ஸரிகமபதனிஸ‌ ////// 2 | அறுசுவை வலைப்பதிவு
blog image

ஸரிகமபதனிஸ‌ ////// 2

''கூலி மிகக் கேட்பார். கொடுத்தது எல்லாம் தாம் மறப்பார்.'' என்று மகா கவி பாரதியார் வேலை செய்யும் உதவியாளர்களைப் பற்றி சொல்வார். ஆனால் என் வீட்டில் பணி புரிந்த‌ சரோஅம்மா மிகவும் நல்லவர். என் வசதியை கவனம் பார்ப்பார்கள், அவர்கள் வசதியை பார்க்கமாட்டார்கள். எந்த‌ வேலையையும் சுறுசுறுப்பாக‌ செய்வார். நாங்கள் காலை நேரத்தில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் ''நீ சாப்பட்டாயா? நான் சாப்பிட்டேனா? லன்ச் பாக்ஸ் எடுத்தோமா? வீட்டை பூட்டினோமா, யார் சாவி எடுத்து செல்வது? '' என்று ஒரு குரு
ஷேத்திர போர்க்களமாக‌ இருக்கும். ஆனால் சரோம்மா கூலாக‌ ''அம்மா நீங்க‌ வேலைக்குப் போங்க‌ நா நிதானமா வந்து என் வேலையை செய்கிறேன்''நு சொல்லிட்டு மாடிப்படியில் உட்கார்ந்துவிடுவார். நமக்கு இடைஞ்சல் தராமல், நமக்கு ஏற்ப வீட்டுவேலை உதவியாள் கிடைப்பதுக் கூட‌ ஒரு வரம் ஆகும். அந்த‌ வரம் சரோம்மா வடிவில் கிடைத்தது.
அவர்களுக்கு தேவை நொய் கஞ்சி, வெற்றிலை, பாக்கு. அவ்வளவுத் தான். கஞ்சியைக் குடித்துவிட்டு பொறுமையா வெத்திலைப் போட்ட சுகத்துடன் எல்லா வேலைகளையும் சுத்தமா செய்வார். அதுவும் இல்லாம‌ தான் ஒழுங்கா, சுத்தமா எல்லா வேலையும் செய்தோமானு தன் வேலையை தானே மேற்பார்வை செய்வார். அவர்களது இந்த‌ குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒவ்வொரு பண்டிகைக்கும் ''எனக்கு சேலை வேண்டாம், யாராவது பழைய‌ சேலை கொடுப்பார்கள் அதுவே எனக்குப் போதும், எங்கள் வீட்டில் மண்சட்டிதா இருக்கு, ஸ்டீல் சாமான் இல்ல‌. நீங்க‌ தட்டு, கிண்ணம், குடம் நு கொடுத்தா நல்லா இருக்கும், அதுக்கூட‌ நா எனக்குனு கேட்கல்ல‌. என் மகனுக்கு பேத்திய‌ கட்டிக்கப் போற‌
அவர்களும் இல்லாத‌ பட்டவங்க‌, அவங்க‌ கொடுப்பதுடன் நாமும் கொஞ்சம் சேர்த்துவைப்போமே. நாந்தா மண்செட்டியாட‌ வாழ்ந்துட்டேன், என் பிள்ளை, மறுமகள் சாமான் செட்டோட‌ வாழறத‌ பார்க்கனும்னு ஆசை தாம்மா'' நு வெள்ளந்தியா சொல்லும். அதற்காகவே நாங்க‌ எந்த‌ ஊருக்கு டூர் போனாலும் சரோம்மாவுக்கு ஆசைப் பட்ட‌ பாத்திரத்தை முதலில் வாங்கி விடுவேன். அப்புறம் தான் எனக்கு.
ஆனால் ஆசைஆசையாய் பொருட்களை சேர்த்த‌ அந்த‌ தாய், அந்த‌ மகன் வாழ்ந்த‌ வாழ்க்கையை பார்க்க‌ கொடுத்து வைக்கவில்லை. அவள் ரசித்து தின்ன‌ வெத்திலையே அவளுக்கு எமனாக‌ வந்துவிட்டது.எங்கள் பூஜைக்கு பயன்படுத்திய‌ வெத்திலய‌ கொடுப்பதுடன், யார் வீட்டில் தாம்பூலம் கொடுத்தாலும் கேட்டு வாங்கி வந்து சரோம்மாவுக்கு கொடுப்பதில் அவ்வளவு சந்தோஷம். அதிகமான‌ வெத்தில்ல‌ பழக்கத்தினால் அவளுக்கு வாயில் புற்று நோய் வ்ந்துவிட்டது, பாவம் மிகமிகப் கேவலப்பட்டு இறந்து விட்டாள்.
அவளது மகனும் குடிப்பழக்கத்தால் இறந்துவிட்டான். மறுமகள் தாய் வீட்டிற்கே சென்று விட்டாள். குடும்பமே சிதைந்துவிட்டது.
சரோம்மா இறந்து பத்து வருடம் ஆகிவிட்டது. அவளது இறப்பிற்கு பண‌ உதவி செய்ததுடன், பதினாறாம் நாளுக்கும் படையலுக்கு தேவையான‌ பொருட்களை கொடுத்து அந்திம‌ காரியங்களை செய்யச் சொன்னோம். இன்று வரை அவள் பேரன் படிப்பதற்கு உதவி, பண்டிகை காலங்களில் உடை, செலவுக்கு பணம் கொடுத்து வருகிறோம். அவள் போல் வேலையாள் கிடைப்பது கடினம். ஒவ்வொரு நாளும் காக்கைக்கு சாதம் வைத்து அவள் பெயரையும் சேர்த்தே சொல்வேன் இதுதான் நான் அவளுக்கும் செய்யும் நன்றிக் கடன். இந்த‌ சரோம்மா தான் எனது இரண்டாவது தோழி ரி, ரி, ரி.

4.142855
Your rating: None (7 votes)

சரோம்மா

அற்புதம் ரஜினி.
சரோம்மா போல‌ முழுமனதுடன் வேலை செய்யும் ஆட்கள் கிடைப்பது கடினம். அதிகம் ஆசைப்படாமல் திருப்தியாக‌ வாழும் மனசு உங்க‌ தோழி சரோவுக்கு. அவங்களை தோழியாக‌ நினைக்கும் உங்களுக்கும் உயர்ந்த‌ மனசு தான். :))

ரஜினி

முதலில் இப்படி பட்ட‌ ஒருவரை பற்றி பகிர்ந்ததற்கு மிக்க‌ நன்றி ..

//அவர்களுக்கு தேவை நொய் கஞ்சி, வெற்றிலை, பாக்கு. // என் கண் முன்னே அப்படியே அந்த‌ சரோம்மா வந்து போறாங்க‌. நீங்க‌ சொல்றத‌ வைச்சே என்னால‌ அவங்க‌ உருவத்தை ஊகிக்க‌ முடிகிறது..

//அந்த‌ வரம் சரோம்மா வடிவில் கிடைத்தது.// உண்மை.. நிச்சயம் அப்படிப்பட்ட‌ ஒரு நல்ல‌ நம்பிக்கைக்குரிய‌ ஆள் கிடைப்பது ரொம்ப‌ கஷ்டம்.. வேலையாட்களால் குடி கெட்டுப்போனவர்களையும் பார்த்திருக்கிறேன். அந்த‌ விஷயத்தில் நிஜமாகவே நீங்கள் வரம் பெற்றிருக்கிறீர்கள்.

//அவள் ரசித்து தின்ன‌ வெத்திலையே அவளுக்கு எமனாக‌ வந்துவிட்டது// அவர்கள் வெற்றிலையுடன் புகையிலை அல்லது ஏதேனும் ஒரு பான் அதிகம் சேர்த்திருப்பார்கள்.. அதனாலே இவ்வாறு ஆகியிருக்கிறது.. (அந்த‌ பழக்கத்திலிருந்து அவர்களை வெளி கொண்டு வருவது ரொம்ப‌ கஷ்டம்)

//அந்த‌ மகன் வாழ்ந்த‌ வாழ்க்கையை பார்க்க‌ கொடுத்து வைக்கவில்லை.// அவர்களது மகன் குடித்தே இறந்து போனதாக‌ சொல்லியிருக்கிறீர்கள்.. நல்ல‌ வேளை அந்த‌ தாய் உயிருடன் இருக்கும் போது அந்த‌ மகனின் இறப்பை எப்படி தாங்கியிருப்பார்?

//இன்று வரை அவள் பேரன் படிப்பதற்கு உதவி, பண்டிகை காலங்களில் உடை, செலவுக்கு பணம் கொடுத்து வருகிறோம். // இந்த‌ காலத்திலும் இது போன்ற‌ உதவி செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. உங்கள் சேவை மனப்பான்மையை நான் வெகுவாக‌ பாரட்டுகிறேன்..

//ஒவ்வொரு நாளும் காக்கைக்கு சாதம் வைத்து அவள் பெயரையும் சேர்த்தே சொல்வேன்// கிரேட்.. உங்களுக்கு ஒரு சல்யூட் ..

வாழ்க‌ வளமுடன் !!

வாழ்க‌ வளமுடன்
பிரேமா உலகராஜ்
~~~~~~~~~~~~~~~~
❤❤❤♥ எங்கள் வீட்டு இளவரசி... யாழினி ❤❤❤♥

சரோம்மா

அருமையான மனிதர்கள் அதிகம் காலம் வாழ்வதில்லை. இவ்வளவு நல்லவங்க எப்பவும் உங்க மனசுல இருக்கறாங்கன்னா அவர்கள் குணம் எவ்வளவு எள்மையானது. தங்கள் தோழியின் குடும்பத்திற்கு நீங்கள் செய்யும் உதவி அவர்கள் மீது நீங்கள் வைத்திருந்த அன்பை காட்டுகிறது. இந்த அன்புக்காக அவர் எங்கிருந்தாலும் உங்களை வாழ்த்திக்கொண்டே இருப்பார்.

Be simple be sample

நிகிலா

ஹாய்,

நன்றி நிகிலா

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

பிரேமா உலகராஜ்

ஹாய்,

'''கிரேட் உங்களுக்கும் ஒரு சல்யூட்'' நன்றி. உங்கள் சல்யூட்க்கு அனது ராயல் சல்யூட்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ரேவதி

ஹாய்,

எங்கள் சரோமா குணத்தை பாராட்டியமைக்கு மிக்க‌ நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ரஜினி

குடும்பத்தினருக்கு பிடித்தமாதிரி ஒருவர் உதவிக்கு அமைவது அபூர்வம். அப்படி அமைந்தவரை உங்கள் தோழி என்று குறிப்பிட்டிருப்பது மனதைத் தொட்டது. என் பாராட்டுகள்.

இந்தத் தொடரில் இன்னும் ஆறு இடுகைகள் மீதி இருக்கின்றன எழுத. விரைவில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.