நெஞ்சு எரிச்சல்

8 மாத கர்ப்பமாக உள்ளேன்.நெஞ்சு எரிச்சல்அதிகமாக உள்ளது.டாக்டர் கொடுத்த மருந்து சாப்பிட்டும் குறையவில்லை.வேறு ஏதெனும் வழி கூறுங்கள் தோழிகளே.

நெஞ்சு எரிச்சல் இந்த நேரத்தில் இருக்கத்தான் செய்யும் எனக்கும் இருந்தது ஆனால் நா மாத்திரைலாம் போடல பா எனக்கு காரம் உள்ள உணவு ரொம்ப ஹெவி புட் சாப்பிட்டா இப்டி இருக்கும் அதை நிறுத்தியதும் நெஞ்சு எரிச்சல் இல்லவே இல்லை. நீங்க காரம் அதிகம் உள்ள உணவு ரொம்ப ஹெவி சாப்பாடு இதையெல்லாம் கம்மி பண்ணி பாருங்க இந்த நேரத்தில் இது சாதாரணம் தான் சாப்பிட்டு முடித்ததும் இளஞ்சூடான வெந்நீர் குடிங்க டீ காபி நிப்பாட்டி பாருங்க சாப்பிடத்தும் கொஞ்சம் நடந்து கொடுங்க முக்கியமா வெந்நீர் குடிச்சு பாருங்க. டேக் கேர்.

காரம் அதிகம் சாப்பிடுவதில்லை பா.வெந்நீர் வேணா குடிச்சு பார்க்கிறேன்.இதனால் இரவு தூங்க முடியலை பா.முதல் குழந்தைக்கு இந்த மாதிரி இல்லை ஆனா இந்த முறை ரொம்ப கஷ்டமா இருக்கு.

நானும் 8 மாத‌ கர்ப்பம், எனக்கும் அப்பப்ப‌ நெஞ்செரிச்சல் இருக்கும்.. அப்போ லைட் சூடா வெந்நீர் குடிப்பேன்.. கொஞ்சம் நடந்தா கூட‌ நல்லா இருக்கும்.. நீங்க‌ ட்ரை பண்ணி பாருங்க‌..

நைட் லைட்டா சாப்பிடுங்க‌.. சீக்கிரம் செரிமானம் ஆகுற‌ மாதிரி இருந்தா பெஸ்ட்.. சாப்பிட்டதும் கொஞ்ச‌ நேரம் உட்கார்ந்துவிட்டு அப்புறம் நடக்க‌ செல்லுங்கள்..

உங்க‌ டெலிவரி டேட் என்ன‌ பா? நான் தெரிஞ்சுக்கலாமா?

- பிரேமா

நானும் கொஞ்ச நேரம் நடப்பேன் பிரேமா.இல்லனா தூக்கமே சுத்தமா வராது.எனக்கு செப் 5 குடுத்து இருக்காங்க பா.உங்களுக்கு எப்பமா?

சரி பா.

//எனக்கு செப் 5 குடுத்து இருக்காங்க// வாழ்த்துக்கள் பா.

//உங்களுக்கு எப்பமா?// எனக்கு ஆகஸ்ட் 19 டேட்

- பிரேமா

நாளை மறுநாள் எனக்கு ஒரு தேர்வு இருக்கிறது.அதில் கண்டிப்பாக 3 1/2 மணி நேரம் தேர்வு அறையில் இருந்தே ஆக வேண்டும்.என்னால் நீண்ட நேரம் உட்கார முடிவதில்லை.நீங்கள் வேலைக்கு செல்வதால் உங்களிடம் கேட்கிறென்.எனக்கு கொஞ்சம் டிப்ஸ் ஏதாவது கூறுங்களேன் ப்ளீஸ்

சாரி பா. இப்பதான் உங்க‌ பதிவை பார்க்கிறேன். தேர்வு நல்லா எழுதிருப்பீங்கன்னு நம்புறேன்..

3 1/2 மணி நேரம் கொஞ்சம் சிரமம் தான். தேர்வு அறையில் உட்கார்ந்தே ஆக‌ வேண்டும். எழுந்து நடமாட‌ அனுமதிக்க‌ மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.. நான் ஆஃபீஸில் அடிக்கடி எழுந்து நடப்பேன்.. அதனால் தெரியவில்லை.. அதுவே சில‌ நேரங்களில் சூடு பிடித்து கொள்கிறது..

எப்படி சமாளித்தீர்கள் என்பதை அடுத்த‌ மெசேஜில் சொல்லுங்கள்..

- பிரேமா

மேலும் சில பதிவுகள்