அரியதரம்.

தேதி: March 2, 2007

பரிமாறும் அளவு: 50அல்லது 60 அரியதரம்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மா(வறுக்காதது) -4சுண்டு(கப்)
கம்பிக்குருணல் -1சுண்டு
சீனி(சர்க்கரை) -500கிராம்
ஏலப்பொடி -2தே.கரண்டி
சுடு நீர் -1/2கப்
உப்பு -அளவாக
தே.எண்ணெய் -1போத்தல்


 

மா,குருணல்,சீனி, ஏலப்பொடி இவற்றை ஒன்றாகக் கலந்து கொதிநீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் குழைக்கவும்.
குழைத்த கலவையை 3 அல்லது 4 மணி நேரம் மூடி வைக்கவும்.
பின் திரும்பவும் குழைத்து அளவான உருண்டைகளாக்கவும்.
உருண்டைகளை இலேசாக அமர்த்தி பின் கொதித்த எண்ணெய்யில் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்