இறால் தந்தூரி

தேதி: March 1, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய இறால் - 500 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 3 கரண்டி
தந்தூரி பேஸ்ட் - 2 கரண்டி
மிளகாய்தூள் - 1 கரண்டி
தயிர் - 1 கரண்டி
எலுமிச்சைச்சாறு - 2 கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 5 கிராம்


 

இறாலை சுத்தம் செய்துக் கொள்ளவும்
அதில் வெண்ணெய் தவிர எல்லாப் பொருள்களையும் சேர்த்து பிரட்டி முக்கால் மணி நேரம் ஊற விடவும்
பின் அவனில் வைக்கும் தட்டில் வெண்ணெயை தடவி அதில் இறாலை பரப்பி வைக்கவும்
பின் 280 F சூடாகிய அவனில் வைத்து இடையிடையில் திருப்பி விட்டு நன்கு வெந்தவுடன் எடுக்கவும்
அவன் இல்லாமல் நாண்ஸ்டிக் தவாவிலும் லேசாக எண்ணெய் தடவி இதை போல் செய்யலாம்.


இதை போல மீனிலும் செய்யலாம் மீனில் என்றால் குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

வ அலைக்கும்சலாம் சுலைஹா, தந்தூரி பேஸ்ட் என்னவென்று சொல்லவும்.அவெனில் எவ்வளவு நேரம் செட் பன்ன?விரைவில் பதில் எதிர்பார்க்கிறேன்.உடனே செய்ய ஆவல்.

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

hhijk

I used ready made store bought தந்தூரி பேஸ்ட். You can buy this paste in the Indian store.

ரம்யா, உங்கள் பதிலுக்கு நன்றி.இப்போது என்னிடம் தந்தூரி மசாலா பவுடர் இருக்கு.டிரை பன்றேன்.

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

hhijk

அன்பு ஆசியா சாரிமா நான் கவனிக்கவில்லை ...ரம்யா சொன்னது போலதான் கடைகளில் கிடைக்கும் தந்தூரி பேஸ்ட்தான் நான் சொன்னது .அவெனில் 250° லிருந்து 280° வரை செட் பண்ணி பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடுங்கள் நீங்கள் இவ்வளவ்ய் ஆவலாக இருப்பதை பார்த்தால் நான் அடிக்கடி செய்யும் குறிப்பினைக்கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் அது இன்னும் சுவையாக இருக்கும்
ரம்யா நீங்கள் பதில் கொடுத்ததற்கும் ரொம்ப நன்றி

http://www.arusuvai.com/tamil/bbq_3

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

உங்க்ள் குறிப்புக்கு மீன்டும் நன்றி. நீங்க சொன்ன bbq inshaallah வெள்ளிக்கிழமை பண்ணியதும் பதில் தருகிறேன்.உங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா?

ASIA MS
PEACE BE ON EARTH

hhijk

அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கிறீர்கள் என்னை பற்றி பழைய பதிவுகளில் நிறைய இருக்கு..... உங்கள் ஐடி யாரிடம் இருக்கிறது சொல்லுங்கள் நாம் பேசுவோம் இன்ஷாஅல்லாஹ் மர்லியா &கதிஜாவிடம் இருக்கிறதா இருந்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ரொம்ப பிஸியா ஊரில்?ஆளையே கானோம்?எப்படி இருக்கீங்க?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வ அலைக்கும் சலாம் .அன்புற்கினிய ஜுலைஹா, தாமதமாக பதில் தருவதற்க்கு வருந்துகிறேன். என் ஐ டி மர்ழியாவிடம் வாங்கவும். நிறைய பேசலாம்.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk