Kulanthai pal

Hi friends, enaku kulanthai irukkural 2 age aguthu anal innum pal kudikkural. Dr Ippo niruththa vendamnu sollitanga. Ippo second baby ku date thalli poirukku anal man pal nirppatala.eppady nirutharuthu theriala ethavathu sollunga pls.adhanala kulanthaikku ethavathu seiuma. Pls help me

தமிழிலில் தட்ட‌ முடியாதா விஜி! :‍)

//Dr Ippo niruththa vendamnu sollitanga.// நிறுத்த‌ வேண்டாம்னு சொன்னாங்களா? பாப்பாவுக்கு இரண்டு வயது, நீங்கள் மீண்டும் கருத்தரித்திருக்கிறீர்கள் என்னும் போதும், நிறுத்தாமல் தொடர்ந்து இரண்டு வயதுக் குழந்தைக்குப் பாலூட்டுங்கள் என்கிறார்களா!!!!!

//Ippo second baby ku date thalli poirukku anal man pal nirppatala.// :‍) ஒவ்வொருத்தர் 'மாட்டுப் பால்' கொடுக்கிறதைப் பற்றி டிஸ்கஸ் பண்றாங்க‌ இங்க‌. நீங்க‌ 'மான்' பால்!! மனிதப் பால்!! :‍) (கோபிக்காம‌ ஜாலியாப் படிக்கணும்.) :‍)

//eppady nirutharuthu theriala// கொடுக்காம‌ விடுங்க‌.
என்ன‌ பிரச்சினைன்னு சொல்லாம‌ கேள்வி கேட்கிறீங்க‌. குழந்தை அடம் பிடிக்கிறாங்களா? வேறு எதையாவது சாப்பிடக் கொடுக்கலாம், பராக்குக் காட்டலாம். வேறு யாருடனாவது அந்த‌ நேரங்களுக்கு வெளியே அனுப்பி வைக்கலாம்.

//adhanala kulanthaikku ethavathu seiuma.// எதனால‌!! விளக்கமா கேள்வியை வைச்சா பதில் கொடுக்க‌ மற்றவங்களுக்கு சுலபமா இருக்கும்.

//kulanthaikku ethavathu seiuma.// எந்தக் குழந்தைக்கு!! பால் கொடுக்காமல் விட்டால்... முதல் குழந்தை ஆரம்பத்தில் அட்ஜஸ்ட் பண்ணக் கஷ்டப்படும். இரண்டு வருடங்கள் கழித்து பழக்கத்தை நிறுத்துவது / மறக்கடிப்பது சுலபமில்லை அல்லவா! ஆனாலும் எந்த‌ ஆரோக்கியக் குறைவும் வராது.

இரண்டாவது குழந்தை... ‍ உங்கள் வயிற்றிலுள்ள‌ குழந்தைக்கு இப்போதைக்கு பிரச்சினை இல்லை. ஆனால், அம்மா நீங்கள் இரண்டு குழந்தைகளும் நன்றாக‌ ஆரோக்கியமாக‌ வளர‌ வேண்டும் என்பதையே விரும்புவீர்கள், அல்லவா! விரைவில் நிறுத்துவது நல்லது.

குழந்தைகளை விடுங்கள்; தாய்மை நிலையிலிருக்கும் உங்களுக்கு, முதல் குழந்தைக்கு இன்னும் தொடர்ந்து பாலூட்டுவது நல்லது என்று நம்புகிறீர்களா? அது இரண்டு வயதுக் குழந்தை. பெரும்பாலும் ஒவ்வொரு முறை பால் அருந்தும் போதும் நிறைவாகவே அருந்துவார். உங்களுக்கு மசக்கை வாந்தி, சாப்பிடப் பிரியமில்லாமை எல்லாம் வரலாம். இருக்கிற‌ கொஞ்ச‌ சத்தையும் முதல் குழந்தைக்குப் பாலாகக் கொடுத்தால் உங்களுக்கு!!

``````
எங்காவது எழுத்துப் பிழைகள் இருந்தால் திருத்திப் படியுங்கள். நான் வீட்டிலில்லை.

‍- இமா க்றிஸ்

எனக்கு Delivery ஆகி 16Days ஆகுது.ஒரு நாளைக்கு ஒரு தடவ தான் யூரின் போகுது.போகும் போது ரொம்ப எரிச்சலா இருக்கு.

Jaisripriya

Niraya water kudinga.water kudikalana kandipa urine pogum pothu erichal varum. Second urine poitu nalla wash pannunga.matha doubts enaku therila therinja friends vanthu answer pannuvanga.

Konjam soodana thaneer niraya kudinga.But morning kandippa doctor kita consult planning.urine Sariya pogalana stomach pain varum.antha maathiri aagama seekiram doctor'a parunga.first neenga nalla iruntha than kulanthaiya kavanika mudiyum.baby Ku ukkanthu thalaiya konjam height'a vachu feed pannunga.

சகோதரிகள் ஏற்கனவே உங்களுக்குப் பதில் சொல்லியிருக்காங்க‌. யூரின் இன்ஃபெக்ஷன் இருக்கலாம்.

//வயித்துக்குள்ள இருந்து White color la நீளமா புழு வந்தது.// நீங்க‌ ப்ளீடிங் பற்றிப் பேசிட்டு இதைச் சொல்றீங்க‌. எப்படி எடுக்குறதுன்னு தெரியல‌. வர்ம் ட்ரீட்மண்ட் தேவையா அல்லது வேறு ஏதாவது என்பதை டாக்டரிடம் கேட்டுவிட்டால் நிம்மதியாக‌ இருக்கலாம் அல்லவா?

//என் பையனுக்கு தலைல உச்சிக்குழியே இல்ல.// :‍) அப்போ எப்படி // ரொம்ப கம்மியா தெரியுது.// !! :‍) அப்போ இருக்கு இல்ல‌!!

//அதிகமா தெரிஞ்சாதான் நல்லதுன்னு சொல்றாங்க.// உங்களுக்கு உதவிக்கு யாரும் இல்லைங்கறீங்க‌. ஆனா குழப்பி வைக்க‌ நிறையப் பேர் இருக்காங்கன்னு தெரியுது. :‍)

//ஏன் உச்சிக்குழி நிறைய இருக்கனும் Reason என்ன.// ஒரு ரீசனும் இல்லை. அப்படி எதுவும் கிடையாது. இதில் யோசிப்பதற்கு எதுவுமே இல்லை. கவலைப்படாமல் நிம்மதியா இருங்க‌. குழி பெரிதாக‌ இருந்திருந்தால், அதையே பெரிய‌ விஷயமாக‌ யோசிச்சிருப்பீங்க‌. நம் மனது அப்படித்தான்.

பாலூட்டும் சமயம் அமைதியாக‌ அமர்ந்து கவனமாகப் பாலூட்டுங்க‌. வேறு சிந்தனைகள் வேண்டாம். பாலூட்டியதும் தோளில் போட்டுத் தட்டி விடுங்க‌.

ஒரு தடவை டாக்டர்ட்ட‌ போங்க‌. போகும் முன்பே ஒரு லிஸ்ட் போட்டு எடுத்துப் போய் மறக்காம‌ எல்லாவற்றையும் கேட்டுட்டு வாங்க‌.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்