ஃப்ரூட் கேசரி

தேதி: March 3, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 1 டம்ளர்,
சர்க்கரை - 2 டம்ளர்,
கேசரி பவுடர் - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
முந்திரி - 5,
பாதாம் எசன்ஸ் - சில துளிகள்,(விருப்பப்பட்டால்)
ஆப்பிள் - சிறு துண்டு,
அன்னாசி - சிறு துண்டு,
பேரீச்சம் பழம் - 3,
பச்சை திராட்சை - 6,
ட்ரை ஃப்ரூட்ஸ் - 1 ஸ்பூன்,
நெய் - 1/2 டம்ளர்.


 

ஆப்பிள், அன்னாசி, பேரீச்சம் பழம் எல்லாவற்றையும் பொடி துண்டுகளாக நறுக்கவும். 1 ஸ்பூன் நெய்யில் முந்திரியை ஒடித்து, வறுத்து எடுக்கவும்.
அதே நெய்யில் எல்லா பழ துண்டுகளையும், ட்ரை ஃப்ரூட்ஸையும் சேர்த்து வறுத்து எடுக்கவும். ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு, வறுத்து எடுக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டரை டம்ள்ர் தண்ணீர் விட்டு, கேசரி பவுடர் போட்டு அடுப்பில் வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, ரவையை தூவி கட்டியில்லாமல் கிளறவும்.
ரவை வெந்ததும், சர்க்கரையை சிறுது சிறிதாக சேர்த்து, கட்டியின்றி கிளறவும்.
கேசரி கெட்டியாக வரும் போது, நெய், தூளாக்கிய ஏலக்காய், எசன்ஸ், பழ துண்டுகள், முந்திரி எல்லாம் போட்டு, கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வியக்கா,
இன்று ஈவீனிங் சாப்பிட உங்க ஃப்ரூட் கேசரி செய்தேன். பழங்கள் நறுக்கி நெய்யில் வறுத்து சேர்த்தது, எசன்ஸ் போட்டது ரொம்ப சுவையாக இருந்தது.

ரவா கேசரி எல்லோரும் எப்போதும் செய்வது - ஆனால் Old is Gold என்பது போல எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. (நான் அடிக்கடி எங்க வீட்டில் செய்யும் ஐயிட்டம் இது! - எங்க எல்லோருக்கும் ஃபேவரிட் :-)) அந்த பழமையிலும் ஒரு புதுமையை புகுத்தி ரொம்ப சுவையான ஒரு ரெஸிப்பி கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள் + நன்றி!!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு ஸ்ரீ,
நலமா? சாரிப்பா லேட்டா பதிவு போடறதுக்கு.
வித்தியாசமா மாத்தி மாத்தி செய்தாதான் எங்க வீட்டில விலை போகும். அதான் இப்படி ஏதாவது கண்டுபிடிச்சி கிட்டே இருப்பேன். எங்க வீட்டிலும் என் பொண்ணோட ஃபேவரிட்.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.