நண்டு குருமா

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நண்டு - ஒன்றரை கிலோ
வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 3
தேங்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - 15
பூண்டு - 8 பல்
இஞ்சி - ஒரு துண்டு
பட்டை - 2
இலவங்கம் - 2
ஏலக்காய் - 3
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

முதலில் நண்டின் ஓட்டை உடைத்து அதில் உள்ள மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீளமாக வெட்டிக் கொள்ளவும். தேங்காயை துருவி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து மஞ்சள் தூள் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
அதன் பிறகு நன்கு வதங்கியதும் நண்டை போட்டு நன்றாக வதக்கி அரைத்த தேங்காயை கரைத்து ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைக்கவும்.
வெந்து சுண்டி வந்த பிறகு இறக்கி வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி மூடிவைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்