Pal vali

Enga Ammakku pal vali irunthuchu avanga antha palla eduthanga eppa pakkathil ulla pal romba valikkuthu appadinu solluranga enna pannalam yarukkavathu eppadi iruntha sollunga august monthla antha palla eduthanga.

//Enga Ammakku pal vali irunthuchu// காரணம் என்ன‌? பூச்சி அரித்திருந்ததா? //avanga antha palla eduthanga// இப்போதெல்லாம் மிக‌ மோசமாக‌ இருந்தால் தவிர‌, பல்லைச் சுத்தம் செய்து அடைத்துவிடுகிறார்கள், பிடுங்குவது இல்லை.

//eppa pakkathil ulla pal romba valikkuthu// முரசு கரைவதாலும் பல்வலிக்கலாம்; பூச்சி வைத்திருந்தாலும் பல் வலிக்கலாம்.

//enna pannalam// இரண்டுக்குமே நல்ல‌ வழி... பல் வைத்திரை அணுகுவதுதான். முரசு கரைகிறது என்றால் என்ன‌ செய்ய‌ வேண்டும் என்பதை விளக்குவார். பற்சொத்தை என்றால் மீதிப் பற்கள் தொட‌ர்ந்து பாதிக்கப்படாமலிருக்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என்பதை விளக்குவார்.

//august monthla antha palla eduthanga.// :‍) அந்தப் பல் இனிமேல் வலிக்காது. மீதி உள்ளவை கெட்டுப் போகாமல் முன்னெச்சரிக்கை எடுப்பது அவசியம். வந்த‌ பின் பார்க்கிற‌ விடயம் அல்ல‌ பல் ஆரோக்கியம். வருமுன் காக்க‌ வேண்டும். ப‌ல்மருத்துவரிடம் இப்போதே அழைத்துப் போங்க‌.

‍- இமா க்றிஸ்

எங்கள் ஊரில் இந்த மாதிரி பல் வலிக்கு ஒரு அம்மா பச்சிலை வைத்து பூச்சி எடுத்து விடுவார்கள். இரண்டு நாட்கள் கண்ணத்தில் எருக்கம் பூவை வைத்து ஒத்தடம் கொடுக்க சொல்வார்.
மீண்டும் வரவே வராது எவ்வளவு இனிப்பு வேண்டுமானாலும் சாப்பிடலாம்..
என் மாமியார் கூட இந்த மாதிரி ரொம்ப அவதி பட்டார்.. நான் கூப்பிடும் போது நம்பவில்லை..
இப்போ பல் வலி அவங்களுக்கு வந்ததே இல்லை.. அதை மறந்தே விட்டார்..
உங்கள் ஊரில் யாரேனும் அந்த காலத்து ஆட்கள் இருந்தால் விசாரித்து பாருங்கள்..
இல்லை என்றால்மருத்துவரிடம் செல்வதே சிறந்தது..

Thank you imma, indhusha. Sorry late pathilukku.

Enakku October 31 kulanthai piranthathu. Augusta 26 periods vanthathu apparam October 26 Periods vanthathu 10 days periods achu eppa November 21 periods achu enakku payama irumku. Enga Amma kitta kettathukku enakku eppaditha irunthuchu appadinu sonnanga Kulanthai pirantha konjam nal eppadi irukkum a yaravathu sollanga ple.

//Enakku October 31 kulanthai piranthathu. Augusta 26 periods vanthathu apparam October 26 Periods vanthathu 10 days periods achu eppa November 21 periods achu// நீங்க‌ தமிழ்ல‌ எழுதினா படிக்க‌ சுகமா இருக்கும்.

ஆகஸ்ட்டுக்கு அப்புறம் செப்டெம்பர் அதுக்கு அப்புறம்தான் அக்டோபர். ஆகஸ்ட்ல‌ பீரியட்ஸ் எப்படி வரும் அக்டோபர்ல‌ குழந்தை பிறக்குறதானால்!! //October 26 Periods vanthathu 10 days periods achu// அப்போ இதன் நடுவுல‌ தான் //October 31 kulanthai piranthathu.// குழந்தை பிறந்துச்சா!! குழப்புறீங்க‌. :‍) டென்ஷனா இருக்கீங்க‌ என்று நல்லாவே தெரியுது. :‍)

//enakku payama irumku.// சும்மா பயமா இருக்கு என்று சொன்னால் உதவ‌ முடியாது. என்ன‌ பயம் என்று தெளிவாகச் சொன்னால்தான் யாரும் உதவலாம்.

//Enga Amma kitta kettathukku enakku eppaditha irunthuchu appadinu sonnanga// எல்லா அம்மாவும் பொண்ணுங்கள்ட்ட‌ தங்கள் முழுக் கதையையும் ப்ரீயா பேசுவாங்களான்னு தெரியாது. அவ‌ங்களுக்கும் உங்க‌ அப்பாவுக்குமான‌ உறவு அந்தக் காலப் பகுதியில் எப்படி இருந்தது என்கிறதை மட்டும் சொல்லாம‌ விட்டிருப்பாங்க‌. //Kulanthai pirantha konjam nal eppadi irukkum a// நிச்சயம் இருக்கும் என்பது அல்ல‌, ‍ இருக்கலாம். அதுவும் நீங்கள் உங்கள் கணவருடன் எப்படி வாழ்க்கை நடத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. பீரியட்ஸ் ஒழுங்காக‌ வர‌ ஆரம்பித்தால் நீங்கள் கொஞ்சமாவது எச்சரிக்கையாக‌ இருப்பீங்க‌. வராமலிருந்தால்தான் அதிக‌ கவனமாக‌ இருக்க‌ வேண்டும். உங்களை அறியாமல் கரு தங்கி விடும். இந்த‌ மாதிரி அம்மா சொன்னதை நம்பி கவனமில்லாமல் இருந்துராதீங்க‌. திரும்ப‌ கருத்தரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்க‌.

நானே நிறையப் பேருக்கு அறுசுவையில் இது பற்றி பதில் சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றையும் முன்கூட்டியே கூகுள் செய்து பார்க்கும் குட்டிப் பெண்கள் ஏன் இந்த‌ ஒரு விஷயத்தில் மட்டும் லேட்டாக‌ யோசிக்கிறீர்கள் என்பது புரியவில்லை. ;(

~~~~
பல் வலி த்ரெட்ல‌, பிரசவத்தின் பின் வரும் விஷயத்தைப் பற்றிக் கேட்டு பதில் கிடைத்திருக்கிறது. :‍) இனி சரியான‌ த்ரெட்ல‌ கேள்விகளை வையுங்க‌. மற்றவர்களுக்கும் பிரயோசனமாக‌ இருக்க‌ வேண்டும் இல்லையா!

‍- இமா க்றிஸ்

OK imma thank you. October 31 Kulanthai piranthathu. 11month kaluchutha periods vanthathu august 26 apparam 2 months varala. October 26 vanthathu eppa periods vanthurukku enakku pregnant visayathula kavanamatha irukken enakku bodyla eathavathu problema appadinu payama irukkuthu mobile tipe panrathala Tamil tyeping kastama irukkuthu thank you.

மேலும் சில பதிவுகள்