பீர்க்கங்காய் பால் கடைசல்

தேதி: March 1, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீர்க்கங்காய் - 1,
பால் - 200 மில்லி,
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.


 

பீர்க்கங்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பாலை ஊற்றி பீர்க்கங்காயை வேக வைக்கவும்.
பீர்க்கங்காய் வெந்தவுடன், உப்பு போட்டு மத்தால் நன்றாக மசித்து கொள்ளவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மசித்த பீர்க்கங்காயுடன் கல்ந்து 2 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி அக்கா,
உங்க பீர்க்கங்காய் பால் கடைசல்,அரிசி பருப்பு சாதம்,கோதுமை இனிப்பு புட்டு மூன்றும் செய்தேன்.நன்றாக இருந்தது.புட்டு மிகவும் சுவையாக இருந்தது.அரிசி பருப்பு சாதம் நல்ல சுவை.ஆனா அக்கா சாதம் மதியம் கொஞ்சம் டிரை ஆயிட்டதா என் கணவர் கூறினார்.காலையில் சாப்பிடும் போது நன்றாக இருந்தது.தண்ணி நீங்க சொன்ன அளவு தான் வைத்தேன்.அடுத்த முறை கொஞ்சம் அதிகமா தண்ணி வைத்து பார்க்கிறேன்.
உங்க சமையல் எளிமையா சீக்கிரம் செய்யக் கூடியதா இருக்கு.சுவையும் அருமையா இருக்கு.வாழ்த்துக்கள்

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் திவ்யா,
நலமா? என்னோட குறிப்புகளை செய்து பார்த்து பாராட்டியமைக்காக நன்றி. பருப்பு சாதத்தில் அரிசிக்கு அரிசி தண்ணீர் வேறுபடும். நார்மலா நீங்க சாப்பாட்டுக்கு வைப்பதை விட 1/2 டம்ளர் கூட வைத்து பாருங்கள். சாதம் சூடாக இருக்கும் போது கொளகொளப்பாக இருந்தால்தான் ஆறினாலும் கெட்டியாக இல்லாமல் இருக்கும். இது எங்கள் பக்க சிறப்பு உணவு. நன்றாக இருக்கும்.மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வணக்கம் செல்வி மேடம்,
பீர்க்கங்காய் பால் கடைசல், நேற்று இரவு செய்தேன். மிக நன்றாக இருந்தது. தங்கள் குறிப்புக்கு நன்றி...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்பு ஆயிஸ்ரீ,
இது எங்கம்மா அடிக்கடி செய்யும் குறிப்பு. மழைக்காலத்தில் ரொம்ப நல்லா இருக்கும்.
உங்களூக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.