Friends doubt tube light for new born

Dear friends

My boy baby boen 15days only. My sister told put tube light atleast 30 days or 48 days. Its compulsory required Aha. Because my daughter doesn't Sleep well.

Regards
Charanya

//tube light atleast 30 days or 48 days.// தாயின் வயிற்றினுள் இருக்கும் வரை வெளிச்சம் இருப்பதில்லை. அதனால் இப்போ தூங்க வெளிச்சம் தேவையில்லை. உண்மையில்... அது உறக்கத்தைக் கலைப்பதாகத்தான் இருக்கும். கண்கள் மூடி இருந்தாலும் சிறிது வெளிச்சம் உள்ளே கடத்தப்படும்.

//Its compulsory required Aha.// :-) கரண்ட் வர முன்னால எல்லாம் குழந்தைகள் பிறக்கலயா! நல்லா வளரலயா! உங்க அம்மா உங்களுக்கு ட்யூப் லைட் போட்டாங்களா என்று கேட்டுப் பாருங்க.

//Because my daughter doesn't Sleep well.// 15 நாள் குழந்தை அது. இரவில் உறங்காதிருந்தால் யோசிக்காதீங்க. உங்களுக்குச் சிரமம் என்பதைத் தவிர வேறு பிரச்சினைகள் இல்லை. குழந்தைக்கு இந்த உலகம் செட் ஆக நாள் எடுக்கும்.

ஜுவனைல் ஜாண்டிஸ் இருந்தால்தான் ஃபோட்டோ தெரபி கொடுப்பாங்க என்று நினைக்கிறேன். தேவையாக இருந்திருந்தால், அதற்கான அட்வைஸ் குழந்தையின் மருத்துவரிடமிருந்து கிடைத்திருக்கும். காலை வெயிலில் சிறிது நேரம் வைத்திருந்தாலே கூட போதும்.

ஆனால் அதற்கும் உறக்கத்துக்கும் தொடர்பு இல்லை. நீங்க லைட் போடத் தேவையில்லை. வெளிச்சம் இருந்தால் குழந்தைக்குப் பராக்குகள் இருக்கும். உறக்கம் கெடும் என்பது என் அபிப்பிராயம்.

‍- இமா க்றிஸ்

Oru sila pazhagalukaga night light pottu irupaga .just born baby Na so 30 days or more .night light pottu irupaga .it's ur second baby u know before well.so periyavaga solradha kekalam .if u disturb of these .do ur wise

En daughterku 1st baby 3 yrs old sis. Second son 15 days old. En daughter than Midnight light disturb wake-up agara and playing toys. I unable control athan ketan sis.

Swati sis

En daughterku sister home eruthan apo nanu mattum than so enaku disturb illa. En sister instructions 48 days tube light potanum. En hubby athu ethuku small led light or small color light venumna try panalam. Enaku ena panarathu theriyala.

//En daughterku 1st baby 3 yrs old sis. Second son 15 days old. En daughter than Midnight light disturb wake-up agara and playing toys. I unable control athan ketan sis.// அவ்வ்வ்!

நான் படிச்சுப் புரிஞ்சுகொண்டது - உங்க பொண்ணுக்கு 3 வயசில ஒரு குழந்தையும் 15 நாள் வயசுல ஒரு குட்டிப் பையனும் இருக்காங்க. ஆனால்.... ;))) உங்க பொண்ணு தான் சாமத்தில் வெளிச்சம் காரணமாக தூக்கம் கலைஞ்சு... டாய்ஸ் கூட விளையாடுறாங்க. :-) !!! அவங்களை... அதாவது இப்போ இரண்டாம் முறையாக தாயாகி இருக்கும் உங்க பெரிய பொண்ணை உங்களால கண்ட்ரோல் பண்ண முடியல. அவ்வ்வ்!
~~~
அப்புறம் ஸ்வாதிட்ட சொன்னது - உங்க பொண்ணுக்கு ஒரு சகோதரி வீடு இருந்தான். :-) அப்போ நீங்க மட்டும் தான். அதனால உங்களுக்கு டிஸ்டர்பா இருக்கல. உங்க சகோதரி உங்கள்ட்ட, '48 நாள் ட்யூப் லைட் போடணும்,' என்று அறிவுறுத்தி இருக்காங்க. இது உங்க கணவருக்கு சம்மதம் இல்ல. சின்னதா ஒரு நைட் லாம்ப் போட்டா போதும்கறாங்க. உங்களுக்கு என்ன செய்யன்னு தெரியல. :-)

முதல்ல செய்ய வேண்டியது... முடியாது, மாட்டேன்னுல்லாம் சொல்லாம தமிழைத் தமிழ்ல தட்டுங்க. இல்லாட்டா கேள்வியை முழுவதா ஆங்கிலத்துலயாச்சும் தட்டுங்க. இது... என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ, அவருடைய மருமகனுக்கு அப்பா என் மகனுக்கு மாமனார். அவருக்கும் எனக்கும் என்ன உறவுங்கறாப்ல இருக்கு.

‍- இமா க்றிஸ்

//My boy baby boen 15days only. My sister told put tube light atleast 30 days or 48 days. Its compulsory required Aha. Because my daughter doesn't Sleep well.// இப்போ முதல் கேள்வி புரியுற மாதிரி இருக்கு. ஆனா எனக்கு சரியா புரிஞ்சுதான்னு தெரியல.

15 நாள் குழந்தைக்கு - இரவில் ட்யூப் லைட் தேவையே இல்லை. நைட் லாம்ப் கூட தேவையில்லை. அதற்குப் பெரிதாக பார்க்கும் எதையும் பகுத்துணரத் தெரியாது. இருளைக் கண்டு பயம் வராது. இருளில் தூக்கம் நன்றாக வரும்.

கட்டாயம் என்றால் மங்கலாக ஒரு சின்ன நைட் லாம்ப் போடலாம். உங்கள் பெண் குழந்தையை வேறு அறையில் தூங்க வையுங்க.

‍- இமா க்றிஸ்

Wat imma told is exactly correct

மேலும் சில பதிவுகள்