பாம்பே சட்னி

தேதி: March 3, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்க்ளுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பொட்டுக்கடலை - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 6,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


 

வெங்காயத்தை தோல் நீக்கி, வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய் போட்டு நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்தவற்றை தண்ணியாக கரைத்து ஊற்றவும். கொதிக்க கொதிக்க திக்காக வரும்.
தொட்டுக்கொள்ளும் பதம் வந்ததும் இறக்கவும்.


சுடான இட்லிக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அடிக்கடி என் கணவர் இந்த பேரை சொல்லி கேட்பார். நான் எனக்கு பாம்பே ஐடம் எல்லாம் தெரியாது என கின்டலாக சொல்வேன். உஙளால் செய்தாயிற்று. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,
செய்தது சரி, பிடித்ததா, இல்லையா ?
பேர மாத்திட்டா போச்சு :-) ஆனா இப்ப இருக்கிற மும்பை நல்லா இல்லை, பாம்பே தான் நல்லா இருந்திச்சு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.