அரிசி முறுக்கு

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 3 கப்
வெண்ணெய் - அரை மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 கப்
சீரகம் அல்லது எள் - அரை மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - தேவைக்கேற்ப


 

பச்சரிசியை ஊற வைத்து உரலில் இடித்து கப்பியில்லாமல் நைஸாக சலித்துக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து திரித்துக் கொள்ளவும். சீரகத்தை அல்லது
எள்ளை ஒன்றிரண்டாகப் பொடித்து மாவுகளுடன் கலந்து கொள்ளவும்.
உப்பை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து மாவில் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கையில் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு முறுக்கு குழலில் 3 துவாரமுள்ள அச்சைப் போட்டு மாவைக் குழலினுள் வைத்து எண்ணெயில் சிறு சிறு வட்டங்களாகப் பிழியவும்.
இரு பக்கங்களும் நன்றாக வெந்து சத்தம் நின்றதும் கம்பியால் எடுக்கவும்.
ஒரு தடவை 4 அல்லது 5 முறுக்கு சுடவும்.


மேலும் சில குறிப்புகள்