சாதம் பிரட் போண்டா

தேதி: February 28, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாதம் - 2 கப்
பிரட் - 4 ஸ்லைஸ்,
கடலை மாவு - 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
பூண்டு - 2 பல்,
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - சுடுவதற்கு.


 

பூண்டு நசுக்கி வைக்கவும்.
பெரிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
பிரட்டை நீரில் நனைத்து, பிழிந்து, மசித்த சாதத்துடன் சேர்க்கவும்.
கடலை மாவு, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்தில் பிசையவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.


மீந்து போன சாதத்தை வீணாக்காமல் மாலையில் சிற்றுண்டியாக செய்யலாம்.
மாவு தளர இருந்தால் தான் போண்டா மெத்தன்று இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சகோதரி அவர்களுக்கு உங்கள் குறிப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.புதுமையாகவும் இருக்கிறது
இந்த சாதம் பிரெட் போண்டா நன்றாக இருந்தது. மேலும் நிறைய குறிப்புகள் கொடுக்க வேண்டும்

Thank u very much madam. I am very happy to receive praises from an expert like u, who has given more than 100 receipes. Thank u very much. Sorry for writing in English, the Tamil fonts are NOT working in this box.

அன்புடன்,
செல்வி.

சகோதரி அவர்களுக்கு நீங்கள் அதிகமாக குறிப்புகள் கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது கூடிய விரைவில் 100 குறிப்புகள் கொடுக்க இப்பபொழுதே வாழ்த்திவிடுகிறேன்.என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி, உங்களைப் போன்றோரின் குறிப்புகள் தான் என்னை எழுத தூண்டியது. என் கணவரின் முழு ஒத்துழைப்பும், ஊக்கமும் தான் இவ்வளவு விரைவாக கொடுக்க முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதரர் பாபு அவர்களின் வழிகாட்டுதல் முக்கிய காரணம். நன்றி.

அன்புடன்,
செல்வி.