சர்க்கரை சேர்த்தால் தான் சாப்பிடறான் - 33679 | அறுசுவை மன்றம்
forum image
சர்க்கரை சேர்த்தால் தான் சாப்பிடறான்

தோழிகளே என் இரண்டு வயது எது சாப்பிட கொடுத்தாலும் சர்க்கரை சேர்த்தால் தான் சாப்பிடுகிறான். அதனால் ஏதாவது பாதிப்பு ஆகுமா


சர்க்கரை

தொடர்ந்து இதையே செய்வீர்களானால் பாதிப்பு இருக்கும். தேவையில்லாமல் எடை கூடும். ஓபிஸிடி வரும். சர்க்கரை தேவைக்கு மேல் சாப்பிடும் குழந்தைகள் (பெரியவர்களும் தான்) ஹைப்பர் ஆக்டிவ் ஆக‌ இருக்கலாம். பிறகு குழந்தை அடக்க‌ முடியாமல் சுட்டித் தனம் பண்றதா தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல‌, ஆசிரியர்களுக்கும் தொந்தரவாக‌ இருப்பார். சர்க்கரைக்கு மாற்று ஏதாவது பாருங்க‌.

‍- இமா க்றிஸ்

சர்க்கரைக்கு மாற்று

நன்றி இமா அம்மா, வேறு என்ன கொடுப்பது. இனிப்பாக கொடுத்தால் சாப்பிடுறானே என்று கொடுத்துவிட்டேன் இப்போது அதை எப்படி நிறுத்துவது தெறியவில்லை

குழந்தை எதையாவது ஒன்றை love

குழந்தை எதையாவது ஒன்றை love பண்ணும் . என் மகளும் இப்படித்தான் 4வயது சர்க்கரை தோசை இட்லீ தான் ... அவளுக்கு அவளுடைய அப்பா gift தருவதாக கூறினார் . அதன் படி 1மாதமாக தினமும் ஒரு gift தருகிறார் .இப்போது அவளே குழம்பு தொட்டு சாப்பிடுகிறாள் அவர்களாவே மாற வேண்டுமெனில் அவர்களை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டும் .

Hi meena

மனா ரீதியாக நாங்க எடுத்த கடைசி முயற்சி தான் இது .. அதுக்குன்னு உங்கலாய் வாங்கி gift தங்க என்று சொல்ல வில்லை .. அவர்களுக்கு எது ரொம்ப எதிர்பார்த்து love பண்றங்கனு பார்த்து இது செய்தால் இது நடக்கும் என்று ஆசை வார்த்தை கூறுங்கள் .gift amazon or veetla nankaley ethatvhum veetla senju tharvom gift mathiri .....

thanks

நன்றி தோழி ஆனால் அவனுக்கு இரண்டு வயது நாம் சொல்வதை புரிந்து கொள்ள மாட்டான். நான் கொஞ்சம் சர்க்கரை அளவை குறைத்தால் கூட கீழே துப்பி விடுகிறான்.

Meena

வெல்லம் panam கற்கண்டு இதை தனியா கொடுத்து ருசி பார்க்க கொடுங்கள் .பின்னர் தோசை இட்லி கு அதையே அவனையே ஒரு ஸ்பூன் கொடுத்து எடுத்து வச்சு சாப்புட சொல்லுங்கள் ... எறும்பு பூச்சி ஏதேனும் எடுத்து சர்க்கரை பாக்ஸில் போட்டு இது கடித்து விடும் சொல்லுங்கள் ... ஏதேனும் யோசியுங்கள் தோழி

Meena

எறும்பு இருக்கு அது வேண்டாம் என்று சொல்லுங்கள் ... அவனுக்கு நீங்க அம்மா அவனை விட நீங்க என்னமா யோசிக்கணும் ஹா ஹா ஹா ..அவன் அழுவதை சில நேரங்கள் காதில் வாங்கி கொள்ளாமல் அவனை கவனியுங்கள் கொஞ்ச நாளில் மாற்றம் தெரியும் ..