Migundha mana vedanai..udhavungal thozhigale - 33983 | அறுசுவை மன்றம்
forum image
Migundha mana vedanai..udhavungal thozhigale

Enaku marriage agi 1 year above aagiduchi...1 time kuda pregnancy symptoms varala...regular period..ovulation egg growth normal.treatment started..test edhuthu pathom
..my husband ku mobility, count light ta kamiya irukunu solirkanga. Enaku right side only blocknu solirkanga...left side fine..one side block na conceive aagamudiyada??..next month iui pani pakalam nu solirkanga..iui major side effect kudukuma...??


சிந்திக்கும் விதம்

@ ஆனந்தி

//one side block na conceive aagamudiyada??// அரை டம்ளர் பால் இருந்தா, அதை 'half empty' என்றும் சொல்லலாம்; 'half full' என்றும் சொல்லலாம் என்பாங்க‌. நீங்க‌ சொல்றது அந்த‌ வரியை நினைவு படுத்துது. //one side block இல்லை na conceive aagamudiயும். :‍)

//next month iui pani pakalam nu solirkanga.// ம்.

//iui major side effect kudukuma// முதல்ல‌ எஃபெக்ட் என்னன்னு யோசிங்க‌. எஃபெக்ட் பெருசா சைட் எஃபெக்ட் பெருசா! //major side effect kudukuma.// இல்லை, பிரசவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தா, இது மைனராத்தான் இருக்கும். பயப்படாதீங்க‌.

pls help me

ennaku mrg agi 1 year 3 months cmpltd. inum conceive agala. regular period than. nan inum doctor kita poi check panala. enna reason ah irukum nu yarkachum therinja solunga pls.. but first 28 days cycle than irunthathu ipo apdiye change agiduchu.. 31 day cycle agiduchu ithu normal thana. nan doctor ta polama.

ok thanks imma..edhala iui

ok thanks imma..edhala iui treatment ku poganum?..double or triples form aaga chance iruku nu solraale...apaiya..evlo amount aagum...?

ஆனந்திக்கு

//edhala iui treatment ku poganum?// நீங்க‌ முழு விபரமும் கொடுக்காம‌ கேள்வியை வைச்சிருக்கீங்க‌. இதற்கு முன் எங்காவது சொல்லியிருந்தீர்களாவென்று தெரியாது. நீங்கள் இயற்கையாகக் கர்ப்பமாகட்டும் என்று பொறுத்திருந்திருக்கலாம். ஆனால் பொறுத்திருக்க‌ இயலாததால் தான் மருத்துவரிடம் போனீர்கள், இல்லையா!! அதனால் என்று வையுங்கள். :‍)

ஏன் போக‌ வேண்டும் என்பதை நான் சொல்ல‌ முடியாது. போகச் சொல்லி நான் சொல்லவில்லை. :‍) உங்க‌ டாக்டர் சொன்ன‌ அட்வைஸ் இது, அப்படித்தானே! //mobility, count light ta kamiya iruku// என்றும் சொல்றீங்க‌. எந்த‌ அளவு லைட் என்கிறது உங்கள் டாக்டருக்குத் தெரியும். உங்கள் மருத்துவரால் உங்களுக்கு ஆலோசனை சொல்ல‌ முடியும்; முடிவு எடுப்பது நீங்களும் உங்கள் கணவரும் தான்.

இப்போதெல்லாம் இரண்டு ஓவரியும் ஒழுங்காக‌ இருப்பவர்களுக்கே கர்ப்பம் தாமதமாகிறது இல்லையா? உங்களுக்கு அடைப்பை நீக்க‌ என்ன‌ சிகிச்சை நடந்தது என்று நீங்கள் சொல்லவில்லை. ஒரு பக்கத்து ஓவரி மட்டும் தொழிற்பட்டால் கர்ப்பத்திற்கு 50% சந்தர்ப்பம் இருக்கிறது தான். ஆனால் கர்ப்பம் தாமதமாகுவதற்கு இரண்டு மடங்கு சந்தர்ப்பம் இருக்கிறது. ஒன்றுவிட்டு ஒரு மாதம் தான் நீங்கள் கர்ப்பமாகலாம். பீரியட்ஸ் ஒழுங்காக‌ வந்தாலும் கர்ப்பத்திற்கு உகந்த நாட்கள் இரண்டு சைக்கிளுக்கு ஒரு முறைதான் அமையும்.

//double or triples form aaga chance iruku nu solraale.// உங்கள் டாக்டரிடம் இதையெல்லாம் கேட்கவில்லையா நீங்கள்? ஒவ்வொரு தடவையும் டாக்டரிடம் போவதற்கு நேரமும் பணமும் செலவளிக்கிறீர்கள். இது உங்கள் உடல் / வாழ்க்கை. மனதில் இருக்கும் சந்தேகங்களை டாக்டரிடம் கேட்டுத் தெளிவு பெற‌ உங்களுக்கு உரிமை இருக்கிறது. அடுத்த‌ தடவை போகும் போது எதுவானாலும் தயங்காமல் கேளுங்கள்.

'சான்ஸ்' என்கிற‌ வார்த்தையின் அர்த்தம் என்ன‌! சிகிச்சைக்குப் போனால் //double or triples form aaga chance iruku// என்று 'சிங்கிள்' கிடைக்கும் சான்சைப் பின் போடப் போகிறீர்களா? இரண்டு அல்லது மூன்று முளையங்கள் வளர‌ ஆரம்பித்தாலும் எல்லோருக்கும் இரண்டு / மூன்று குழந்தைகள் பிறப்பதில்லை. குழந்தை இல்லயென்றுதானே இப்போது யோசிக்கிறீர்கள். அப்படிப் பிறந்தால்... அதை பாஸிடிவ்வாக‌ எடுக்க‌ முடியாதா? உங்கள் வயது... காத்திருக்க‌ ஏற்ற‌ வயதா இல்லையாவென்பது எனக்குத் தெரியாது. ஆறுதலாக‌ இன்னும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். இன்னொரு விடயம்... ஐயூஐ கூட‌... எல்லோருமே முதலாவது சிகிச்சையில் சட்டென்று கர்ப்பமாவது இல்லை. இங்கு தோழிகள் பேசுவதைக் கவனித்திருந்தால் புரியும்.

//apaiya..evlo amount aagum...?// இது நீங்கள் வசிக்கும் நாட்டிலிருப்பவர் பதில் சொல்ல‌ வேண்டிய கேள்வி. எங்கே இருக்கிறீங்க‌ என்று சொன்னால் வேறு யாராவது பதில் சொல்வாங்க‌. உங்க‌ டாக்டரிடம் கேட்டுப் பார்க்கலாமே!

மீனா வெங்கடேஷ்

//enna reason ah irukum// ரீசன் நிறைய‌ இருக்கு. இது இல்லாவிட்டால் அது இல்லாவிட்டால் இரண்டு மூன்று ரீசன் என்று கெஸ் பண்ணிச் சொல்லலாம். நீங்க‌ இப்ப‌ யோசிக்கிறதை விட‌ அதிகம் யோசிக்க‌ ஆரம்பிப்பீங்க‌. :‍)

//nan inum doctor kita poi check panala.// அதை முதலில் செய்யுங்க‌, அனேகம் சரியான‌ பதில் கிடைக்கும். //31 day cycle agiduchu ithu normal thana.// ஆம், பிரச்சினை இல்லை. //nan doctor ta polama// போகலாம்.

Umma mam

Oru tube iruntha conceive avarathu ku chance two months ku one time than irukuma mam?.

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

உம்மா!!

கிஸ்லாம் கொடுக்கிறீங்க‌. ;)))))) பதிலுக்கு நானும் ஒரு உம்மா கொடுக்கிறேன். ;))

ஆமாம், //Oru tube iruntha conceive avarathu ku chance two months ku one time than irukum// இடமுள்ளதும் வலமுள்ளதும் முறை வைத்துக் கொண்டு முட்டைகளை வெளியேற்றும். நீங்கள் அபூர்வமாக‌ ஒரே ஓவரியிலிருந்து ஒவ்வொரு மாதமும் முட்டைகளை வெளியேற்றுபவராக‌ இருந்தால் அது வேறு. அப்படி ஆகாது என்பது இல்லை. ஆனால் அது வெகு அபூர்வம்.

Imma mam

Sorry mam. Imma nu than type panen .But automatic ah umma nu change agiduchu . Sorry sorry sorry mam.
Yenaku ectopic agi 5 months complete agirchu. 2 ovary 1 tube than iruku mam.intha month than conceive aga chance iruku nu yeppadi guess panikalam mudiuma mam?

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

ஊகம்

//guess panikalam mudiuma// ஒரு தடவை செக் பண்ணினா, அடுத்த‌ மாசம் அடுத்த‌ பக்கம் என்று கெஸ் பண்ணலாம். உங்களுக்கு எந்தப் பக்கம் ட்யூப் நன்றாக‌ இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

இது ஊகம் மட்டும் தான். மருத்துவரிடம் போய் செக் பண்ணுவது போல‌ இதை நினைத்துக் கொள்ள‌ வேண்டாம்.
~~~~~~~~

தூங்கப் போகிறேன். இனி இமாவுக்கு நல்லிரவு. :‍)

Imma mam

Ok bye mam

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...