baby doubt about sleep

hai frnds en ponnu (40 days baby) kaila than epovum thugura keela pota udanae alugura.. all time kaila vaichutae irukka mudiyathulaa enna pannalam.

குழந்தையை துணியில் சுற்றிப் போட்டால் நல்லா தூங்குவாங்க‌. சுற்றிலும் அணைவாக‌ தலையணைகள் வைத்து விடுங்க‌. நீங்கள் கூட‌ இருப்பதாக‌ நினைத்துக் கொள்வார்கள்.

‍- இமா க்றிஸ்

தொட்டிலில் தூங்க வைங்க..கீழே படுக்க வச்சா பதரிட்டு முழிப்பாங்க..கைல baby வச்சி பழக்கினா அப்பறம் நம்மல எந்த வேளையும் செய்ய விட மாட்டங்கங்க

எல்லாம் நன்மைக்கே

oknga thanks..and innoru doubt en babyku kulikum pothu amma evlo rotate panalum innum head shape varala.. enna panalam.head shape ilanu elarum solranga..

//kulikum pothu amma evlo rotate panalum // அதனால் எல்லாம் எலும்பின் வடிவம் மாறப்போவது இல்லை. இதைப் பற்றிப் பெருசா யோசிக்காதீங்க‌. முடி வளர்ந்த‌ பின் அது தெரியாது.

//head shape ilanu elarum solranga.// ;))) அந்த‌ எல்லாருக்கும் மொட்டை போட்டா அவங்கவங்க‌ தலை என்ன‌ ஷேப்னு தெரிஞ்சுரும். ;‍) தன் தலைல‌ இருக்கிறது என்னவென்று தெரியாமல் இன்னொருத்தரைச் சொல்ல‌ வராங்களா! :‍)

என் தலை கோணல்தான்; என் சின்னவருக்கும் கோணலாகத் தான் இருந்தது. பரம்பரையில் முன்பு யாருக்காவது இருந்திருக்க‌ வேண்டும். ஆனால், எங்கள் இருவரையும் பார்க்கும் யாருக்கும் இது தெரிய‌ வருவது இல்லை. முடி இல்லாமலிருந்தால் தான் கவனிக்கலாம். கவனிச்சாலும், இது மற்றவங்க‌ அலுவல் இல்லை. என் தலை, என் குழந்தையின் தலை. மற்றவங்களுக்கு என்ன‌ பிரச்சினையாம்! விட்டுருங்க‌ யோசிக்காம‌.

‍- இமா க்றிஸ்

rompa correctah sonninga thank u so much

மேலும் சில பதிவுகள்