Vellai paduthal

Hi frnds one doubt enaku baby poranthu 3 month
Mudiya pothu, ovulation time la contact la iruntha
Conceive aguvanga nu kelvipatan, but nanga contact
Vachathuku apram than ovulation arambicha Thu,
Apram vaikala, therinchathum, but enaku continues
Ah gel Mari vellai pathu,pona time conceive agum
Continues ah 12 days ku gel Mari vellai patathu,
IPO en bayam thirumba conceive agiduvananu
Intha Mari problem yarukavathu irunthuruka
Friends

//ஆனால் என் சித்தியின் கணவர் அதான் ஒன்றும் இல்லை என்று கூறி விட்டாரே நீ தேவை இல்லாமல் பயப்படாதே என்று சொல்லி ஸ்கேன் பார்க்க மறுத்து விட்டார்.// ஒருவரது குடும்ப‌ விடயங்களில் தலையிடுவது தவறுதான். ஆனால் சில‌ சமயம் பேசாமலிருந்தால் பிறகு கவலைப்படும்படி ஆகிவிடும். உங்கள் அம்மாவை விட்டு, சித்தி & சித்தப்பாவிடம் பேசச் சொல்லுங்கள்.

//உன் சித்தப்பா அக்கறை எடுக்க வில்லை. அவர் மனம் போல ஆகட்டும் என்று பதில் கூறுகிறார்.// அவர் விரக்தியில் பேசுகிறார். தமக்கை என்கிற‌ வரை உங்கள் அம்மாவுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. ஏதாவது தவறாகிப் போய் திருத்த‌ முடியாததாகி விட்டால்!! அவருக்குக் குழந்தை வேறு இருக்கிறது இல்லையா!

//இந்த மாதிரி மார்பகங்கள் அறுவை சிகிச்சை செய்தவர்கள் உதவுங்கள்..// இப்படிக் கேட்டுக் கொண்டு இருப்பதில் பலனில்லை இந்து. பலருக்குப் பிரச்சினை இல்லாதிருந்த‌ ஒன்று யாரோ ஒருவருக்குப் பிரச்சினையானதாகிப் போவது உண்டே!

அவங்களை எப்படியாவது ஒரு ஸ்கான் எடுக்க‌ வைச்சிருங்க‌. வலி சித்தப்பாவுக்கு இல்லை. அவர் வீட்டிலிருக்கும் சமயம் சித்திக்கு வலி குறைவாக‌ இருந்திருக்கலாம், அல்லது காட்டிக் கொள்ளாமல் வீட்டு வேலைகளைப் பார்த்துத்தானே ஆக‌ வேண்டும் என்று செய்துகொண்டு இருப்பார். அதை வைத்து அவர் நார்மலாக‌ இருப்பதாக‌ சித்தப்பா எடுத்துக் கொள்ளலாம். சித்தி தன் கஷ்டத்தைக் குறைத்துக் காட்டிக் கொள்வது தவறு. அவங்கள்ட்ட‌ சொல்லுங்க‌... அவங்க‌ ஆரோக்கியமாக‌ இருந்தால்தான் குழந்தையை நன்றாக‌ வளர்க்கலாம் என்று. குழந்தைக்காக‌ ஒரு ஸ்கான் எடுக்கச் சொல்லுங்க‌. வலி தொடர்ந்தால் ஸ்கான் க்ளியர் என்றாலும் இன்னொரு டாக்டரைப் பார்த்து அபிப்பிராயம் கேட்கச் சொல்லுங்க‌.

‍- இமா க்றிஸ்

Nenga solrathu correct, enga appa apo army la irunthanga
en periya Anna poranthu
4 years ku apram chinna Anna poranthanga , en chinna
Anna poranthu 5 months la amma conceive ananga
Apram nan poranthan,

என் அம்மாவிடம் சித்தி பேச மாட்டார். குடும்ப சண்டை காரணமாக. என் சித்தி என் அம்மாவின் தங்கை இல்லை. என் சித்தப்பா தான் என் அப்பாவின் தம்பி.
என் சித்தப்பாவிடம் நான் இதை பற்றி பேசுகிறேன் என்று சித்தியிடம் கூறினால் நீ சும்மா இரு. உன்னை ஒரு தோழியாக நினைத்து பகிர்ந்து கொண்டேன். எப்பொழுதும் இதை பற்றி யாரிடமும் பேச கூடாது என்று எச்சரித்துள்ளார்.
என் சித்தியின் அம்மாவிடம் சொன்னால் உடனே ஸ்கேன் எடுத்து பார்ப்பார்கள் என்று சித்தி கூறுகிறார். ஆனால் அதில் எனக்கு விருப்பம்இல்லை என்று கூறுகிறார்.
சித்திக்கு இரண்டு ஆண் குழந்தை. அந்த குழந்தைக்காக உங்கள் அம்மாவிடமாவது சென்று என்ன என்று பார்த்து வாருங்கள் என்று கூறினேன்.
ஒருவேளை அந்த வலி நார்மல் தான் அப்படினு தோழிகள் யாரிடம் இருந்தாவது பதில் வருலாம் என்று நினைத்தேன்.
இது என் சித்தி மனது வைத்தால் அவங்க அம்மாவிடம் சென்று பார்த்து நிம்மதி அடைவார்கள்..
ஒன்றும் இருக்க கூடாது கடவுளின் அருளால்.

//உன்னை ஒரு தோழியாக நினைத்து பகிர்ந்து கொண்டேன். எப்பொழுதும் இதை பற்றி யாரிடமும் பேச கூடாது என்று எச்சரித்துள்ளார்.// அப்படியானால் விடுங்க‌. அவங்களாவே முடியாது என்கிற‌ நிலை வரும் போது பார்த்துக் கொள்வார்கள். இப்போது பிரச்சினை பெரிதாக‌ இல்லையென்பதால் தான் விட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

//ஒருவேளை அந்த வலி நார்மல் தான் அப்படினு தோழிகள் யாரிடம் இருந்தாவது பதில் வருலாம் என்று நினைத்தேன்.// நார்மலாகவும் இருக்கலாம். ஒருவருக்கு இருப்பதால் இன்னொருவருக்கும், 'நார்மல்தான்' என்று சொல்ல‌ முடியாது இல்லையா? அதனால் அப்படிப் பதில் கிடைத்தாலும் கவனிக்காமல் விட‌ முடியாது.

உண்மையில்... இது போன்ற‌ இடங்கள் சாதாரணமாக‌ எந்தப் பிரச்சினையும் இல்லாத‌ ஒரு பெண்ணுக்கும் கூட‌ அடிபட்டால் பெரிதாக‌ வலிக்கவே செய்யும்.

சிவந்து இருந்தால், வீக்கம் / அந்த‌ இடம் சூடாக‌ இருப்பதாக‌ உணர்ந்தால் கட்டாயம் போய்க் காட்ட‌ வேண்டும். தாமதிக்கக் கூடாது.

தற்காலிகமாக‌, நிரந்தரமாக‌ என்று கூட‌ சொல்லலாம் உள்ளாடைக்குள் மென்மையான‌ பாடிங் வைத்துக் கொள்வது நல்லது. அது அடிபட்டால் அதிர்ச்சியைக் குறைக்கும். வேதனை குறைவாக‌ இருக்கும்.

~~~~
ஒரு சந்தேகம். எதற்காக‌ இந்தக் கேள்விக்கு இந்த‌ இழையைத் தெரிந்தீர்கள்!! சரியான‌ பகுதியில் போட்டிருக்கலாம் அல்லவா!

‍- இமா க்றிஸ்

சிரமம் பார்க்காமல் பதில் கூறியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி..இந்த இழை குழந்தை பெற்றவர்களை பற்றி இருப்பதால் இதில் பதிவுகளை போட்டேன். பொருத்தமான இழை மிகவும் நீளமாக இருக்குமோ என்று யூகித்து இதில் கேள்வி கேட்டேன். இனி பொருத்தமான இழையில் பொருத்தமான கேள்விகள் கேட்கிறேன்.
மிக்க நன்றி உங்கள் கனிவான ஆலோசனைகளுக்கு..

உங்களுக்கு Normal delivery ஆ.நீங்களும் 39வாரம் வரை வயிறு இறங்களன்னு சொல்லிருக்கிங்க.

Jaisripriya

டாக்டர் குடுத்த தேதி ல Normal delivery ஆகிருக்கா...அது வர வயிறு இறங்காம இருந்துருக்கா...

Jaisripriya

Naan hospital la atmit karpa pai vaai open aakirukunu innu vali varls

Jaisripriya

Kadavul ah nala pray paniconga. Avar matum than thunai ah
Irupanga, kadvul namika iruntha panunga, ungaluku
Epadium inum 5 hours Kula kulanthai poranthudum
Ninaikaran, last varaikum vali varala Na operation
Panuvanga en frnd ku apadi than pananga.
Doctor solra mathiri nadanthuconga.

//இன்று குழந்தையின் அசைவு மிக குறைவாக உள்ளது.// சிலசமயம் அப்படி இருப்பது உண்டுதான். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அசைவே இல்லாமலிருந்தால் டாக்டர் ஆலோசனைக்குப் போவது நல்லது. ஒரு நாள் என்றால் பிரச்சினை இராது.

//பனிக்குடம் உடைந்தால் நமக்கு தெரியுமா.// நிச்சயம் தெரியும்.
//இப்டி லைட் லைட்டா யூரின் போரது தண்ணிக்குடம் உடஞ்சதுக்கு அறிகுறியா.// இல்லை. கருப்பை சிறுநீர்ப்பையை அழுத்துவதால் சிறுநீர் கொஞ்சமாக‌ இருந்தாலும் வெளியே வரும். பனிக்குடம் உடைந்தால் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

//Operation பன்னா// அந்த‌ நேரம் வலிக்காது. கைல‌ காய்கறி வெட்டுறப்ப‌ வெட்டிட்டா வலிக்குமா இல்லையா? இது அதை விட‌ கொஞ்சம் பெரிய‌ விஷயம் இல்லையா? வலி இல்லாமலிராது கண்ணா. வலி தெரியாதிருக்கத் தான் ஊசி போடுவது.
//முதுகெழும்புல ஊசி போட்டா வலிக்குமா.// கைல‌ போட்டா எப்பிடி வலிக்குமோ அது போலதான்.
//ரொம்ப வலிக்குமா.// ;)) தானாகக் குழந்தை பிறந்தால் வலிப்பதை விட‌ மிக‌ மிகக் குறைவாகவே வலி இருக்கும்.

//எப்டி சமாலிப்பது.// இப்போதிருந்து தேவையில்லாததை யோசிக்காமலிருந்தால் தன்னால‌ சமாளிப்பீங்க‌. வரும் போது பார்க்கலாம். விடுங்க‌. இப்போதைக்காவது கொஞ்சம் அமைதியா இருக்கப் பாருங்க‌.

//....உடைஞ்சுருக்கானு சொல்லுங்க.// நீங்கள் இந்த‌ போஸ்ட் தட்டும் போது உடையவில்லை என்றே நினைக்கிறேன். இல்லாட்டா ஹாயா இருந்து போஸ்ட் தட்டிட்டு இருக்காம‌ ஹாஸ்பிட்டல் போயிருப்பீங்க‌.

நீங்க‌ கர்ப்ப‌ காலம் முழுக்க‌ தொடர்ந்து ஒரு டாக்டரைப் பார்க்கிறீங்க‌ இல்ல‌! இதையெல்லாம் அவங்க‌ கிட்ட‌ கேட்காமல் எப்பிடி விட்டுட்டு இருந்தீங்க‌? அவங்க‌ தான் உங்களுக்கு சரியான‌ பதில் சொல்லக் கூடிய‌ ஆள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்