வாழைத்தண்டு குழம்பு

தேதி: March 4, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைத்தண்டு - 1/2 அடி நீள துண்டு,
துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி,
கடலை பருப்பு - 1/2 மேசைக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 10,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
காய்ந்த மிளகாய் - 8,
தனியா - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

வாழைத்தண்டை தோல் சீவி, நாறெடுத்து, வட்ட வட்டமாக நறுக்கவும். (மெல்லியதாக).
புளியை 1 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், துவரம்பருப்பு,கடலை பருப்பு, தனியா, 5 வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டு வில்லைகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வதங்கிய பின், அரைத்த மசாலா, கரைத்த புளி ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, வேக விடவும்.
தண்டு வெந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சனிக்கிழமை வாழைத்தண்டு குழம்பு.. :-) சூப்பரோ சூப்பர்... As usual நம்மாளு நல்லா சாப்பிட்டாரு :-)

குழம்பு வைக்கும்போதே எனக்கு கொஞ்சம் டவுட்டுதான்...வாழைதண்டுல குழம்பு நல்லா இருக்குமான்னு....ஆனா ரொம்ப நல்லா இருந்துச்சு ...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அன்பு சங்கீதா,
பாராட்டுக்கு நன்றி. As usual நீ ரொம்ப நல்லாவே சமைச்சிருக்கே.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.