happy women's day 2017 | அறுசுவை வலைப்பதிவு
blog image

happy women's day 2017

உன்னை உயிரோடு இந்த பூமியில்
தடம் பதிக்க வைத்தவளே பெண்
உன்னோடு ஒப்பிடவோ குறைத்து மதிப்பிடவோ
உனக்கு எந்த அருகதையும் கிடையாது
மதிக்காவிட்டாலும் மிதிக்காமல் இரு.
ஏய் ஆணினமே

இப்பிடியெல்லாம் நிறைய எழுதலாம் பட் இந்தக்கோணத்தில் நான் என் எழுத்தை செலவு செய்ய விரும்பவில்லை.

பெண் அடிமை இது மிகச்சில நாடுகளில் அவர்களின் பாரம்பரிய வழிவந்த பழக்கவழக்கங்களால் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும்பாலான பெண்கள் எப்போதே அதையெல்லாம் தாண்டி வந்து விட்டார்கள்
என்பதும் ஆண்கள் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள் என்பதுமே உண்மை.

இருந்தாலும் சிலர் எழுத்திலும் பேச்சிலும் பெண்கள் சம்மந்தப்பட்ட அனைத்து சம்பவங்களுக்கும் இந்த பெயரை சூட்டி, ஊட்டி ஊட்டி வளர்த்துக்கொண்டிருப்பதால்தான் இந்த சொல்லும் சொல்லுக்கான பொருளும்
அழியாமல் வேரோடிக்கொண்டிருக்கிறது என்றே சொல்வேன்.

பெண் கொடுமைகளும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது இருந்தாலும் எல்லாவற்றையும் இந்த போர்வைக்குள் இழுத்து மூடுவது ஏனோ சலிக்கிறது.

ஆணும் பெண்ணும் சமமாகத்தேவையில்லை.
ஆண் ஆணுக்குரிய சிறப்புக்களோடு இருக்கட்டும்
பெண் பெண்ணுக்குரிய சிறப்புக்களோடு இருக்கட்டும்.

நான் பிறந்த நாடோ வளந்த நாடோ நடந்த நாடோ பெண்களை பெண் என்பதற்காக ஊதாசீனப்படுத்தியதில்லை.நம் வீடுகளில் நம் குழந்தைப்பிறப்பை டெலிவரி ரூம் ல் அருகில் ஆறுதலாக நிற்பது முதல் கொண்டு
உடல் நிலை தேறும்வரை ஆண்கள்தான் மனைவி என்ற பெண்ணை கவனிக்கிறார்கள்.

சென்னையில் என் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு உடம்புக்கு முடியவில்லை பாத்திரங்கள் அப்படி குவிந்து கிடக்கிறது .வேலைக்காரி என்ற பெண்ணுக்காக காத்திருக்கிறார்கள்.ஏன் உங்கள் ஹஸ் கழுவவில்லை என்று கேட்டேன்.
{சும்மா ஒரு விடுப்புத்தான்.}
நம்ம வூடுகளில ஆம்பிளைங்க பாத்திரம் எல்லாம் கழுவ மாட்டங்கம்மா’’.
எனக்கு அந்த பெண்ணில் பேச்சில் எந்த கோவமும் வரவில்லை.அந்த ஆணிலும் கோவம் வரவில்லை.
அந்த ஆணை வளர்த்த அம்மாவை கூப்பிட்டு தலையில் கல்லை தூக்கி போட்டால் என்ன என்று நினைத்தேன்.

ஆம் இந்த சின்ன விஷயம் முதல்கொண்டு ஆணையும் பெண்ணையும் வித்தியாசப்படுத்தி ஆணுக்கு கர்வத்தை ஊட்டியது ஒரு பெண் தான்.
அந்த பெண் மிக நல்ல பெண் .எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் அதனால் பாத்திரங்களை நானே கழுவத்தொடங்கினேன்.அலறி அடித்துக்கொண்டு அவர் கணவர் ஓடி வந்து அடம்பிடித்து
மீதிபாத்திரத்தை கழுவினார்.

அப்பறமா அந்த பாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமா இருந்திச்சு .எனக்கு வேற வேலை இருக்கவில்லை .அதனால இதெல்லாம் என்ன பாத்திரம் என்றேன்.
அப்போ அந்த பெண் பெருமை பொங்க சொன்னார் எனக்கு வரதட்சனையா அப்பா அம்மா குடுத்தாங்க?????

வயசான அப்பறமா படுத்த படுக்கையா இருக்கும் போது எச்சி துப்பற பாத்திரமாம் ????? அதைக்கூடவா அம்மா அப்பாகிட்ட வாரிச்சுருட்டுவீக

ஏன் பாத்திரம் எல்லாம் நீங்க ரெண்டு பேரும் வாங்க மாட்டீகளோ?? {இது மீ}

இல்லம்மா எல்லாருமே அப்பிடி குடுப்பாங்க நமக்கு குடுக்கலைன்னா அது அவளோ நல்லா இருக்காது .அதனால கண்டிப்பா குடுப்பாங்க/??????

ஆத்தீ
இந்தப்பெண்ணோ அல்லது அந்த ஆணைப்பெற்ற பெண்ணோ இந்த கொடுக்கல் வாங்கலை நியாயமானதாகவே பார்க்கிறார்கள்.ஏற்றுக்கொள்கிறார்கள்.இருக்கப்பட்டவர்கள் குடுத்தால் கூட பரவாயில்ல.
கடன் பட்டாச்சும் குடுக்க வேணுமாம்.

சோ இப்பிடி ஒரு பாத்திரத்துக்கும் ,தங்க நகைகளுக்கும் உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக்கொண்டு,
ஆண்கள் உங்களை உயரத்தில் வைத்துப்பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் எப்படி???

ஆண் பெண்ணை இகழ்வதும் பெண் ஆணை இகழ்வதும் மனிதப்பழக்கவழக்கங்களும் அவரவர் சூழ்நிலைகள் அனுபவங்கள் பெற்றுக்கொடுத்த தனிப்பட்ட வெறுப்பு விருப்புக்களுமே .
தவிர பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பெண்கள் வீழ்த்தப்பட்டவர்கள் என்று பெண்களே தம்மை தரம் தாழ்த்துவதை தவிர்த்து விட்டு நீங்கள் தலை நிமிர்ந்து விட்டீர்கள் என்பதை பறைசாற்றுங்கள்.
அனைத்து பெண் சிங்கங்களுக்கும் ( டோண்ட் கம்பேர் வித் குட்டி சிங்கம் பிள்ளீஸ்] மகளிர் தின வாழ்த்துக்கள்.

4.333335
Your rating: None (6 votes)

சுரேக்கா

அருமையா எழுதியிருக்கீங்கோ.. வெல்கம் பேக்.. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அபி

மிக்க நன்றி அபி ஊக்கம் குடுக்குறதில முதல் இடம் உங்களுக்கு .என் மனமார்ந்த நன்றிகள்.

pls help me

Hi frd enakku marriage panni 2years aachu kolanthai illai my husband velinadla irukkaru enakku period varathuku 4days irukkum pothuthan vellai thiravam kettiya athikama varuthu apparam period vanthuruthu eppo udaluravu vachukanum konjam sollungale pls pa antha 4days la than enakku karumuttai velivarutha eppo veli varuthunu epti therunchukirathu sollunga

surejini

ரொம்ப அருமையாக இருந்தது தோழி உங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள் மிக தாமதமாக வாழ்த்து தெரிவித்து இருக்கேன் நான் இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன் தோழி மன்னிக்கவும்

firoz

பொறுமையாக படித்து கருத்திட்டதிற்கு மிக்க நன்றி சகோதரி .

மரியா ஸ்டெல்லா

நான் பதிலளிக்கும் கோணம் மற்றவர்களை புண்படுத்தி விடவோ குழப்பமடையவோ செய்துவிடக்கூடாது எனும் பயம் என்னுள் இருந்தாலும் பதிலளிக்காமல் போக மனம் இடம் கொடுக்கவில்லை சோ மேலோட்டமாக பதில் அளிக்கிறேன்.மேலதிக கேள்விகளை மன்றத்தில் கேளுங்கள் கண்டிப்பாக பல நல்லுள்ளங்கள் பதில் கொடுத்து உதவுவார்கள்.

நீங்கள் ஓவலூஷன் டேட் ஐ அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள் அப்படித்தானே?

அதற்கு வெள்ளை படுதல் துல்லியமான அறிகுறி கிடையாது.ஏனென்றால் வெள்ளைபடுதலுக்கு நிறைய காரணங்கள் இருப்பதே.

http://www.arusuvai.com/tamil/node/27790

இந்த லிங் ல் ஓவலூஷன் கால்குலேட்டர் அறுசுவையில் இருக்கிறது.கணக்கிடுங்கள்.

surejini

Romba nandri frd neenga sonnathu unmaithan frd vellai paduvatharku vera karanangal irukkalam.