Mookuthi Problem

ear Friends,
நான் ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னாள் மூக்கு குத்தினேன் அப்போது எனக்கு எந்த வலியோ அல்லது காயமோ ஏற்படவில்லை போன வாரம் எனது மூக்கு திருகாணி தொலைந்து எனது மூக்கு குத்தி மட்டும் மூக்கில் இருந்து இருக்கிறது நான் இதை கவனிக்கவில்லை இதனால் மூக்கில் காயம் ஏற்பட்டது மூக்குத்தியை கழற்றி விட்டு வேப்பங்குச்சி போட்டேன் . வேப்பங்குச்சி உள்ளேயே மாட்டிக்கொண்டது இரண்டு பக்கமும் ஓட்டை மூடிக்கொண்டது . இப்போது குச்சி என் மூக்கின் உள்ளேய இருக்கிறது இப்போது நான் என்ன செய்வது யாராவது பதில் அளியுங்கள் ப்ளீஸ்

மேலே சர்ச் பாக்ஸில் மூக்குத்தி என்று டைப் செய்து பாருங்கள். நிறைய‌ இழைகள் இருக்கிறது.

- பிரேமா

பார்த்தேன் அக்கா எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை

//திருகாணி தொலைந்து எனது மூக்கு குத்தி மட்டும் மூக்கில் இருந்து இருக்கிறது// இனிமேல் இதைப் பற்றிக் கவனமாக இருங்கள். வெளியே தொலையாமல் 'உள்ளே' தொலைந்தால் பிரச்சினை ஆகலாம். இம்முறை வேளியே தான் தொலைந்திருக்கும்.

முதலில்... உங்களை அறியாமல் தூக்கத்திலோ, குளிக்கும் சமயமோ குச்சு வெளியே வந்திருக்கக் கூடும் அல்லவா? உள்ளே இருகிறது என்று நிச்சயமாகத் தெரியுமா? அத்தனை சின்னதாகவா வைத்தீர்கள்? (இவற்றுக்கென்று ப்ளாஸ்டிக் குச்சிகள் பார்மசியில் கிடைக்கும். நீளமாக இருக்கும். மற்றவர்கள் பார்வைக்கு சட்டென்று படாது.)

//மூக்கில் காயம் ஏற்பட்டது// பின் பக்கம் அப்போதே மூடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். //வேப்பங்குச்சி உள்ளேயே மாட்டிக்கொண்டது// கொஞ்சம் நீளமாகப் போட்டிருக்கலாம். அப்போதே பின்பக்கம் அடைப்பு இருந்ததா?

//குச்சி என் மூக்கின் உள்ளேய இருக்கிறது// என்றாலும் பிரச்சினை இல்லை. நீங்களாக எடுக்க முயற்சிக்க வேண்டாம். காயமாகி இன்ஃப்பெக்க்ஷன் ஆகலாம், முகம் வீங்கலாம். காயம் ஆறும் போது தழும்பு வரலாம்.

//இப்போது நான் என்ன செய்வது// டாக்டரிடம் போனால் சுத்தமாக பெரிதாக காயம் வராத விதமாக எடுத்து விடுவார்கள்.

மூக்குத்தியை அடிக்கடி கழற்றி சுத்தம் செய்வது நல்லது. தடிமல், இருமல் இல்லாவிட்டாலும் திருகாணியில் மூச்சுக் காற்றிலுள்ள அழுக்கு படியும். அடிக்கடி திருகாணியையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

உங்களது கருத்துக்கு நன்றி அக்கா நான் மருத்துவரிடம் சென்று தான் குச்சியை எடுக்க போகிறேன்.

மூக்கு குத்திய‌ இடத்தில் மஞ்சளை இழைத்துப் பற்று போட‌ அனேகமாக‌ ஒரே நாளில் தானாகவே குச்சி வெளியே வந்துவிடும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்