தட்டை வடை.(பருத்துறை வடை)

தேதி: March 2, 2007

பரிமாறும் அளவு: 25 - 30 வடைகள்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உழுத்தம் பருப்பு -1/2 சுண்டு(கப்)
அமெரிக்கன் மா -1சுண்டு
செத்தல் மிழகாய்ப் பொடி -2 தே.கரண்டி
பெருஞ்சீரகம் -1 தே.கரண்டி
உப்பு -அளவாக
தேங்காய் எண்ணெய் -1/2 போத்தல்
கறிவேப்பிலை -அளவாக


 

உழுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
அதன் பின் உழுந்தின் நீரை வடித்து விட்டு அதனுடன் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும்.
அதன் பின் சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் அல்லது (பொலித்தீன் பேப்பரில்) வைத்து தட்டையாக அழுத்தி மெதுவாக இலையை விட்டு பிரித்தெடுத்து கொதித்த எண்ணெய்யில் போட்டு பொன்நிறத்தில் பொரித்தெடுத்து பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம் செல்லி!
எனக்கொரு சந்தேகம் - நீங்கள் அமெரிக்கன் மா என்று குறிப்பிடுவது கோதம்பமாவைத்தானோ?
நன்றி

சகோதரி அம்பிகைக்கு வணக்கம்.
நான் அமெரிக்கன் மா என்று குறிப்பிட்டது, சிறீ லங்காவில் கூறப்படும் கோதம்ப மாவைத்தான். ஆனால் இந்தியாவில் கோதுமையில் செய்யும் மாவை கோதுமை மா என்று கூறுவார்கள்.
அதனால் தான் நான் பொதுவாக அமெரிக்கன் மா என்று குறிப்பிட்டிருந்தேன்.

வணக்கம்
நானும் அமெரிக்காவில் வசிக்கிரேன்.
அமெரிக்கன் மா என்று சொல்ல மாட்டார்கள்,கோதுனம் மாவு
என்று தான் சொல்லுவார்கள்

சகோதரி செல்லிக்கு விளக்கமளித்ததற்கு நன்றி.

அஸ்ஸலாமு அலைக்கும்
நலமா?கோதுனம்மாவு என்றால் எந்தவகை மாவு?எனக்கு கோதுமை மாவுதான் தெரியும்!

செல்லி,
உங்கள் பருத்தித்துறை வடை குறிப்பு நன்று. நன்றாக வந்தது.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்