ஞானப்பல் (கர்பமாக உள்ளேன்) உதவுங்கள் - 33434 | அறுசுவை மன்றம்
forum image
ஞானப்பல் (கர்பமாக உள்ளேன்) உதவுங்கள்

தோழிகளே நான் 4மாதம் கர்பமாக உள்ளேன். எனக்கு ஒரு பல் முளைக்குது ரொம்ப வலிக்குது, வீக்கம்மாக இருக்கிறது இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை மருந்து எதுவும் எடுக்கவும் முடியாது என்ற செய்வது .. நான் கூகிள் இதை பற்றி தெரிந்து கொள்ள தேடினேன் அதில் இது புற்றுநோய் மாற வாய்ப்புள்ளது னு போட்டு ருக்மாங்கதன் பயமாக உள்ளது தயவு செய்து உதவுங்கள் தோழிகளே


ஞானப்பல் கர்பமாக உள்ளேன்

யாருக்காவது இப்படி இருந்தது தயவு செய்து உதவுங்கள் தோழிகளே

I love my family

sree

// தோழிகளே நான் 4மாதம் கர்பமாக உள்ளேன். எனக்கு ஒரு பல் முளைக்குது ரொம்ப வலிக்குது, வீக்கம்மாக இருக்கிறது இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை // அப்போ டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள் அது தான் சிறந்தது .// நான் கூகிள் இதை பற்றி தெரிந்து கொள்ள தேடினேன் அதில் இது புற்றுநோய் மாற வாய்ப்புள்ளது // இதற்க்கு என்ன சொல்லவது என்று தெரியவில்லை எனக்கு நீங்கள் வீணாக கவலை படுகிறீர்கள் . அது போல் ஒன்றும் இருக்காது வீணாக பயப்பிட வேண்டாம் தோழி அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு இருந்தால் அதை தெளிவு பெற டாக்டரிடம் செலாவது நல்லது மனச போட்டு குழப்பிக்காம நல்லதே சிந்தியுங்கள் இதையே நினைத்து கொண்டி இருக்காமல் மனசை அமைதியாக வைத்திருங்கள்

firoz

நான் பார்கிற டாக்டரை 20 தேதி தான் பார்க்க முடியும் என்ற செய்யனும் புரியலபா பல் டாக்டர் கிட்ட போனால் ஏதாவது ஊசி மருந்து எதுவும் செய்வாரோ ருமேனியா பயமாக இருக்குபா

I love my family

ஸ்ரீ ஹர்ஷா

பல் டாக்டரிடமே சென்று கர்ப்பமாக இருப்பதையும் சொல்லுங்கள்.. அதற்கேற்ற மாதிரி மருந்து கொடுப்பார்கள்..எனக்கு அனுபவம் இருக்கிறது.

அவந்திகா

அவந்திகா

உங்களுக்கும் இது போல் பல் முளச்சதா இது எதுவும் ஆபத்தா உங்க அனுபவத்தை சொல்லுங்கபா

I love my family

ருமேனியாவும் ருக்மாங்கதனும்

@ ஸ்ரீஹர்ஷா...

:-) //பல் முளச்சதா இது எதுவும் ஆபத்தா// ஆபத்து ஒன்றும் இல்லை. கிடைச்ச பதில் எல்லாம் படிச்சுட்டும் ஆபத்தா என்கிறீங்க. ஞானப் பல் லேட்டா முளைக்கிறது தான். வெளியே வர சிரமப்பட்டால் டென்டிஸ்ட் என்ன செய்யலாம் என்கிறதைச் சொல்லுவாங்க.

எல்லாரும் அடுத்த அப்பாயின்மண்ட் வரை டாக்டர்ட்ட போகக் கூடாது என்று நினைக்கிறது விநோதமா இருக்கு. முடியாம இருந்தா உடனே தான் டாக்டர்ட்ட போகணும். அப்பாயின்மண்ட் வரும் வரை நோய் காத்திராது.

பல்வலி வந்தால் கான்சர்னு எதுக்கு நினைக்கிறீங்க! சரி... அப்படி நினைக்கிறவங்க உடனே டாக்டரைப் பார்க்க வேண்டியது தானே! எதுக்கு இங்க கேட்டுட்டு இருக்கிறீங்க? //இது போல் பல் முளச்சதா// பெரும்பாலானவர்களுக்கு இது போல் தான் ஞானப்பல் முளைக்கிறது. நீங்க ஹாயா அனுபவம் கேட்கிறதைப் பார்த்தா... ரொம்ப வலிக்கல; பொறுக்கக் கூடிய வலிதான்னு தோணுதே! :-)

//புற்றுநோய் மாற வாய்ப்புள்ளது னு போட்டு ருக்மாங்கதன் பயமாக உள்ளது// & //பல் டாக்டர் கிட்ட போனால் ஏதாவது ஊசி மருந்து எதுவும் செய்வாரோ ருமேனியா பயமாக இருக்குபா// அது என்ன ருக்மாங்கதனும் ருமேனியாவும்! அந்த அளவுக்கு டென்ஷனா இருக்கீங்களா? ஒரு டென்டிஸ்ட்ட போங்க. நீங்க ப்ரெக்னண்ட் என்கிறதைச் சொல்லுங்க. மீதி எல்லாம் அவர் பார்த்துப்பார்.

‍- இமா க்றிஸ்

imma

நீங்கள் கூறுவது சரிதான் பெரிய வலி இல்லை தாஙகிகிற அளவுக்கு இருக்கு ,என்னோட டாக்டர் கிட்ட அப்பாயின்மென்டுகாக சொல்லவில்லை அவங்க பையனுக்கு திருமணம் அதனால் பார்க்க முடியாது , இரண்டு நாட்கள் ஆகும் வலி அதனால் சிலரிடம் கேட்டேன் கர்ப்பமா இருக்க அப்படி இப்படினு சொல்றாங்க அது போக கூகுள் பார்தா புற்று வர வாய்ப்பு இருக்குனு போட்டதால தான் பயந்து போய் கேட்டேன் என்னுடைய தோழிகளே உங்களிடம் கேட்டால் எதுவும் நல்ல பதில் கிடைக்கும்னு கேட்டேன் கொஞ்சம் பயமும் குழப்பமும் தீருமேனு கேட்டேன் தவறாக இருந்தால் மண்ணித்து விடுங்கள் ... இருந்தாலும் இந்த வலி குறைந்து நார்மல்கு வர்ர வரைக்கும் கவலையாக இருக்கும்...பார்போம் கடவுள் விட்ட வலி.நடப்பவை நன்மைகே

I love my family

டாக்டர் வரும் வரை அவருக்கு

டாக்டர் வரும் வரை அவருக்கு பதில் ஒரு ஜெனரல் டாக்டர் அங்கு இருப்பார் சிஸ் , பயம் வேண்டாம்

SREE HARSHA

ரொம்ப‌ வலி இருந்த‌ டாக்டர்கிட்ட‌ போங்க‌ பா,தாங்க‌ கூடிய‌ வலி என்றால் கொஞ்சம் உப்பு எடுத்து வலி உள்ள இடத்தில் அழுத்துங்கல்,உப்பு நீர் கரைந்ததும் அதை வெலியே துப்பிவிட்டு,வெதவெதப்பான வெந்நீரில் கொப்பிலியுங்கல் பா சரியாகிவிடும்.
இந்த‌ டைம்லா கூகிள் போட்டத எல்லாம் படிச்சு வீணா மனசபோட்டு குழப்பிக்கதிங்க‌ பா

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

கனவு பலிக்குமா

எந்த கனவு வந்தாலும் அசால்டாக நினைப்பேன்,யாராவது கனவு கண்டேனு சொன்னா கேளிக்கை செய்வேன் இப்பம் நான் கண்ட கனவை நினைத்து பயமாகவும் கவலையாக இருக்கிறது என் கனவில் நான் யாருன்னு தெரியல பேசிட்டு இருந்தேன் அப்பம் அவங்கள்ட கேட்கிறேன் என்னோட முடி ரொம்ப கொட்டுது ஏன்? அதுக்கு அந்த லேடி சொன்ன பதில் (உன் தாலிய பத்திரமா பார்த்துக்கொள்) . எதுக்கு இப்படி ஒரு கனவு சம்மந்தமே இல்லாம கஷ்டமா இருக்கு .தாலி யவச்சி கனவு கண்டதால் தான் குழப்பத்தில் இருக்கிறேன் . உதவுங்கள் தோழிகளே

I love my family