பிரசவத்திற்கு பின் மாதவிடாய்

எனக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்து 63 நாட்கள் ஆகிறது. பிரசவத்திற்கு பின் சுமார் 27 நாட்களில் மாதவிடாய் நின்றது. அடுத்த மாதவிடாய் தொடங்கி இன்று 6 வது நீள். உதிரப்போக்கு குறையாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது இயல்பானதா தோழியரே

ஆறாவது நாள் அதுவும் அதிகமாக இருக்கிறது என்றால் இயல்பா இல்லையா என்று ஆராயாமல் போய்க் காட்டுவது நல்லது. பாலூட்டுவீர்கள். இதுவும் சேர உங்கள் உடல் நலம் கெட்டுப் போகலாம். தாமதிக்க வேண்டாம். நிறுத்துவதற்கு மாத்திரை எடுக்க வேண்டி இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

அனிதா டாக்டர் பார்த்திங்களா என்ன சொன்னாங்க . எனக்கும் சிசேரியன் தான்பா 32 நாட்களில் நின்றது மறுபடியும் 35 நாட்களில் தொடங்கியது இன்று 37 நாட்கள் குறையாமல் அதிகமாக உள்ளது ....இது இயல்பானதா .....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எனக்கு ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்தது....ஆறாவது மாதத்தில் இருந்து மாதவிடாய் வந்தது...அதன்பிறகு மாதவிடாய் delay ஆகி வருகிறது...ஐம்பது நாள் அதற்கு மேல் தான் வருகிறது...ஏன் என்று கூறுங்கள் தோழிகளே...இது normal தானா இல்லை மருத்துவரிடம் காட்டலாமா....

எனக்கு ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்தது....ஆறாவது மாதத்தில் இருந்து மாதவிடாய் வந்தது...அதன்பிறகு மாதவிடாய் delay ஆகி வருகிறது...ஐம்பது நாள் அதற்கு மேல் தான் வருகிறது...ஏன் என்று கூறுங்கள் தோழிகளே...இது normal தானா இல்லை மருத்துவரிடம் காட்டலாமா....

இது நார்மல் தான். தாய்ப்பால் கொடுக்கும் வரை அப்படி தான் இருக்கும்.. குழப்பம் வேண்டாம்..

எனக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆகின்றது.. இன்னும் எனக்கு periods வரல..next month நான் Hyderabad போரேன்.. husband கூட contact வைக்கலாமா?? contact வைச்சா பிள்ளைக்கு சீர் அடிக்குமா??

குழந்தைக்கு சீர்லாம் ஆகாது..சுத்தமாக இருந்தால் போதும்.. மாதவிடாய் வரவில்லை என்றால் கூட குழந்தை உண்டாகும் வாய்ப்பு உள்ளது..கவனமாக இருங்கள்..

K sis..

மேலும் சில பதிவுகள்