தேங்காய் வெங்காயம் தயிர் பச்சடி.

தேதி: February 28, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தயிர் - 1/4 லிட்டர்,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - 5,
துருவிய தேங்காய் - 1/4 மூடி,
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்,
குண்டு உளுந்து - 3 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போடவும்.
நன்கு சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும்.
1 நிமிடம் வதக்கிய பின், இறக்கி ஆற விடவும்.
நன்கு ஆறிய பின் தயிருடன் உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்