குழி பணியாரம் (காரம்)

தேதி: March 4, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 3 டம்ளர்,
பச்சரிசி - 2 டம்ளர்,
உளுத்தம் பருப்பு - 3/4 டம்ளர்,
சின்ன ஜவ்வரிசி - 1/2 டம்ளர்,
வெந்தயம் - 2 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
பச்சை மிளகாய் - 5,
கொத்துமல்லி - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு கிரைண்டரில் போட்டு, ரவை பதத்திற்கு அரைக்கவும்.
உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் எல்லாவற்றையும் வதக்கி மாவில் கொட்டி, நன்கு கலக்கவும்.
குழி பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி, பாதி குழி அளவிற்கு மாவு ஊற்றி, மூடி வைத்து, திருப்பி வேக விட்டு எடுக்கவும்.


பணியாரத்திற்கு தேங்காய் சட்னி, வெங்காய சட்னி பொருத்தமான ஜோடி.

மேலும் சில குறிப்புகள்