மாத்தி யோசிங்க‌ | அறுசுவை வலைப்பதிவு
blog image

மாத்தி யோசிங்க‌

blog image

மாத்தி யோசி பதிவை படித்த‌ எனது தோழிகள் என்னை கழுவி ஊத்திவிடாங்க‌. ஒவ்வொருத்தரும் கதை சொல்லி அதுக்கு பல‌ தீர்ப்புக்களையும் ''நாட்டாமை மாத்தி யோசி''' நு பன்ச் வாய்ஸ் கொடுத்துடாங்க‌. சினிமா திரைப்படத்துக்கு கூட‌ மாத்து முடிவு சொல்றாங்க‌. மாத்தி யோசி பாணியிலே இன்றைக்கும் ஒரு பதிவு கொடுத்து, அதுக்கு மாத்தி யோசி முடிவு கொடுனு ஆனா அந்த‌ முடிவு உன் ரஜினி ஸ்டைலே கொடுக்கனும்னு அன்பு மிரட்டல். அதுக்குத்தான் இந்தப் பதிவு. நானும் நைட் தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு, காலை சமையலையும் கெடுத்துவிட்டு இந்த‌ பதிவை கொடுக்கிறேன். சவாலே சமாளி.
நான் ''விறகுவெட்டியும், தேவதையும்''என்னும் கதைக்கு மாத்தி யோசித்தேன். முதலில் அந்தக் கதையின் சுருக்கம்.
ஒரு விறகுவெட்டி குளத்து ஓரம் ஒரு மரத்தை வெட்டும் போது, அவனது கோடாரி குளத்தில் விழுத்துவிட்டது. கொடாரி இல்லாம் விறகு வெட்ட‌ முடியாது, விறகு இல்லையென்றால் பணம் கிடைக்காது, பணமில்லை என்றால் சாப்பாடு கிடைக்காது நு கதறி அழுதான். அவனது அழும் குரலைக்கேட்ட‌ தேவதை, அவனது குறையை அறிந்து குளத்திலிருந்து ஒரு தங்ககோடாரியை எடுத்து கொடுத்தது, அவன் அது தனது இல்லை என்றான். அடுத்து வெள்ளிகோடாரியைக் கொடுத்தது, அதையும் தனது இல்லை என்றான். உடனே அவனது இரும்புக்கோடாரியை காட்டியது, அவன் இதுதான் என்னுடையது நு சொல்லி சந்தோழப்பட்டான். அந்த‌ விறகுவெட்டியின் நேர்மையை பாராட்டி, தங்கம் வெள்ளி இரும்பு மூன்று கோடாரியையும் பரிசாகக் கொடுத்து பாராட்டியது தேவதை. இந்தக் கதைக்கு மாத்தி யோசி முடிவு படிங்க‌.

விறகுவெட்டியின் மனைவி குளத்தில் விழுந்துவிட்டாள். விறகுவெட்டி ஓஓஒ நு கதறி அழுதான். அவனது அழுகை சத்தம் கேட்டு தேவதையும் வந்தது. அவனது குறையைக் கேட்டு ''கவலைப்படாதே, நான் உதவி செய்கிறேன்'' குளத்தில் குதித்தது. நடிகை நயனதாராவை தூக்கி வந்தது. ''இவள்தானே உன் மனைவி, அழைத்துச் செல்''என்றது. உடனே விறகுவெட்டி,'''இவள் தான் என் மனைவி''நு மகிழ்ச்சியாக‌ சொல்லி நயனதாராவை அழைத்துச் சென்றான். உடனே தேவதையும் தங்கம், வெள்ளி கோடாரிக்கு கூட‌ ஆசைபடாத‌ நீ இப்போ நடிகையைப் பார்த்த‌ உடன் 'என் மனைவி''நு பொய் சொல்லி ஏமாற்றுகிறாயே நு வருத்தபட்டது. அந்த‌ விறகுவெட்டி, தேவதையிடம் 'என்னை மன்னித்துவிடுங்கள். நான் உண்மையை சொல்கிறேன்'' என்றான்.
''நான் நயனதாராவை என் மனைவி இல்லை என்று மறுத்து இருந்தால், உடனே நீங்கள் குளத்தில் குதித்து 'ஜோதிகா''வை தூக்கி வருவீர்கள். நான் இவர் எனது மனைவி இல்லை என்பேன். நீங்கள் மறுபடியும் குளத்தில் குதித்து என் மனைவியை தூங்கி வந்து இவளா உன் மனைவி என்பீர்கள், நான் இவள் தான் என் மனைவி என்ற‌ உடன் உன் நேர்மையைப் பாராட்டி மூவரையும் பரிசாக‌ கொடுத்து இருப்பீர்கள். ஒரு மனைவியுடன் வாழ்வதற்கே படாதபாடு படும் நா மூன்று மனைவிகளோடு என்ன‌ பாடுபடுவது நு பயத்தில் தாம்மா நயனதாராவைக் காட்டிய‌ உடன் பொய் சொல்லிவிட்டேன் இதுதாம்மா உண்மை. என்னை மன்னிச்சிடுங்க‌ தேவதையே''நு கதறினான். அவனது கஷ்டதையும், கவலையையும் உணர்ந்த‌ தேவதை அவனுக்கு தேவையானப் பொருட்களை பரிசாகக் கொடுத்து அவனது உண்மையான‌ மனைவியுடன் சேர்த்து அனுப்பியது.

இது தான் எனது மாத்தி யோசி தீர்ப்பு. இது உங்களுக்கு பிடித்திருந்தால் பாராட்டி பதில் கொடுங்க‌. பிடிக்கவில்லை என்றால் பிடிகாததற்கும் பதில் கொடுக்கலாம்.

4.5
(8 votes)
Your rating: None

Negative thoughts

Negative thoughts

எல்லாம் நன்மைக்கே

ஹாய் நன்றிமா

ஹாய்
நன்றிமா

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நயன்தாரா

கதை சுவாரசியமாக இருக்கிறது ரஜினி. :‍)

இது போல் கொஞ்சம் வித்தியாசமாக எங்கோ படித்திருக்கிறேன். ஆனால்... //''இவள் தான் என் மனைவி''நு மகிழ்ச்சியாக‌ சொல்லி நயன்தாராவை அழைத்துச் சென்றான்.// ;) நயன்தாராவும் சரின்னு விறகுவெட்டியோடு கிளம்பிப் போனாங்களா? எந்த சானல்லயும் இது பற்றி நியூஸ் வரலயே! ;)

இமா க்றிஸ்

ஹாய் இமா நலமா நலம் அறிய ஆவல்

ஹாய் இமா
நலமா நலம் அறிய ஆவல் . இதெல்லாம் நம்ம கற்பனை தான் .

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ரஜினி

ஹாய் ரஜினி... நான் நலம்.

உங்கள் கற்பனை அருமை. விரைவில் அடுத்த இடுகையை வெளியிடுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

இமா க்றிஸ்