வேெள்ளை படுதல்லும் பிரசவமும் - 33435 | அறுசுவை மன்றம்
forum image
வேெள்ளை படுதல்லும் பிரசவமும்

எனக்கு 37 வாரமும் 4 நாட்களும் ஆகிறது. சி கடந்த 4 நாட்களாக வெள்ளை படுதல் அதிகமாகவும் மஞ்சள் நிறமாகவும் ஜெலி போன்றும் உள்ளது. இன்று மிக இதிகமாக உள்ளது இது பிரசவம் நெருங்கியதற்கான அறிகுறியா? பயமாக உள்ளது. வயிறு சிலசமயம் மாதவிடாய் ஏற்படும்போது வலிப்பது போல வலிக்கின்றது.


கஜலட்சுமி

எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது.. உங்களுக்கு வாழ்த்து சொல்லத்தான் வந்தேன்..
உங்கள் டெலிவரி தேதி எப்போது?
நீங்கள் சுகமாக‌ உங்கள் குழந்தையை பெற்றெடுக்க‌ என் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள் !!!

வாழ்க‌ வளமுடன்
பிரேமா உலகராஜ்
~~~~~~~~~~~~~~~~
❤❤❤♥ எங்கள் வீட்டு இளவரசி... யாழினி ❤❤❤♥

காஜலெட்சுமி

// இன்று மிக இதிகமாக உள்ளது இது பிரசவம் நெருங்கியதற்கான அறிகுறியா?// இந்த மாதிரி இருக்குனு தெரிஞ்ச‌ டாக்டார்கிட்ட‌ போங்க‌ பா.ஏனா டாக்டர்கள் குறிச்சு தர‌ தேதியிலே குழந்தை பிரப்பு முன்ன‌ பின்ன‌ இருக்கு.நீங்க‌ வெயிட் பன்னமா டாக்டர்கிட்ட‌ போங்க‌ பா

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

kajalakshi

முதலில் பயத்தை விடுங்கள் பிரசவ வலி வந்த கூட உங்கள் பயம் அதை போக்கிவிடும் பயம் வேண்டாம் எனக்கு பிரசவலி அறிகுறியெல்லாம் தெரியாது ஏன் என்றால் எனக்கு அது போல நடந்தத்த்து இல்லை எனக்கு ஆப்ரேசன் தான் இருந்தாலும் என் மனசுல தோன்ற கருத்தை சொல்லுகிறேன் அது உங்களுக்கு சரியாக பட்டதுனா அதன் படி செயுங்கள்

// சி கடந்த 4 நாட்களாக வெள்ளை படுதல் அதிகமாகவும் மஞ்சள் நிறமாகவும் ஜெலி போன்றும் உள்ளது // உங்களுக்கு வலி ஏதாவது வருவது போல் இருக்கின்றதா இல்லை அப்போ அப்போ விட்டு வலி இருந்தால் கூட நீங்கள் உடனடியா டாக்டரிடம் செல்லுங்கள் அதன் தான் உகந்தது எனக்கு தோன்றுகிறது .// இன்று மிக இதிகமாக உள்ளது இது பிரசவம் நெருங்கியதற்கான அறிகுறியா?// ஒரு வேலை அப்படி கூட இருக்கலாம் ஆனால் எனக்கு இதை பற்றி சரியாக தெரிய வில்லை வலி வந்தால் தாமதிக்காமல் ஹாஸ்ப்பிட்டல் செல்வது நல்லது .

// பயமாக உள்ளது. // எதற்கு பயம் உங்களுக்கு டாக்டர் டெலிவரி சொன்ன தேதி என்ன சில பேருக்கு டாக்டர் சொன்ன தேதிக்கு முன்னதாகவே குழந்தை பிறந்து இருக்கு ஏன் என்னையே எடுத்து கொள்ளுங்கள் எனக்கு டாக்டர் சொன்ன தேதி வேறே ஆனால் 2 வாரத்துக்கு முன்னதாகவே டெலிவரி ஆகிடுச்சு ஏன் என்றால் எனக்கு வலி வர ஆரம்பிச்சிடுச்சு எனக்கு ஏற்கனவே 2ண்டு குழந்தை ஆபரேஷன் என்பதால் வலி வர கூடாதுனு ஆப்ரேசன் பன்னிட்டாங்க உங்களுக்கு இருந்த அறிகுறி தான் எனக்கும் இருந்தது அதனால் கவனமா இருங்கள் 5 நிமிசத்துக்கு விட்டு விட்டு தொடர்ந்து வலி வந்தால் நீங்கள் உடனடியாக ஹாஸ்ப்பிட்டல் செல்வது நல்லது. பயம் வேண்டாம் இறைவன் மேல் பரத்தை போட்டு கவனமாக இருங்கள் எல்லாம் அவன் பார்த்து கொள்ளுவான் கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள்

kajalakshi

எனக்கும் உங்களைப் போல தான் டெலிவரி டேட் க்கு 6நாள் முன்னாடி மஞ்சள் கலந்த ஜெல் போன்று அதிகமாக வந்தது பயந்து ஹாஸ்பிடல் போனா டாக்டர் டேட் நெருங்க நெருங்க அப்படி தான் வரும்னு சொன்னாங்க பா , கர்ப்ப பை வாய் ஓபன் ஆகுறதுக்கு முன்னாடி இப்படித்தான் வரும்னு சொன்னாங்க எதுக்கும் நீங்க ஒரு முறை டாக்டர போய் பாருங்க ... ப்லீடிங் ஆனா தாமதிக்காம போய்டுங்க

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

வெள்ளை படுதல்

நான் 5 மாதம் கர்பமாக உள்ளேன் எனக்கு நேற்று இரவு மற்றும் இன்று காலையில் ஜெல் மாதிரி வெள்ளையா பட்டுச்சிபா இது நார்மலா பா கொஞ்சம் சொல்லுங்கப்பா

I love my family

help me friends

Help me

I love my family

sree harsha

இது நார்மல் தான் பா பயம் வேண்டாம்

ப்ரோஸ்

உங்களுக்கு 3 குழந்தைகள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.. என்னென்ன குழந்தைகள்? என்ன வயது? விரும்பினால் சொல்லுங்கள்..கட்டாயம் இல்லை..:-)

அவந்திகா

அவந்திகா

அவந்திகா எனக்கு இரண்டு பசங்க ஒரு பொண்ணு பொண்ணுக்கு இப்ப தான் பிறந்தா நாள் முடிந்தது பசங்களுக்கு பெரியவருக்கு 11 சின்னவருக்கு 7