பிஷ் சப்பாத்தி ரோல்

தேதி: March 3, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சப்பாத்தி - 4
அதிகம் முள் இல்லாத மீன் - 1/4 கிலோ(வேக வைத்து தோல் உதிர்தது)
பல்லாரி - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - 2 கரண்டி


 

உதிர்த்த மீனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பல்லாரி போடவும்
இஞ்சி பூண்டு, தக்காளி சேர்க்கவும்.
நன்றாக வதக்கிய பிறகு உப்பு, மீன் கலவையை சேர்க்கவும்.
தண்ணிர் விட கூடாது.
3 நிமிடம் கழித்து இறக்கவும்
பிறகு ஒரு சப்பாத்தி எடுத்து அதில் 4 ஸ்பூண் மீன் கலவைய் வைத்து ரோல் செய்து சூடாக பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்