கூடக் குறைய சொல்வார்கள்) கருத்தரிக்காமலிருப்பது நல்லது என்பார்கள். கருப்பை மீண்டும் தன் பழைய நிலையை அடைய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதற்காக. நீங்கள் மாத்திரையை எடுக்காமல் விட்டு கர்ப்பம் ஆனாலும் சிரமம் உங்களுக்குத்தான்.

டாக்டர் சொல்வதைக் கேட்டு நடங்க. மற்றவர்கள் அது இது என்பார்களே தவிர அவர்களால் உங்கள் வலிகளில் கால் பங்கைக் கூட வாங்கிக் குறைக்க முடியாது. அனுபவிப்பது எல்லாம் நீங்கள் மட்டும்தான். யோசித்து நடங்க.

‍- இமா க்றிஸ்

Thank u so much.,

மேலும் சில பதிவுகள்