பால் கட்டி கரைய

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்... எனக்கு 3 மாத குழந்தை இருக்கிறான். அடிக்கடி பால் கட்டி கொள்கிறது... பையன் நன்றாக குடிக்கிறான்...நேரம் பார்த்து பால் குடுப்பதில்லை...பால் கட்டுவதால் அடிக்கடி குடுக்கறேன்.இருந்தும் பால் கட்டுகிறது..பால் பெருகும் உணவுகளான பால் பூண்டு மீன் சாப்பிடவில்லை... வெந்நீர் ஒத்தடம் குடுத்தும் சரி ஆகலை..பால் கரைய ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் பகிரவும்...மிகவும் மன உளச்சலாக இருக்கிறது...

//பால் பெருகும் உணவுகளான பால் பூண்டு மீன் சாப்பிடவில்லை.// மீன் சாப்பிடுங்க‌. அது பால் பெருகும் உணவு என்பது மட்டும் இல்லை. பொதுவாகவே உடலுக்கு நல்லது.

இப்போ குறைக்க‌ வழி பார்த்துக் குறைத்து விட்டு பிறகு போதாமலிருக்கும் போது கஷ்டப்படுவீர்கள். முடிந்தால் பாலை பம்ப் பண்ணி எடுங்க‌.

படிக்க‌ சில‌ இழைகள்...
www.arusuvai.com/tamil/node/20331
பால் கட்டி கரைய - www.arusuvai.com/tamil/node/33877
www.arusuvai.com/tamil/node/27642
www.arusuvai.com/tamil/node/9491
www.arusuvai.com/tamil/node/16702?page=1

இன்னும் இருக்கு. கொஞ்சம் நேரம் எடுத்து தேடிப் பாருங்க‌.

‍- இமா க்றிஸ்

நன்றிimma madam...link பயனுள்ளதாக இருந்தது...நான் நார்மலா என்ன உணவு சாப்பிடாலும் கட்டுது...தண்ணீர் குடிக்க கூட பயமா இருக்கு...பால் எடுத்து வெளியே விட்டு அடுத்த சில நிமிடங்களில் கட்டுது..சத்தான பால் குடுக்க முடியாம கஷ்டமா இருக்கு...வாரம் இரண்டு முறை இப்படி கஷ்டப்பட்டு வரேன்...என்ன தான் சாப்பிடனும் தெரில..உடம்பு வலி fever, வந்து துயரமாக உள்ளது

Hope is necessary in every condition:)

//.தண்ணீர் குடிக்க கூட பயமா இருக்கு..// எந்தக் காரணத்துக்காகவும் தண்ணீர் குடிப்பதைக் குறைக்க‌ வேண்டாம். இந்தியாவில் இருக்கிறீர்கள். வெப்பமான‌ இடம். பிறகு வேறு பிரச்சினைகள் வரும். // fever, // பனடோல் எடுக்கலாம். நீங்கள் ஒரு தடவை உங்கள் மருத்துவரைப் பார்த்துப் பேசினால் என்ன‌? அவர்கள் நிச்சயம் இதற்கு நல்ல‌ தீர்வு சொல்வார்கள்.

‍- இமா க்றிஸ்

//நேரம் பார்த்து பால் குடுப்பதில்லை.// இதுவும் கூட‌ உங்கள் பிரச்சினைக்குக் காரணமாக‌ இருக்கலாம். //பால் கட்டுவதால் அடிக்கடி குடுக்கறேன். //ம்... அடிக்கடி கொடுப்பதால் பால் கட்டுகிறது. நீங்கள் எவ்வளவு அதிகம் கொடுக்கிறீர்களோ குறைவதற்குப் பதிலாக‌ அவ்வளவு அதிகம் பால் சுரக்கும். முடிந்தால் டைம் டேபிள் போட்டுக்கங்க‌. பாலூட்டுவதற்குச் சமீபமாக‌ காப்பி, பால் சாப்பிடாமலிருந்து பார்க்கலாம். வேலை செய்யக் கூடும்.

//பால் பெருகும் உணவுகளான பால் பூண்டு மீன் சாப்பிடவில்லை.// இயல்பாக‌ விசேடமாக‌ எதுவும் சாப்பிடாமலே தாய்மையடந்த‌ பெண்ணின் உடல் பாலைச் சுரக்கும். நீங்கள் ஆரோக்கியமாக‌ இருக்கிறீர்கள் என்பதற்கு இது அடையாளம். பொதுவாக‌ சகோதரிகள் பால் போதவில்லை என்றுதான் இங்கு ஆலோசனைக்கு வருவார்கள். அல்லது பாலை நிறுத்தும் சமயம் ஆலோசனன் கேட்பார்கள்.

//பால் கரைய ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் பகிரவும்.// நீங்கள் வேறு இழைகள் தேடிப் படித்தீர்களா? மல்லிகைப்பூ வைத்துக் கட்டுவது என்றெல்லாம் சொல்லி இருப்பார்கள் சகோதரிகள். எதையாவது செய்யப் போய் பிறகு பால் போதவில்லை என்று ஆகிவிடக் கூடாது இல்லையா! அதனால் மருத்துவரிடம் போவது நல்லது. எத்தனை மாதங்கள் வரை பாலூட்டுவதாக‌ இருக்கிறீர்கள்?

‍- இமா க்றிஸ்

மேலும் சில‌ இழைகள்
Paal katti vittathu. Plz help me. - www.arusuvai.com/tamil/node/25626
www.arusuvai.com/tamil/node/8870?page=18...0...%2F.
www.arusuvai.com/tamil/node/31930

‍- இமா க்றிஸ்

நன்றி மேடம் ..டாக்டரிடம் போகலாம் என்று சொன்னா என் கணவர் திட்றார்..டாக்டர் tablet குடுத்து பால் வராம போச்சு னா என்ன பண்றது...நேற்று 3 கிளாஸ் பால் எடுத்து விட்டேன்..ஒவ்வொரு முறையும் பால் குடுத்ததும் மீதம் பால் வெளியே எடுத்து விட்றேன்...அப்படியும் கட்டுது...வேற வழியே இல்லை னா டாக்டர் ட போனும்...தகவலுக்கு நன்றி..

Hope is necessary in every condition:)

பாலூட்டுவதற்குச் சமீபமாக‌ காப்பி, பால் சாப்பிடாமலிருந்து பார்க்கலாம். வேலை செய்யக் கூடும்./// நான் பால், குடித்து ஒரு மாதம் ஆகிறது...பிரசவத்திற்கு பின் காபி, டீ குடிப்பதில்லை...

Hope is necessary in every condition:)

அழப் போறேன்... ;((( இமா போதும். நடுவுல‌ அந்த‌ எக்ஸ்ட்ரா 'ம், வேணாமே! :‍) மேடமும் வேணாம்.

//டாக்டர் tablet குடுத்து பால் வராம போச்சு னா என்ன பண்றது.// வீட்டு மருத்துவமும் இதையே செய்யலாம் இல்லையா! அதனால் தான் சொன்னேன்... டைம் பண்ணி கொடுக்க‌ ஆரம்பியுங்க‌. இடைல‌ மட்டும் அதுவும் மிகவும் அவசியம் என்றால் மட்டும் பம்ப் பண்ணி விடுங்க‌. மெதுவே சரியாகிரும்.

உள்ளாடைகள் சரியான‌ அளவில் இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க‌.

‍- இமா க்றிஸ்

Sry இமா..நன்றி

Hope is necessary in every condition:)

என் பையனுக்கு 3 மாதம் முடிகிறது... குப்புற படுத்துதான் தூங்குறான் நல்லா....இது சரியா..என்னோட மாமியார் குப்புற தூங்க விடாத னு சொல்றாங்க...நேராக படுத்தா சரியா தூங்க மாட்றான்...என் குழப்பம் தீர பதில் சொல்லுங்க...

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்