அகத்திக்கீரை கழுநீர் குழம்பு

தேதி: March 4, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அகத்திக்கீரை - 1 கட்டு,
அரிசி கழுவிய நீர் - 3 டம்ளர்,
சின்ன வெங்காயம் - 20,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
காய்ந்த மிளகாய் - 4,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


 

அகத்திக்கீரையை உருவி, பழுப்பு இல்லாமல் எடுத்து வைக்கவும்.
தேங்காயை துருவி பால் எடுத்து வைக்கவும்.
அரிசி கழுவிய நீரை அடுப்பில் வைத்து, சூடேறியதும் கழுவிய அகத்திக்கீரையையும், முழு வெங்காயம், தட்டிய சீரகம், இரண்டாக கிள்ளிய மிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.
அகத்திக்கீரை வெந்தவுடன், உப்பு, தேங்காய் பால் சேர்த்து கொதி வருவதற்கு முன்பே இறக்கவும்.


அரிசி கழுவிய முதல் நீரை கீழே ஊற்றி விடவும்.
இந்த குழம்பை காலையில் வெறும் வயிற்றில், 3 நாட்களுக்கு பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர், வாய்ப்புண் (தீவிரமாக இருந்தாலும் கூட) உடனே சரியாகும்.

மேலும் சில குறிப்புகள்