ஆண் குழந்தை பெயர்கள்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு அறுசுவை வந்துள்ளேன் தோழிகளின் நலம் அறிய ஆவல்,எனக்கு 13.1.18 அன்று இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பெயர் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அ. வரிசையில் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் கூறுங்கள் தோழிகளே...

எனக்கு முதல் குழந்தை அறுவைச்சிகிச்சை தான்.cervix open aagala nu operate pannitanga.அதன் பிறகு சொல்ல முடியாத அளவு வேதனை.இந்த குழந்தை சுகப்பிரவம் ஆக விருப்பம்.நடக்கமானு தெரியல

வாய்ப்பு இருக்கு டாக்டர் கிட்ட கேளுங்க

//cervix open aagala nu operate pannitanga.அதன் பிறகு சொல்ல முடியாத அளவு வேதனை.// எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள் தங்கம். நீங்கள் சொல்கிற‌ சொல்ல‌ முடியாத‌ வேதனை... அதிகம் இல்லை என்று தெரிகிறது. அந்தவரையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி. நல்லது செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

//அவர்கள் ஒரு தேதி கொடுத்து அந்த தேதியில் பிறக்கவில்லை என்றால் உடனே அறுவை சிகிச்சைசெய்து விடுகிறார்கள்..
இந்த நிலை மாற வேண்டும்...// அந்தத் தேதி எல்லாம் ஒரு ஊகம்தான் சகோதரி. பிறக்கவில்லை என்றால் எப்போ வேண்டுமானாலும் தானாகப் பிறக்கட்டும் என்று பொறுப்பு எடுத்த‌ மருத்துவர் விட‌ முடியாது. அவர் கையில் தாய், குழந்தை இருவர் உயிரும் இருக்கிறது. ஏதாவது தப்பானால்! சொல்வது சுலபம். அவர்கள் இடத்திலிருந்து பார்த்தால் சிரமம் புரியும்.

நாம் எது நடந்தாலும் மருத்துவரைக் குறை சொல்வோம். சத்திர‌ சிகிச்சையின் பின் தாயும் சேயும் நலமென்றால்... எப்படி, 'விட்டுப் பார்த்திருக்கலாம். பணத்திற்காகச் செய்துவிட்டார்கள்,' என்கிறோமோ அதே போல... தானாகப் பிறக்கட்டும் என்று விட்டிருந்து, தாய், சேய் இருவரில் ஒருவருக்குப் பிரச்சினை ஆகியிருந்தால் கூட‌, 'இவர்கள் என்ன‌ மருத்துவர்கள்! இப்படி ஆகும் என்று முன்பே தெரிந்திராதா! சரியான‌ நேரத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தார்களானால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாமே!' என்றும் சொல்லுவோம். (நான் மருத்துவர் இல்லை.) பிரச்சினை ஆகியும் சிரமப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தாலும், தொடர்ந்து வரும் சின்னச் சின்னச் சிரமங்களுக்கெல்லாம் மருத்துவரைக் குறை சொல்லாமலிரோம். :) நான் இன்று உயிரோடு இருக்க‌ 32 வருடங்கள் முன்பு ஒரு மருத்துவர் எத்தனை பிரயாசை எடுத்தார் என்பது என் குடும்பத்தாருக்குத் தெரியும். இன்றும் தவிர்க்க‌ இயலாமல் அந்தப் பேச்சு வந்தால் மற்றவர்கள் அபிப்பிராயம் அந்த‌ மருத்துவருக்கு எதிராகவே இருக்கிறது. ;(

‍- இமா க்றிஸ்

உங்களுக்கு இரண்டாவது குழந்தைக்கு சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்தார்களா?

இல்லை நான் பார்த்த மருத்துவமனையில் ரிஸ்க் எடுக்க முடியாது என ஆபரேசன் தான் பன்னாங்க

சின்னவருக்கு அழகான பெயர் சொல்லுங்க இமா அம்மா

அறுவைசிகிச்சை முடிந்து எத்தனாவது நாள் வீட்டிற்கு அனுப்புநாங்க.3 days la elunthu utkara solitanga la.

எனக்கு இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை தான். முதல் குழந்தைக்கு எதுவும் பிரச்சனை இல்லை.இரண்டாவது குழந்தை பிறந்து வீட்டிற்கு வரவே 2 மாதங்கள் ஆனது.அதே மருத்துவர் தான். எனக்கு தையல் இன்பெக்சன் ஆகி விட்டது.என் வீட்டில் அனைவரும் மருத்துவர் மீது குறை சொல்கிறார்கள்.ஆனால் எனக்கு மருத்துவர் மீது எந்த வருத்தமும் இல்லை.அவர்கள் எல்லாமே சரியாக தான் செய்யும் போதும் சில முறை தவறி விடுகின்றது.

ஊப்ஸ்! உணர்ச்சிவசப்பட்டு த்ரெட் தலைப்பைப் பார்க்காம‌ மருத்துவத்தைப் பற்றிப் பேசிட்டேனோ! ;)) தப்பு தான். :‍) மன்னிச்சுக்கோங்க‌.

//அ. வரிசையில் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்// அழகன்!! ;) மம்முட்டி மாதிரி ஃபேமஸா வருவார். :‍)

:இருங்க‌, நீங்க‌ சொன்ன‌ கண்டிஷன்லாம் படிச்சுட்டு வரேன்.

‍- இமா க்றிஸ்

உலகத்துலயே மிக‌ முக்கியமான‌ ஆள் பிறந்த‌ அதே 13 / 01 ல‌ பிறந்திருக்கார். என் வாழ்த்துக்கள்.

எனக்கு மிகவும் பிடித்த‌ பெயர் அருண். நீங்க‌ ஏற்கனவே மூத்தவருக்கு அருணேஷ் என்று வைச்சிருக்கீங்க‌. அவனீஷ்! கொஞ்சம் அருணேஷுக்கு மாட்சிங்கா இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்